Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
சமையலறையில் இருக்கும் இந்த பொருட்கள் உங்களுக்கே தெரியாமல் புற்றுநோய் வரும் ஆபத்தை அதிகரிக்குமாம்...!
புற்றுநோய் அபாயத்தைத் தடுக்க புகைப்பிடித்தல், போதை மருந்துகள் மற்றும் பதப்டுத்தப்பட்ட இறைச்சிகள் போன்றவற்றைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் நம் சமையலறையில் உள்ள சில பொருட்களும், நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் சில பொருட்களும் புற்றுநோய் ஆபத்தை அதிகரிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
சமையலறை இந்த வகையான நச்சு இரசாயனங்கள் வெளிப்படும் ஒரு மோசமான இடமாகும். நம் சமையலறை பொருட்களில் இருக்கும் இரசாயனங்கள் சில புற்றுநோய் மற்றும் இதய நோய் மற்றும் உடல் பருமன் போன்ற ஆபத்தான நிலைகளுக்கு வழிவகுக்கும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். நீரிழிவு, டிமென்ஷியா மற்றும் தசை வலிமை இழப்பு போன்ற வயதானவர்களுக்கு ஏற்படும் நோய்களின் ஆபத்தையும் அவை அதிகரிக்கின்றன.

ஆபத்தான இரசாயனங்கள்
பிஸ்பெனால்கள் மற்றும் பித்தலேட்டுகள் என்பவை இரண்டு பொதுவான ஆபத்தான இரசாயனங்கள் ஆகும், அவை பொதுவாக கடினமான பிளாஸ்டிக்குகளில் காணப்படுகின்றன. இவை சேமிப்பு கொள்கலன்கள், சமையல் பாத்திரங்கள் மற்றும் பழைய தண்ணீர் பாட்டில்கள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகின்றன.
மற்ற நச்சுகள் பெரும்பாலும் சேமிப்பு கலன்கள், பாத்திரங்கள் மற்றும் பான்கள் மற்றும் கிளீனர்கள் மற்றும் சோப்புகளில் கூட காணப்படுகின்றன. நீங்கள் மைக்ரோவேவ் ஓவனில் இதனை பயன்படுத்தும் போது பிரச்சனை அதிகரிக்கிறது, ஏனெனில் வெப்பம் பிளாஸ்டிக் சிதைந்து இரசாயனங்கள் வெளியேறுகிறது. சமையலறையில் இருக்கும் என்னென்ன பொருட்கள் புற்றுநோயை ஏற்படுத்தும் என்று மேற்கொண்டு பார்க்கலாம்.
சேமிக்கும் கலன்கள்
உங்கள் பிளாஸ்டிக் கொள்கலன்களை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக கண்ணாடி அல்லது சிலிக்கான் சேமிக்கும் கலன்களை தேர்வுசெய்ய வேண்டும். குளிர்சாதனப் பெட்டி சேமிப்பிற்காக பிளாஸ்டிக்கைப் பயன்படுத்த விரும்பினால், மைக்ரோவேவில் சூடாக்கும் முன் உணவை கண்ணாடி கிண்ணங்களுக்கு மாற்றுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
அலுமினியம் மற்றும் பிளாஸ்டிக் பைகள்
உணவை சமைக்கும்போதோ அல்லது மீண்டும் சூடுபடுத்தும்போதோ பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக்கூடாது என்பது பொதுவான கருத்து, ஆனால் அலுமினியமும் சிறந்த தேர்வாக இருக்காது. அலுமினியம் செரிமானத்தை பாதிக்கலாம், இது மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் போன்ற முக்கிய தாதுக்களை உறிஞ்சுவதைத் தடுக்கிறது, மேலும் ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தை அதிகரிக்கிறது.
சில பாத்திரங்கள்
பிஸ்பெனால் தவிர, சில கறுப்பு பிளாஸ்டிக் சமையலறை பாத்திரங்களான பெரிய கரண்டிகளில் ரிடார்டன்ட்கள் உள்ளன. துருப்பிடிக்காத எஃகு, மரம் அல்லது மூங்கில் ஆகியவற்றால் செய்யப்பட்டக் கரண்டிகள் இதற்கான பாதுகாப்பான மாற்றாகும்.
நான்ஸ்டிக் பாத்திரங்கள்
பெரும்பாலான நான்ஸ்டிக் பாத்திரங்களில் பாலிடெட்ராபுளோரோஎத்திலீன் அல்லது டெஃப்ளான் பூசப்பட்டிருக்கும். இது மிகவும் ஆபத்தான இரசாயனமாகும். இதில் கீறல் விழும்போது அது ஆபத்தானதாக மாறுகிறது. இருப்பினும், இப்போது பெரும்பாலான நான்ஸ்டிக் பாத்திரங்களில் டெஃப்ளான் எனும் இரசாயனம் பயன்படுத்தப்படுகிறது, இது பொதுவாக பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. உங்கள் பான் கீறப்படாமல் இருக்கும் வரை, நீங்கள் அதை அதிக வெப்பநிலையில் பயன்படுத்த வேண்டாம்.
சோப்பு மற்றும் க்ளீனர்கள்
கை கழுவும் சோப்புகளில் பித்தலேட்டுகள், பாரபென்கள் மற்றும் சல்பேட்டுகள் இருக்கலாம், அதே சமயம் வீட்டை சுத்தப்படுத்தும் பொருட்களில் கரைப்பான்கள் இருக்கலாம், அவை புற்றுநோயை ஏற்படுத்தும். எனவே நீங்கள் சொந்தமாக சோப்பு தயாரிக்க விரும்பினால், வெள்ளை வினிகர், பேக்கிங் சோடா மற்றும் தேயிலை மர எண்ணெய் ஆகியவற்றைக் கலந்து சமையலறையை சுத்தம் செய்யலாம்.



Click it and Unblock the Notifications


