Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
நீங்க வீட்ல செய்யும் தயிர் சாதம் அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப இந்த டிப்ஸ்களை பாலோ பண்ணுங்க...!
தயிர் சாதம் என்றாலே அதன் அபார சுவையும், வழவழப்புத் தன்மையும்தான் முதலில் நினைவிற்கு வரும். எவ்வளவு சுவையான ஆடம்பர விருந்தாக இருந்தாலும் கடைசியாக கொஞ்சம் தயிர் சாப்பிட்டால்தான் அந்த விருந்து நிறைவாக இருக்கும். சுவையானது என்பதையும் தாண்டி தயிர் சாதம் மிகவும் ஆரோக்கியமானதும் கூட.
தயிர் சாதம் வீட்டிலேயே எளிதில் செய்யக் கூடியதாக இருந்தாலும் கோவிலிலோ அல்லது ஹோட்டல்களிலோ சாப்பிடும் தயிர் சாதம் எப்போதும் மிகவும் சுவையானதாக இருக்கும். அதற்கு காரணம் அவர்கள் பயன்படுத்தும் பொருட்களும் வேறுசில எளிய தந்திரங்களும்தான். நீங்கள் வீட்டில் செய்யும் தயிர் சாதத்தை அமிர்தம் போல மாற்ற உதவும் வழிகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

அரிசியின் தரம் மிகவும் முக்கியம்
அரிசி தரமானதாக இருந்தால் மட்டுமே உங்கள் தயிர் சாதம் நன்றாக இருக்கும். அரிசி தயிர் சாதத்தின் முதன்மை மூலப்பொருள், எனவே அதன் தரத்தில் எப்போதும் அலட்சியம் கூடாது. தரமான அரிசியை தேர்ந்தெடுப்பது போலவே, அரிசியை நன்கு சமைக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டியது அவசியமாகும் , இல்லையெனில் நீங்கள் விரும்பிய அமைப்பில் தயிர் சாதம் இருக்காது.
ப்ரெஷான தயிரைப் பயன்படுத்த வேண்டும்
தயிர் சாதத்தின் சுவையே அதில் சேர்க்கப்படும் தயிரில்தான் இருக்கிறது. நாம் சேர்க்கும் தயிர்தான் சுவையையும், அமைப்பையும் அனைத்திற்கும் மேலாக ஆரோக்கிய நன்மைகளையும் அளிக்கிறது. எனவே அது எப்போதும் அதிகம் புளிக்காத ப்ரெஷான தயிராக இருக்க வேண்டும், வீட்டிலேயே செய்யப்பட்ட தயிராக இருந்தால் கூடுதல் நல்லது. அதேசமயம் நீங்கள் சாதத்தில் தயிர் சேர்க்கும் நேரத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். சமைத்த பிறகு சாதத்தை நன்கு ஆறவைத்து, அதன்பின் சேர்ப்பது சுவையை அதிகரிக்கும்.
சிறிதளவு பால் சேர்க்க வேண்டும்
உங்கள் தயிர் சாதம் ஹோட்டல்களில் பரிமாறப்படும் தயிர் சாதம் போல மென்மையாகவும், க்ரீமியான அமைப்புடனும் இருக்க சிறிது பால் சேர்ப்பது அவசியம். தயிர் சேர்த்து சாதத்தை நன்கு கிளறியவுடன் அதில் பாலை சேர்க்க வேண்டும்.
சில கூடுதல் பொருட்களை முயற்சிக்கவும்
தயிர் சாதம் என்பது வெறும் தயிர் மற்றும் சாதம்தான் என்று நினைப்பது தவறாகும். சில கூடுதல் பொருட்களை தயிர் சாதத்தில் சேர்ப்பது அதன் சுவையை பலமடங்கு அதிகரிக்கும். உங்கள் தயிர் சாதத்தில் சிலவற்றை பரிசோதனை செய்து சேர்க்க தயங்காதீர்கள். வெள்ளரிக்காய், கேரட், மாம்பழம் மற்றும் மாதுளை போன்றவற்றை நீங்கள் சேர்ப்பதன் மூலம் அதன் சுவையை அதிகரிக்கலாம். அவ்வாறு செய்வதன் மூலம், உங்கள் தயிர் சாதத்தின் சுவை மற்றும் அமைப்பு மேம்படும்.
தாளிக்க மறந்து விடாதீர்கள்
தயிர் சாதத்தை தாளிப்பதுதான் அதன் சுவையை நீங்கள் அதிகரிக்க செய்ய வேண்டிய அடிப்படை விஷயமாகும். நீங்கள் தயிர் சாதத்தை தாளிக்க தாராளமாக பொருட்களை சேர்க்கலாம். இதைச் செய்ய, கடுகு, கறிவேப்பிலை, உளுத்தம் பருப்பு, இஞ்சி மற்றும் முந்திரி ஆகியவற்றைக் கொண்டு எண்ணெயைத் தாளிக்க வேண்டும். இந்த தாளிப்பு சாதாரண தயிர் சாதத்திற்கு கூடுதல் சேவையை சேர்க்கிறது, அதற்கு தனித்துவமான சுவையை அளிக்கிறது. தாளிப்பு முடிந்ததும் கொத்தமல்லியால் அலங்கரித்து, உருளைக்கிழங்கு பொரியல், ஊறுகாய் போன்ற சரியான சைடிஷ்களுடன் சாப்பிட்டு மகிழுங்கள்.



Click it and Unblock the Notifications
