Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
உங்க முதுகெலும்பு பலவீனமா இருக்கா? இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க.. இரும்பு போல ஸ்ட்ராங்காகும்..
World Spine Day 2023: இன்று பெரும்பாலானோர் நீண்ட நேரம் உட்கார்ந்தவாறே வேலை செய்கின்றனர். இப்படி உட்கார்ந்து வேலை செய்வதால் ஒரு கட்டத்தில் முதுகு வலியை சந்திக்க நேரிடும். முதுகு வலி லேசாக இருந்தால், அதை பலரும் சாதாரணமாக எடுத்துக் கொண்டு விட்டுவிடுவார்கள். ஆனால் அந்த வலி மிகவும் தீவிரமாக இருந்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இல்லாவிட்டால், அது நிலைமையை மோசமாக்கிவிடும்.
ஆகவே உட்கார்ந்தே வேலை செய்பவர்கள், எப்போதும் தங்கள் முதுகெலும்பின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும். அதற்கு தினமும் முதுகெலும்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உடற்பயிற்சிகளை செய்வதோடு, ஒருசில உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 16 ஆம் தேதி முதுகெலும்பின் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், முதுகெலும்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உலக முதுகெலும்பு தினம் அனுசரிக்கப்பட்டுள்ளது. எனவே உலக முதுகெலும்பு தினத்தை முன்னிட்டு, முதுகெலும்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்த சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து இப்போது காண்போம்.
பச்சை இலை காய்கறிகள்
காய்கறிகள் உடலுக்கு ஆரோக்கியமானவை. ஆனால் பச்சை இலை காய்கறிகளான கீரைகளில் பல்வேறு வைட்டமின்கள், மக்னீசியம், இரும்புச்சத்து மற்றும் கால்சியம் போன்றவை அதிகமாக உள்ளன. இந்த சத்துக்கள் அனைத்தும் எலும்புகளின் வளர்ச்சிக்கும், நரம்புகளின் ஆரோக்கியத்திற்கும் அவசியமானவை.
மேலும் இவற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாக இருப்பதால், இவை நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதோடு, முதுகெலும்புகளில் உள்ள காயங்களை விரைவில் ஆற்றவும் உதவுகிறது. எனவே உங்கள் முதுகெலும்பு ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் கேல், பசலைக்கீரை, ப்ராக்கோலி போன்றவற்றை உங்கள் உணவில் அடிக்கடி சேர்த்து வாருங்கள்.
அடர் நிற பழங்கள்
அடர் நிற பழங்களில் ஏராளமான அளவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கும். அதுவும் ப்ளாக்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி போன்றவற்றில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாக உள்ளன.
இவை உடலில் உள்ள திசுக்களை பாதுகாப்பதோடு, உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றவும் உதவுகின்றன. முக்கியமாக இது முதுகெலும்பு மற்றும் மத்திய நரம்பு மண்டலம் சேதமடைவதில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.
பால் பொருட்கள்
பால், சீஸ் மற்றும் தயிர் போன்ற பால் பொருட்களில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி அதிகமாக உள்ளன. இவை எலும்புகளின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும், நரம்புகளில் காயங்கள் ஏற்படுவதைத் தடுக்கவும் உதவுகின்றன. எனவே எலும்புகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் தினமும் ஒரு டம்ளர் பாலைக் குடியுங்கள். இதனால் எலும்பு தொடர்பான பிரச்சனைத் தடுக்கலாம்.
நட்ஸ் மற்றும் விதைகள்
நட்ஸ் மற்றும் விதைகளில் கொழுப்பு அமிலங்கள், கால்சியம், மக்னீசியம் மற்றும் வைட்டமின்கள் போன்றவை ஏராளமான அளவில் நிறைந்துள்ளன. இவற்றை தினமும் உட்கொண்டு வந்தால், அது உடலினுள் உள்ள காயங்களை எதிர்த்து போராடுவதோடு, எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.
அதுவும் ஆளி விதையில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன. இவை உட்காயங்கள் மற்றும் வீக்கத்தை எதிர்த்து, உடலுக்கு மட்டுமின்றி, எலும்புகளுக்கும் நல்ல பாதுகாப்பை வழங்குகின்றன.
அவகேடோ
அவகேடோ என்னும் வெண்ணெய் பழம் முதுகெலும்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் மிகச்சிறந்த பழம். இப்பழத்தில் கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து, பொட்டாசியம் பொன்ற ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் சத்துக்கள் நிரம்பியுள்ளன.
அவகேடோ பழத்தை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், அது முதுகு வலியில் இருந்து நிவாரணத்தை அளிப்பதோடு, அதில் உள்ள பொட்டாசியம் உடலினுள் உள்ள வீக்கத்தையும் குறைக்க உதவுகிறது.
பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள்
பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளில் புரோட்டீன் ஏராளமான அளவில் உள்ளன. புரோட்டீன்களானது முதுகெலும்பின் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்தாகும். இந்த விலங்கு புரோட்டீன்கள் இறைச்சிகளில் அளவுக்கு அதிகமாக நிறைந்திருந்தாலும், அவை உடலினுள் வீக்கத்தை ஏற்படுத்தும்.
அதுவே தாவர வகை புரோட்டீனை உட்கொண்டால், அது உடலுக்கு புரோட்டீனை மட்டுமின்றி, பல வகையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், கனிமச்சத்துக்கள், வைட்டமின்கள் போன்றவற்றை வழங்கும். இதன் விளைவாக எலும்புகளின் ஆரோக்கியமும் மேம்படும்.
சால்மன் மீன்
கடல் உணவான சால்மன் மீனில் லீன் புரோட்டீன் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஏராளமான அளவில் உள்ளன. அதுவும் இந்த மீனின் முள்ளை உட்கொள்ளும் போது, அது எலும்புகள் மற்றும் திசுக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
கூடுதலாக சால்மன் மீன் மிகவும் சுவையானது மற்றும் இவற்றை பல வழிகளில் சமைத்து சாப்பிடலாம். எனவே உங்கள் முதுகெலும்பு ஆரோக்கியமாக இருக்க விரும்பினால், சால்மன் மீனை அடிக்கடி உணவில் சேர்த்து வாருங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications