Latest Updates
-
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சௌ சௌ வாங்குனா இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும்
World Mental Health Day 2024:உங்க மன ஆரோக்கியம் எப்படி உங்களோட ஆயுளை குறைக்கிறது தெரியுமா? ஜாக்கிரதையா இருங்க!
World Mental Health Day 2024: உடல் ஆரோக்கியத்துடன் ஒப்பிடும் போது மன ஆரோக்கியம் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகிறது. ஆனால் உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும் ஒன்றோடொன்று நெருக்கமான தொடர்புடையவை. சமீப காலமாக மனஅழுத்தத்தால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக கோவிட்-19- க்குப் பிறகு இந்த சிக்கல் வேகமாக அதிகரித்து வருகிறது.
மன ஆரோக்கியமும், உடல் ஆரோக்கியமும் நாம் நினைப்பதை விட ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையது. நல்ல மன ஆரோக்கியம் உடல் ஆரோக்கியத்தில் நேரடி மற்றும் நேர்மறையான விளைவை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். மோசமான மன ஆரோக்கியம் உடல் ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும்.

உங்களுக்கு மோசமான நாள் அல்லது மன அழுத்தம் நிறைந்த வாரம் இருந்தால், அந்த காலகட்டத்தில் உங்கள் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்று அர்த்தமில்லை. இருப்பினும், மனநலப் பிரச்சினைகள் அல்லது நீண்டகால மன அழுத்தம் மற்றும் பதட்டம் ஆகியவற்றை புறக்கணிக்கவோ அல்லது குறைத்து மதிப்பிடவோ கூடாது. மனஆரோக்கியம் உடல் ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் முக்கியப் பிரச்சினைகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
செரிமான ஆரோக்கியம்
பொதுவாக நாம் பதட்டமாக இருக்கும் போது வயிற்றை பிசைவது போன்ற உணர்வு ஏற்படும். இது உங்கள் மனமும், உடலும் எப்படி பிணைக்கப்பட்டுள்ளது என்பதற்கான சிறு உதாரணம் மட்டுமே. ஆனால் அதைவிட தீவிரமாக மோசமான மன ஆரோக்கியம் நாள்பட்ட மனச்சோர்வு, மன அழுத்தம் மற்றும் பதட்டம் உண்மையில் செரிமான மண்டலத்தின் உடலியலை மாற்றி, அது செயல்படும் விதத்தை பாதிக்கிறது, மேலும் சில சமயங்களில் வலி மற்றும் அசௌகரியத்தை தீவிரப்படுத்துகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.
தூக்க சிக்கல்கள் மற்றும் ஆற்றல் இழப்பு
நாள்பட்ட மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு நீடித்த சோர்வு மற்றும் ஆற்றல் இல்லாமை போன்ற உணர்வுகளைத் தூண்டுவது மட்டுமல்லாமல், நீங்கள் தூங்கும் முறையையும், தூங்கும் தன்மையையும் பாதிக்கலாம். தூக்கமின்மையால், மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வு தொடர்பான அறிகுறிகள் அதிகரிக்கலாம். இறுதியில், இது தூக்கமின்மை அல்லது தூக்கத்தில் மூச்சுத்திணறல் உள்ளிட்ட தூக்கக் கோளாறுகளின் வளர்ச்சிக்கு பங்களிக்கும்.
இதய ஆரோக்கியம்
உங்கள் இதயத்தின் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உயர் இரத்த அழுத்தம், அதிகரித்த மற்றும் நீடித்த இதயத் துடிப்புபோன்றவை இதய நோய்க்கான ஆபத்தை அதிகரிக்கலாம். இந்த ஆபத்து காரணிகள் அனைத்தும் மன ஆரோக்கியத்தை பாதிக்கலாம். உதாரணமாக, நீங்கள் மன அழுத்தத்தில் இருக்கும்போது, உங்கள் உடல் கார்டிசோல் ஹார்மோனை வெளியிடுகிறது, இதன் விளைவாக இரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பு அதிகரிக்கிறது. நீண்ட கால மன அழுத்தம் அல்லது நாள்பட்ட மனச்சோர்வு, பதட்டம் அல்லது PTSD ஆகியவை இதய நோயை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கலாம்.
ஆயுட்காலத்தைப் பாதிக்கலாம்
மன ஆரோக்கியம் முழு உடலிலும் ஒரு விரிவான தாக்கத்தை ஏற்படுத்துவதால், கடுமையான மற்றும் நாள்பட்ட மனநலப் பிரச்சினைகள் உண்மையில் ஆயுட்காலத்தைக் குறைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஏனெனில் மன ஆரோக்கிய குறைபாடு நோயெதிர்ப்பு சக்தி முதல் உடலின் குணமடையும் தன்மை வரை அனைத்தையும் பாதிக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
