Latest Updates
-
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம்
வெறும் பால் குடிக்க பிடிக்காதா? அப்ப பாலுடன் இதுல ஒன்ன கலந்து குடிங்க.. அதுவும் இந்த டைம்ல குடிங்க..
World Milk Day 2024: பால் ஒரு முழுமையான உணவாக அறியப்படுகிறது. அதோடு ஒருவரது ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வேண்டுமானால் தினமும் ஒரு டம்ளர் பாலைக் குடிக்க வேண்டும். இந்த பால் வளரும் குழந்தைகள் மட்டுமின்றி, ஒவ்வொரு வயதினமும் தங்களின் தினசரி உணவில் அவசியம் சேர்க்க வேண்டிய ஒரு முக்கியமான பானம். இந்த பாலின் மகத்துவத்தை உணர்த்துவதற்காகவே ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 01 ஆம் தேதி உலக பால் தினம் கொண்டாடப்படுகிறது.
பாலில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் டி போன்றவை இருப்பதால், இவை எலும்புகளின் ஆரோக்கியத்தையும், வலிமையையும் அதிகரிக்கின்றன. மேலும் பாலில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், தாதுக்கள், ஜிங்கி, தயமின், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்றவையும் உள்ளன. இப்படிப்பட் பாலை தினமும் குடித்து வந்தால், சர்க்கரை நோய் முதல் இதய நோய் வரையிலான மோசமான ஆரோக்கிய பிரச்சனைகளின் அபாயம் குறைகிறது.

ஆனால் இந்த பால் அனைவருக்குமே பிடிக்காது. சிலருக்கு அதன் சுவையும், மணமும் பிடிக்காது. சிலருக்கு லாக்டோஸ் சகிப்புத்தன்மை காரணமாக குடிக்க முடியாத சூழல் ஏற்படலாம். இதில் லாக்டோஸ் சகிப்புத்தன்மை உள்ளவர்கள் பாலை கட்டாயம் தொடக்கூடாது. பால் பிடிக்காது என்றால், பாலின் சுவையை மேம்படுத்தும் மற்றும் பாலினால் கிடைக்கும் சத்துக்களை இருமடங்கு அதிகரிக்கும் ஒருசில மருத்துவ பண்புகள் நிறைந்த பொருட்களை கலந்து குடிக்கலாம். இப்போது பாலோடு எந்த பொருட்களை கலந்து குடிக்கலாம் என்பது குறித்து காண்போம்.
1. தேன்
தேனில் இயற்கை சர்க்கரையுடன், அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், ஜிங்க், இரும்புச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. இது தவிர, தேன் ஒரு அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பொருளாகவும் நாட்டு மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட தேனை வெதுவெதுப்பான பாலுடன் 1 டேபிள் ஸ்பூன் சேர்த்து கலந்து குடித்தால், அதன் சுவை இன்னும் அட்டகாசமாக இருப்பதோடு, ஏராளமான சத்துக்களும் உடலுக்கு கிடைக்கும்.
2. மஞ்சள்
மஞ்சளில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. எனவே இந்த மஞ்சளும் நாட்டு மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உங்களுக்கு வெறும் பாலைக் குடிக்க பிடிக்காவிட்டால், அந்த பாலுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து குடித்தால், அந்த ப்ளேவர் மாறுபடுவதோடு, உடலுக்கு ஏராளமான நன்மைகளும் கிடைக்கும். கூடுதலாக பாலில் மஞ்சள் தூள் கலந்து குடிக்கும் போது நல்ல நிம்மதியான தூக்கம் கிடைக்கும் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி மேம்படும்.
3. பட்டை
பட்டை ஒரு மருத்துவ குணம் வாய்ந்த மசாலா பொருள். இந்த பட்டையின் தூளை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலுடன் சேர்த்து குடித்தால், இரட்டிப்பு நன்மைகளைப் பெறலாம். பட்டையில் உள்ள கலவைகள் நொதிகளின் செயல்பாட்டைக் குறைத்து, உடலில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து, சரியான அளவில் பராமரிக்க உதவுகிறது. மேலும் பட்டையில் உள்ள அத்தியாவசிய எண்ணெய் கொழுப்புச் செல்களை குறி வைத்து, அவற்றை ஆற்றலாக மாற்ற எரித்து, எடை இழப்பை ஊக்குவிக்கிறது.
4. இஞ்சி
உங்களுக்கு வெறும் பால் குடிக்க பிடிக்காவிட்டால், கொதிக்கும் பாலில் இஞ்சியைத் தட்டிப் போட்டு, ஒரு கொதி விட்டு இறக்கி வடிகட்டி, குடியுங்கள். இப்படி குடிக்கும் போது சளி, இருமல், குமட்டல் போன்றவற்றில் இருந்து நிவாரணம் கிடைப்பதோடு, செரிமான செயல்பாடும் சிறப்பாக இருக்கும்.
5. வெல்லம்
குடிக்கும் பாலில் சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தை சேர்க்கும் போது, அது இன்னும் ஆரோக்கியமான பானமாக மாறுகிறது. அதுவும் பாலில் வெல்லத்தை கலந்து குடிக்கும் போது, உடலின் நோயெதிர்ப்பு சக்தி மேம்படுவதோடு மற்றும் வயிற்று வலி, மாதவிடாய் வலியில் இருந்து நல்ல நிவாரணத்தை அளிக்கும்.
முக்கியமாக இந்த பாலை காலையில் வெறும் வயிற்றில் அல்லது இரவு தூங்குவதற்கு முன் குடிக்கும் போது, உடலில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications