சொன்னா நம்பமாட்டீங்க.. இந்த நல்ல பழக்கங்களும் உடல் பருமனை உண்டாக்குமாம்.. எதுலாம்-ன்னு பாருங்க...

World Obesity Day 2025: தற்போது உடல் பருமனால் ஏராளமானோர் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த உடல் பருமன் மிகவும் ஆபத்தானது. ஏனெனில் உடல் பருமனாகிவிட்டால், உடலில் பல்வேறு ஆபத்தான நோய்களின் அபாயம் அதிகரித்துவிடும்.

சொல்லப்போனால் தற்போது நிறைய பேருக்கு சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், மூட்டு பிரச்சனைகள் வருவதற்கு உடல் பருமன் தான் முக்கிய காரணம். இப்படிப்பட்ட உடல் பருமன் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் நமது பழக்கவழக்கங்களும், வாழ்க்கை முறையும் தான். இதை சரிசெய்தாலே, உடல் பருமனடைவதைத் தடுக்கலாம்.

World Obesity Day 2025 Healthy Habits That Can Cause Obesity

இந்த உடல் பருமன் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 04 ஆம் தேதி உலக உடல் பருமன் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில் உடல் பருமன் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள் ஆங்காங்கு நடத்தப்படும். இன்று உடல் பருமன் தினம் என்பதால், உடல் பருமனை உண்டாக்கும் ஒருசில ஆரோக்கியமான பழக்கங்கள் குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அந்த பழக்கங்கள் உங்களிடம் இருந்தால், அவற்றை உடனே கைவிடுங்கள்.

1. கொழுப்பு குறைவான உணவுகள் அல்லது டயட்

கொழுப்பு குறைவானது, சர்க்கரை இல்லாதது அல்லது டயட் என்று லேபிள் கொண்ட உணவுகளை உட்கொள்வதை ஆரோக்கியமானது என்று பலர் நினைக்கின்றனர். ஆயினும், இப்படிப்பட்ட உணவுகளில் சர்க்கரை, செயற்கை சுவையூட்டிகள் அல்லது பதப்படுத்திகள் போன்றவை சேர்க்கப்பட்டிருக்கும். இந்த உணவுகளை உட்கொள்ளும் போது, அவை அதிக உணவுகளை உட்கொள்வதை தூண்டுவதோடு, கொழுப்புக்களை தேங்க வைத்து, உடல் பருமன் அபாயத்தை அதிகரிக்கின்றன.

2. கார்டியோ பயிற்சிகளை அதிகம் செய்வது

கார்டியோ உடற்பயிற்சிகள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆனால் வலிமை பயிற்சிகளின்றி இதை அளவுக்கு அதிகமாக செய்தால், அது தசை இழப்பை ஏற்படுத்தி, உடலின் மெட்டபாலிசத்தை மெதுவாக்கவிடும். இதன் மூலம் கலோரிகள் எரிக்கப்படுவது கடினமாகி உடல் பருமனுக்கு வழிவகுத்துவிடும். எனவே வெறும் கார்யோ பயிற்சிகளை மட்டும் செய்யாமல், தசைகளின் அடர்த்தியைப் பராமரிக்கவும், உடலில் உள்ள கொழுப்புக்களை எரிக்கவும் வலிமை பயிற்சிகளையும் செய்யுங்கள்.

3. பழச்சாறுகள் மற்றும் ஸ்மூத்திகளை அதிகம் குடிப்பது

பழங்கள் உடலுக்கு ஆரோக்கியமானது தான். ஆனால் அவற்றைக் கொண்டு ஜூஸ் தயாரித்து குடிக்கும் போது, அதில் உள்ள நார்ச்சத்துக்கள் நீக்கப்பட்டு, சர்க்கரை உட்கொள்ளலை அதிகரிக்கிறது. அதுவும் ஸ்மூத்திகளை அதிகம் குடிக்கும் போது, உடலில் கலோரிகளின் அளவு அதிகரித்து, உடல் பருமனுக்கு வழிவகுக்கிறது. எனவே பழச்சாறுகள் மற்றும் ஸ்மூத்திகளுக்கு பதிலாக, பழங்களை உட்கொள்ளுங்கள்.

4. கலோரிகளைக் குறைக்க உணவுகளை தவிர்ப்பது

நிறைய பேர் உடல் எடையைக் குறைக்க காலை உணவுகளை தவிர்க்கின்றனர். ஆனால் ஒரு நாளில் எப்போதும் காலை உணவை மட்டும் தவிர்க்கக்கூடாது. சொல்லப்போனால் ஒரு நாளில் காலை உணவு மிகவும் இன்றியமையாதது. இந்த உணவைத் தவிர்க்கும் போது அது பசியை இன்னும் அதிகரித்து, உணவுகளின் மீதான ஆர்வத்தை அதிகரித்து, கண்டதை சாப்பிடத் தூண்டி, உடல் பருமனை உண்டாக்கிவிடும்.

5. ஆரோக்கியமான ஸ்நாக்ஸ்களை அதிகமாக உட்கொள்வது

நட்ஸ், புரோட்டீன் பார், க்ரனோலா போன்றவை ஆரோக்கியமாவை தான். ஆனால் இவற்றில் கலோரிகள் அதிகம் உள்ளன. எனவே எவ்வளவு ஆரோக்கியமான உணவுகளாக இருந்தாலும், அளவாக உட்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், அதன் மூலம் உடல் பருமனடைந்துவிடும்.

6. அதிக க்ரீன் டீயை குடிப்பது

என்ன தான் க்ரீன் டீ உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்தாலும், அளவுக்கு அதிகமாக குடிக்கும் போது செரிமானம் மோசமாகி, மன அழுத்த ஹார்மோன்கள் அதிகரித்து, அசிடிட்டி பிரச்சனையை ஏற்படுத்தி, அதன் விளைவாக ஒருகட்டத்தில் உடல் பருமனுக்கு வழிவகுத்துவிடும். எனவே அளவாக குடித்து நன்மை பெறுங்கள்.

7. கொழுப்புக்களை முழுமையாக தவிர்ப்பது

உடல் எடையைக் குறைக்க அனைத்து வகையான கொழுப்புக்களையும் பலர் தவிர்க்கின்றனர். ஆனால் அது தவறு. உடலின் செயல்பாடுகள் சீராக எவ்வித இடையூறும் இல்லாமல் நடைபெற வேண்டுமானால், ஆரோக்கியமான கொழுப்புக்கள் நிறைந்த அவகேடோ, நட்ஸ், விதைகள், ஆலிவ் ஆயில் போன்றவற்றை அளவாக உணவில் சேர்த்து வர வேண்டியது அவசியம். கொழுப்புக்களை முழுமையாக தவிர்த்தால், பின் அது பசியை அதிகரித்து, கட்டுப்பாடு இல்லாமல் உணவுகளை உண்ண தூண்டும்.

எனவே மேலே கொடுக்கப்பட்டுள்ளதை நினைவில் கொண்டு, ஆரோக்கியமான பழக்கங்களில் மறைந்துள்ள் அபாயங்களை அறிந்து, சீரான வாழ்க்கை முறையை பராமரித்து வாருங்கள். இதன் மூலம் உங்களை அறியாமலேயே உடல் பருமன் அடைவதைத் தவிர்க்கலாம்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Tuesday, March 4, 2025, 11:45 [IST]
Desktop Bottom Promotion