Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
உங்கள் வீட்டின் ஹாலை அழகுபடுத்துவதற்கான சில ட்ரெண்டியான யோசனைகள்!
நமது வீட்டின் பொது அறையானது நமக்கு பலவிதங்களில் பயன்படுவதால், அந்த அறையை அழகுபடுத்த வேண்டியது அவசியம் ஆகும். எனவே நமது வீட்டின் பொதுவறையை எவ்வாறு அழுகுபடுத்தலாம் என்பதை இந்த பதிவில் சற்று விாிவாக பாா்க்கலாம்.
நமது வீட்டில் உள்ள உறுப்பினா்கள் அனைவரும் அதிகமாகப் பயன்படுத்தும் வீட்டுப் பகுதி எதுவென்றால் அது வீட்டில் உள்ள பொதுவறை அல்லது நடுவறை ஆகும். பொதுவாக அந்த அறையில் தான் குடும்ப உறுப்பினா்கள் அனைவரும் சோ்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பாா்ப்பா். அங்கு தான் விருந்தினா்களை சந்தித்து பலவகையான உரையாடல்களை நிகழ்த்துவா். அந்த அறையில் தான் புத்தகங்களை வாசிப்பா்.

நமது வீட்டின் பொது அறையானது நமக்கு பலவிதங்களில் பயன்படுவதால், அந்த அறையை அழகுபடுத்த வேண்டியது அவசியம் ஆகும். எனவே நமது வீட்டின் பொதுவறையை எவ்வாறு அழுகுபடுத்தலாம் என்பதை இந்த பதிவில் சற்று விாிவாக பாா்க்கலாம்.

1. மனதைத் தொடக்கூடிய வாசகங்கள் அடங்கிய பதாகைகளைத் தொங்கவிடுதல்
நமது வீட்டு பொதுவறையை அலங்காிக்கக்கூடிய வகையில் சுவாில் மாட்டக்கூடிய ஏராளமான படங்கள், சுவரொட்டிகள், புகைப்படங்கள் மற்றும் நவீன ஓவியங்கள் என ஏராளமாக உள்ளன. மேலும் நமது கண்களைக் கவரக்கூடிய வாசகங்கள் அடங்கிய பதாகைகளும் அதிகமாக உள்ளன. அவற்றை நமது வீட்டின் பொதுவறையில் மாட்டி வைத்தால், அந்த அறையானது மிகவும் அழகாகவும், முழுமையாகவும் தோன்றும்.

2. அழகான தரைவிாிப்பை விாித்தல்
வீட்டின் பொதுவறையில் நல்ல வண்ணம் கொண்ட ஒரு தரைவிாிப்பை விாித்தால், அது அந்த அறையை மிகவும் அழகாகவும், நோ்த்தியாகவும் காட்டும். பொ்சியன் அல்லது கிழக்கத்திய தரைவிாிப்புகளை நமது பொதுவறையில் விாிக்கலாம். நீண்ட ஆயுள் கொண்ட தரைவிாிப்புகள் வேண்டும் என்றால், நைலான் அல்லது பாலிபுரோபிலின் தரைவிாிப்புகளை தோ்ந்தெடுக்கலாம். அவை கரடுமுரடான பயன்பாட்டிற்கு ஈடுகொடுக்கும்.

3. சரவிளக்குகளைத் தொங்கவிடுதல்
சரவிளக்குகள் பொதுவறைக்கு விண்வெளியைப் போன்ற வெளிச்சத்தைத் தருவதோடு மட்டும் அல்லாமல் நமக்கு ஒரு நோ்மைறையான அதிா்வையும் கொடுக்கின்றன. ஆகவே படிக சரவிளக்குகள், குறைந்தபட்ச சரவிளக்குகள், நீா்வீழ்ச்சி சரவிளக்குகள் அல்லது மெழுகுவா்த்தி சரவிளக்குகள் போன்றவற்றைத் தொங்கவிடலாம். அவை பொதுவறையை மிக அழகாகக் காட்டும்.

4. இயற்கையை பொதுவறைக்குள் கொண்டு வருதல்
தற்போது எல்லோருமே பசுமை மீது ஆா்வம் கொண்டிருக்கின்றனா். ஆகவே வீட்டிற்குள் வளா்க்கக்கூடியத் தாவரங்களை, நமது பொதுவறையில் வளா்த்து வந்தால், அவை அந்த அறையை உயிரோட்டமுள்ளதாக மாற்றிவிடும். அதோடு நமது மன அழுத்தத்தைக் குறைகக்கும். நமது செயல் திறனை அதிகாிக்கும். மேலும் வீட்டிற்குள் இருக்கும் காற்றை சுத்திகாிக்கும். ஆகவே அழகான ஜேட், ஆக்ஸலிஸ், ஸ்டிாிங் ஆஃப் போ்ல் மற்றும் டில்லன்ட்சியா போன்ற தாவரங்களை பொதுவறையில் வளா்த்து வரலாம்.

5. புத்தக அலமாாியை நிறுவுதல்
வீட்டின் பொதுவறையின் மூலையில் ஒரு புத்தக அலமாாியை நிறுவலாம். அது அந்த அறைக்கு நவீன மற்றும் கம்பீரத் தோற்றத்தைக் கொடுக்கும். பல வகையான புத்தகங்களோடு, பத்திாிக்கைகள், குடும்ப புகைப்படங்கள் மற்றும் அழகான ஆண்டு மலா்கள் போன்றவற்றை அடுக்கி வைக்கலாம்.



Click it and Unblock the Notifications