Latest Updates
-
அக்டோபர் 19, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நவம்பர் 12 வரை இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஒரே இரவில் பளிச்சென்று ஜொலிக்கணுமா? அப்ப நைட் டைம்-ல இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சூரியன் துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளதால் நவம்பர் மாதம் வரை ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் -
5 முட்டை இருந்தா இந்த ஆப்கானி முட்டை மசாலாவை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடற டேஸ்ட்ல இருக்கும் -
ஆயுத பூஜைக்கு இப்படி சுண்டல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப வெளிப்டையானவர்களாக இருப்பார்களாம் - இவங்க வாயில பொய் வரது ரொம்ப கஷ்டம் -
Ayudha Pooja 2026: ஆயுத பூஜை ஏன் கொண்டாடப்படுகிறது? பூஜை செய்ய உகந்த நேரம் எது? -
வெள்ளை நிற ஆடையில் உள்ள விடாப்பிடியான கறைகளை நீக்கும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க -
25 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான காபி - இதன் சுவை எப்படி இருக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
நீங்க வாங்குன பாதாம் உண்மையில் தரமானதானு தெரிஞ்சிக்கணுமா? இப்படி சோதிச்சு பாருங்க...!
நிபுணர்கள் பரிந்துரைக்கும் நட்ஸ் வகைகளில் எப்போதும் முதலிடத்தில் இருப்பது பாதம்தான். தினமும் சில பாதாம் பருப்புகளை சாப்பிடுவது உங்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பது நாம் அனைவரும் அறிந்ததுதான்.
பெரும்பாலான இந்திய குடும்பங்களில் தினமும் ஒரு சில பாதாம் பருப்புகளை சாப்பிடுவது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், அறிவாற்றல் திறன்களை அதிகரிக்கவும் சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஆனால் நீங்கள் தினமும் உண்ணும் பாதாம் தூய்மையானதா என்று எப்போதாவது நீங்கள் சிந்தித்து இருக்கிறீர்களா?

பாதாம் பருப்பின் தரத்தை சோதிக்க நீங்கள் அதிக சிரமப்பட வேண்டிய அவசியமில்லை. பாதாம் பருப்பின் தரம் மற்றும் தூய்மையை வீட்டிலேயே சரிபார்க்க சில எளிய குறிப்புகள் உள்ளன. அவற்றை இந்த பதிவில் தெரிந்து கொல்லலாம்.
தோற்றம்
பாதாம் பருப்பின் தூய்மை மற்றும் தரத்தை சரிபார்க்க முதல் படி அதன் தோற்றம் மற்றும் நிறம் மற்றும் அமைப்பைப் பார்ப்பது. நல்ல தரமான பாதாம் ஒரு நல்ல பழுப்பு மற்றும் புள்ளி குறைந்த அமைப்பில் இருக்கும். குறிப்பிடத்தக்க நிறமாற்றத்தை நீங்கள் கவனித்தால் அல்லது பாதாம் அதிக கருமையாகத் தோன்றினால், அது தரமற்ற பாதாமின் அறிகுறியாக இருக்கலாம். அப்படிப்பட்ட பாதாமை வாங்காதீர்கள்.
சுவை மற்றும் வாசனை
பாதாம் பொதுவாக இனிப்பு சுவை மற்றும் மொறுமொறுப்பான அமைப்பைக் கொண்டிருக்கும். ருசியில் கசப்பு இருந்தால், பாதாமின் வெளிப்புற அடுக்கில் இயற்கையான நச்சுப்பொருளான பைடிக் அமிலம் போன்ற சில இரசாயனங்கள் இருப்பதைக் குறிப்பதால், அப்படிப்பட்ட பாதாம் பருப்பை நிராகரிப்பது நல்லது. பாதாம் பருப்பு எண்ணெய் மணம் அதிகமாக இருந்தால், அது கெட்டுப்போனதைக் குறிக்கலாம்.
மிதவை சோதனை
பாதாமை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் மூழ்க வைக்கவும். நல்ல தரமான பாதாம் கீழே மூழ்க வேண்டும், ஏனெனில் அவை தண்ணீரை விட அடர்த்தியாக இருக்கும். அவை மிதந்தால், அவை கலவாதியாகிய அல்லது கெட்டுபோன பாதாமாக இருக்கலாம்.
பேக்கிங்
புகழ்பெற்ற கடைகளில் இருந்து பாதாம் பருப்புகளை வாங்கினாலும், பேக்கேஜிங்கில் ஏதேனும் சேதம் அல்லது தவறு உள்ளதா எனப் பார்க்கவும். பாதாமின் புத்துணர்ச்சியைத் தக்கவைக்க குளிர்ந்த அல்லது உலர்ந்த இடத்தில் சேமிக்கப்படுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
முழு பாதாமாக வாங்கவும்
அரைத்த அல்லது உடைந்த பாதாம் பருப்புடன் ஒப்பிடும்போது முழு பாதாம் பருப்பில் கலப்படம் செய்யப்படுவது குறைவு. அவற்றை முழுவதுமாக வாங்குவது, பருப்புகளை எளிதாக ஆய்வு செய்ய உங்களை அனுமதிக்கிறது. எனவே எப்பேதும் முழு பாதாமாக வாங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
பாதாமின் அளவு
பாதாமை அளவை கவனமாக பாருங்கள். அவற்றின் அளவு வேறுபட்டால், பாதாமில் கலப்படம் செய்யப்பட்டதாகக் கருதுங்கள். இதுபோன்ற சூழலில் தரமான பாதாமுடன் தரமற்ற பாதாம் கலந்து விற்கப்படுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எனவே பாதாமை நன்றாக சோதித்து அதன் பிறகு மட்டும் வாங்கவும்.



Click it and Unblock the Notifications

