Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
டூத்பேஸ்ட் பல் விலக்குவதற்கு மட்டுமல்ல? உங்க வீட்டில் இந்த அதிசயங்களை செய்யவும் உதவுமாம்... ட்ரை பண்ணுங்க...!
காலையில் எழுந்ததும் செல்போனிற்குப் பிறகு நாம் தேடுவது பிரஷ் மற்றும் பேஸ்ட்டைதான். அந்த அளவிற்கு டூத் பேஸ்ட் நம் அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. நம் பற்களின் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் பற்பசைகளின் பங்கு மிகவும் முக்கியமானது.
பற்களை வெண்மையாகவும், பளபளப்பாகவும், துவாரங்களைத் தடுக்கவும் பற்பசை முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த நன்மைகளைத் தவிர, ஒரு பற்பசை உங்கள் அன்றாட வாழ்க்கையில் பல அதிசயங்களைச் செய்யும். இந்த கிரீமை தினசரி பல பிரச்சனைகளை சமாளிக்க பயன்படுத்தப்படலாம்.

மருத்துவ நன்மைகள்
கடுமையான எரிச்சலை உண்டாக்கும் தீக்காயங்களில் இருந்து பற்பசை உடனடி நிவாரணத்தை அளிக்கும். உங்கள் தோல் எரியும் போது, முதலில், பாதிக்கப்பட்ட பகுதியை குளிர்ந்த நீரில் வைக்கவும், பின்னர் எரிச்சலில் இருந்து நிவாரணம் பெற பற்பசையை அங்கு தடவவும்.
தடிப்புகளில் இருந்து நிவாரணம் அளிக்கும்
தடிப்புகளால் பாதிக்கப்பட்ட இடத்தில் பற்பசையை மென்மையாக தடவி, 10 நிமிடங்கள் விட்டு, பின்னர் குளிர்ந்த நீரில் கவனமாக கழுவினால் எரிச்சலில் இருந்து உடனடி நிவாரணம் பெறலாம். தடிப்புகளை விரைவில் குணப்படுத்த தினமும் இதனை செய்யலாம்.
பருக்களை குணப்படுத்தும்
முகப்பருக்கள் அனைவரையும் தொந்தரவு செய்யும் ஒரு மோசமான விஷயமாகும், அதிலும் கோடைகாலத்தில் இந்த பிரச்சினை மிகவும் அதிகமாகவே இருக்கும். முகப்பருவை பற்பசை கொண்டு மூடி, இரவு முழுவதும் அப்படியே விட்டுவிடுங்கள், அதன்பின் காலையில் கழுவவும். இதே செயல்முறையை தொடர்ந்து செய்தால் மூன்று நாட்களில் பருக்கள் மறைந்து விடும்.
கூந்தலில் இருந்து தங்கத்தை அகற்றும்
உங்கள் தலைமுடியின் சூயிங் கம் மாட்டிக்கொண்டால் அதை அகற்றுவது வலி நிறைந்த செயல்முறையாகும். அதனை எளிதாக அகற்ற பாதிக்கப்பட்ட பகுதியில் பற்பசையை தடவவும். இதன்மூலம் பற்பசை சூயிங்கம்மில் உள்ள சர்க்கரையை நீக்குகிறது, அதன்பின் சூயிங்கம் தானாகவே உங்கள் தலைமுடியை விட்டு வெளியேறுகிறது.
கைகளை துர்நாற்றமின்றி சுத்தமாக்கும்
வாயில் இருக்கும் துர்நாற்றத்தை விரட்ட பற்பசை உதவும், இதே செயல்முறை கைகளுக்கும் பொருந்தும். அசைவ உணவுகளை சாப்பிட்ட பின் அல்லது வீடு மற்றும் வாகனங்களை சுத்தம் செய்த பின் கைகளில் துர்நாற்றம் இருந்தால் பற்பசை கொண்டு கையை கழுவினால் துர்நாற்றம் நீங்கும்.
கார்பெட் கறைகளை நீக்கும்
உங்கள் கார்ப்பெட்டில் விடாப்பிடியான கறைகள் இருந்தால் அந்த கறையின் மீது பேஸ்ட் தடவி டூத் ப்ரஷ் அல்லது துணி கொண்டு சுத்தம் செய்தால் கறை விரைவில் நீங்கும்.
லிப்ஸ்டிக் கறையை நீக்கும்
கறை படிந்த இடத்தில் ஜெல் அல்லாத பற்பசையை வைத்து, துணியை கடினமாக தேய்த்து, பின்னர் தண்ணீரில் கழவுவது மூலம் விடாப்பிடியான கறையை நீக்கலாம். லிப்ஸ்டிக் / மை / காபி கறை போன்ற விடாப்பிடியான கறைகளை இரண்டு அல்லது மூன்று முறையில் நீக்கலாம்.
நகைகளை சுத்தப்படுத்தும்
நகைகளை சுத்தப்படுத்த பற்பசையை உபயோகிக்கலாம் என்பது பலரும் அறியாத ஒன்றாகும். சிறிது நீரில் பற்பசையை கலந்து அதில் உங்களின் வெள்ளி அல்லது வைர நகைகளைப் போடுவதன் மூலம் அவற்றை நன்றாக சுத்தம் செய்யலாம்.
காரை சுத்தம் செய்யலாம்
உங்கள் காரின் உட்புறம் மற்றும் ஹெட்லைட்கள் அனைத்தையும் பற்பசையால் சிறப்பால் சுத்தம் செய்யலாம். உங்கள் காரின் உட்புறம் மற்றும் ஹெட்லைட்களை பற்பசையை தடவி மென்மையான துணி மூலம் சுத்தம் செய்யலாம். சுத்தம் செய்து முடித்தவுடன், ஈரமான துணியால் அவற்றைத் துடைக்கவும்.



Click it and Unblock the Notifications

