Latest Updates
-
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்...
Year-Ender 2024: இந்த 2024 ஆம் ஆண்டில் மக்களிடையே பிரபலமான டாப் 5 டயட்டுகள்!
Popular Diets In 2024: ஒவ்வொரு ஆண்டும் நாம் ஏதாவது ஒன்றை கற்றுக் கொண்டுதான் இருக்கிறோம். அப்படி கற்பதை நம் வாழ்க்கையுடனும் இணைத்துக் கொள்கிறோம். அது ஃபேஷன், ஆரோக்கியம் என எதுவாக இருந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் இதில் ஏதாவது ஒரு மாற்றத்தைக் காண்கிறோம். அதுவும் தற்போது மக்கள் உடல் பருமனால் அதிகம் அவதிப்படுவதால், ஒவ்வொரு புதிய ஆண்டில் நுழையும் போதும் அந்த ஆண்டில் உடல் எடையைக் குறைக்கும் இலக்கைக் கொண்டு, அதற்காக சில டயட்டுகளையும் மேற்கொள்வார்கள்.
அந்த வகையில் 2024 ஆம் ஆண்டில் உடல் எடையைக் குறைக்க மக்களிடையே பிரபலமான சில டயட்டுகள் உள்ளன. இந்த டயட்டுகள் 2024 ஆம் ஆண்டில் ஏராளமான மக்களால் பின்பற்றப்பட்டு வந்தன. இப்போது உடல் எடையைக் குறைக்க 2024 ஆம் ஆண்டில் மக்களிடையே பிரபலமான டாப் 5 டயட்டுகளைக் காண்போம்.

1. கீட்டோ டயட் (Keto Diet)
கீட்டோ டயட் என்பது பல ஆண்டுகளாக உடல் எடையைக் குறைக்க மக்களால் பின்பற்றப்பட்டு வரும் டயட்டாகும். இந்த டயட் 2024 ஆம் ஆண்டிலும் மக்களிடையே பிரபலமாக இருந்தது. இந்த டயட்டில் கார்போஹைட்ரேட்டுகள் எடுப்பது கட்டுப்படுத்தப்படுகிறது. அதற்கு பதிலாக நல்ல கொழுப்புகள் உட்கொள்ளப்படுகிறது. இந்த கொழுப்புகள் உடலுக்கு ஆற்றலை வழங்குகின்றன. இந்த டயட்டை மேற்கொள்ளும் போது, உடல் சரியாக செயல்படுவதற்கு கார்போஹைட்ரேட்டுகளுக்கு பதிலாக கொழுப்பைப் பயன்படுத்துகிறது.
இதனால் இந்த டயட் உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவுகின்றன. இந்த டயட்டில் கார்போஹைட்ரேட் குறைவான காய்கறிகளுடன், இறைச்சி மற்றும் மீன்களும் எடுக்கப்படும். இது தவிர காலிஃப்ளவர், முட்டைக்கோஸ், ப்ராக்கோலி, குடைளிமகாய், தக்காளி மற்றும் பிற ஸ்டார்ச் மற்றும் கலோரி குறைவான பிற உணவுகளும் உட்கொள்ளப்படுகின்றன.
2. தாவர அடிப்படையிலான டயட் (Plant-based Diet)
உடல் எடையைக் குறைக்க சைவ உணவாளர்களால் அதிகம் பின்பற்றப்பட்ட ஒரு டயட் தான் தாவர அடிப்படையிலான டயட். இந்த டயட்டில் காய்கறிகள் தான் அதிகம் உட்கொள்ளப்படும். இருப்பினும் ஒருவரது உடல் எடை மற்றும் உடல்நலத்தைப் பொறுத்து, சில சமயங்களில் பால் பொருட்களையும் உட்கொள்ளலாம்.
இந்த டயட் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இந்த டயட்டில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் இருப்பதால், இது உடல் எடையைக் குறைக்க உதவுவதோடு, சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால் அளவு போன்றவற்றையும் கட்டுப்படுத்த உதவுகிறது.
3. DASH டயட் (DASH Diet)
DASH டயட் உடல் எடையைக் குறைக்க உதவுவது மட்டுமின்றி, இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்த உதவுகிறது. இந்த டயட்டில் உப்பின் அளவு குறைக்கப்படுகிறது. இந்த டயட் சர்க்கரை நோயாளிகளுக்கும் நல்லது. இந்த டயட்டில் கொழுப்பு நிறைந்த உணவுகளை முழுமையாக தவிர்க்கப்படுகின்ற. அதோடு இந்த டயட்டை மேற்கொள்ளும் நபர் ஒரு நாளைக்கு குறைவான அளவிலேயே உப்பை எடுக்க வேண்டும்.
2024 ஆம் ஆண்டில் உடல் எடையைக் குறைக்க நிறைய பேர் இந்த டயட்டை பின்பற்றியுள்ளனர். மேலும் இந்த டயட் குறித்தும் மக்களால் அதிகம் தேடப்பட்டும் உள்ளது. இந்த டயட்டில் தாவர வகை உணவுகள் மட்டுமின்றி, இறைச்சிகளும் உட்கொள்ளப்படுவதால், சைவ உணவாளருக்கு இந்த டயட் ஏற்றது அல்ல.
4. அழற்சி எதிர்ப்பு டயட் (Anti-inflammatory Diet)
இந்த டயட்டில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்த உணவுகள் அதிகம் உட்கொள்ளப்படுகின்றன. இந்த டயட்டானது உடலினுள் உள்ள காயங்களை குறைக்க உதவுகின்றன. மேலும் இந்த டயட் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. எப்போது உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாகிறதோ, அப்போது உடலினுள் அழற்சி அதிகரித்து, உடல் பருமனை உண்டாக்கும். சொல்லப்போனால் இந்த டயட்டின் மூலம் தான் நடிகை வித்யா பாலன், சமந்தா போன்றோர் உடல் எடையைக் குறைத்தனர்.
5. மத்தியதரைக்கடல் டயட் (Mediterranean Diet)
மத்தியதரைக்கடல் டயட் என்பது ஒரு வகையான தாவர அடிப்படையிலான டயட். இதில் பழங்கள் மற்றும் காய்கறிகள் அதிக அளவில் உட்கொள்ளப்படும். உடல் எடையைக் குறைக்க சிறந்த டயட்டாக ஊட்டச்சத்து நிபுணர்கள் பலரும் இந்த டயட்டை கருதுகின்றனர். இந்த டயட் உடல் எடையை வேகமாக குறைக்க உதவுவது மட்டுமின்றி, சர்க்கரை நோயையும் கட்டுப்படுத்த உதவுகின்றன. இந்த டயட்டில் எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் ஆயில் கொழுப்பாக பயன்படுத்தப்படுகிறது. மேலும் இதில் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் தடைசெய்யப்பட்டுள்ளன. இந்த வகை டயட் இதயத்திற்கும் மூளைக்கும் பலவிதமான நன்மைகளை வழங்குகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











