Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
துணி துவைக்கும் போது இந்த பொருட்களை பயன்படுத்தினால் மோசமான கறை கூட நீங்கி துணி புதியது போல மாறுமாம்...!
துணிகளில் உள்ள கறைகளை நீக்குவது என்பது மிகவும் சவாலான ஒரு காரியமாகும். ஆனால் அனைத்து கறைகளையும் வாஷிங் மிஷினில் நீக்க முடியுமா என்றால் நிச்சயம் இல்லை என்றுதான் கூற வேண்டும். இந்த சூழலில் சமையலறையில் உள்ள சில பொருட்கள் உங்கள் துணிகளில் உள்ள கறைகளை நீக்க உதவும்.
சில பொதுவான வீட்டுப் பொருட்களை இயற்கையான சலவை கறை நீக்கிகளாக மாற்றலாம். சில கடுமையான இரசாயனங்களை நீக்குவதற்கு அவை உதவும். மேலும் அவை பெரும்பாலும் விலை குறைவாக இருக்குமென்பது மிகவும் முக்கியமானது.

துணிகளில் உள்ள கறைகள் மற்றும் நாற்றங்களை நீக்கி உங்கள் உடையின் நிறத்தை பாதுகாத்து துணியை புதியது போல வைத்திருக்க உதவும் சில பொருட்கள் உள்ளன. அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
பேக்கிங் சோடா
சமையலறையில் இருக்கும் பேக்கிங் சோடா சிறந்த கறை நீக்கிகளில் ஒன்றாகும் மற்றும் விலையும் மிகவும் குறைவானது. உங்கள் ஆடைகள் புதிய வாசனையுடன் இருக்க மற்றும் மற்றும் குழந்தைகளின் ஆடைகளில் பயன்படுத்தவும் பாதுகாப்பானது. பேக்கிங் சோடா சோப்பின் செயல்திறனை அதிகரிக்கவும், துணிகளை மென்மையாக்கவும் மற்றும் வாஷிங் மிஷினின் சுமைகளை குறைக்கவும் உதவுகிறது.
எலுமிச்சைச்சாறு
புதிதாக பிழியப்பட்ட எலுமிச்சைச்சாறு அசிட்டிக் அமிலத்தின் காரணமாக துணிகளில் இயற்கையான ப்ளீச்சிங் விளைவைக் கொண்டுள்ளது. இது நிரந்தர நிறமாற்றத்தை ஏற்படுத்தும் முன் அதனை ஆடையில் இருந்து அகற்றி விட வேண்டும். இருப்பினும், மஞ்சள் கறை அல்லது துரு கறைகளை அகற்ற இது சிறப்பாக உதவும் மற்றும் வெள்ளை நிற துணியில் உள்ள கறைகளை நீக்க இதனை தாராளமாக பயன்படுத்தலாம்.
வெள்ளை வினிகர்
காய்ச்சி வடிகட்டிய வெள்ளை வினிகர் கறைகளை நீக்க்குவதில் பல அதிசயங்களைச் செய்யும். இது மலிவானது, துணிகளில் மென்மையானது மற்றும் குளோரின் ப்ளீச் மற்றும் துணி மென்மைப்படுத்திகளை விட பாதுகாப்பானது. ஆப்பிள் சைடர் அல்லது பிற வினிகர்களுக்கு பதிலாக வெள்ளை வினிகரை எப்போதும் தேர்வு செய்யலாம், ஏனெனில் இது துணியின் உண்மையான நிறத்தை சேதப்படுத்தாது.
வெள்ளை வினிகர் மஞ்சள் கறை, வியர்வை கறை மற்றும் துர்நாற்றத்தை நீக்குவதற்கும், பூஞ்சை காளான் கறைகளை அகற்றுவதற்கும், உங்கள் ஆடைகளை பிரகாசமாக்குவதற்கும் முக்கியமாகும்.
ஹைட்ரஜன் பெராக்சைடு
நீங்கள் துணிகளை வெண்மையாக்க வேண்டியிருக்கும் போது, மிகவும் கடுமையான குளோரின் ப்ளீச்சிற்கு ஒரு நல்ல மாற்றாக ஹைட்ரஜன் பெராக்சைடை பயன்படுத்தலாம். ஹைட்ரஜன் பெராக்சைடு (H2O2) ஒரு ப்ளீச்சாகப் பயன்படுத்தக்கூடிய ஒரு ஆக்ஸிஜனேற்ற பொருளாகும். மருந்துக் கடைகளில் முதலுதவி கிருமிநாசினியாக விற்கப்படும் 3% கரைசல் துணியை துவைப்பதற்கு சிறந்த தேர்வாகும். ஹைட்ரஜன் பெராக்சைடு நீர் மற்றும் ஆக்ஸிஜனாக உடைந்து குளோரின் ப்ளீச்சிற்கு மிகவும் பாதுகாப்பான மாற்றாகும்.
பவுடர்
முகத்திற்கு பூசும் பவுடர், பேபி பவுடர், சமையலறை சோள மாவு அல்லது சாக்பீஸ் போன்றவை எண்ணெய் கறைகளை உறிஞ்சுவதற்கு உதவும் அற்புதமான பொருட்களாகும். நீங்கள் உடனடியாக துணியில் எண்ணெய் அல்லது கிரீஸ் கறை பட்டால் இந்த பொருட்களை பயன்படுத்தி உடனடியாக நீக்கலாம். இவற்றில் ஒன்றை எண்ணெய் கறையின் மீது பூசி 10 நிமிடம் ஊற விடவும். பின்னர் வழக்கம்போல துவைத்தால் கறைகளை நீக்கலாம்.
உப்பு
துரு மற்றும் ஆல்கஹால் கறைகளை அகற்றுவதற்கும், அவை ஆடையின் அமைப்பை சிதைப்பதற்கு முன்பு திரவ கறைகளை உறிஞ்சுவதற்கும், உப்பை பயன்படுத்தலாம். உங்கள் ஆடையில் ஆல்கஹால் கறையிருந்தால் அதனை நீக்குவதற்கு உப்பைப் பயன்படுத்துங்கள். அது திரவத்தை உறிஞ்சும் வரை காத்திருக்கவும் மற்றும் அதன்பின் ஆடைகளை துவைக்கவும். நீங்கள் சரியாக துவைக்கவில்லை கழுவவில்லை என்றால், உப்பு உங்கள் துணி மீது வெள்ளை கறைகளை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications

