Latest Updates
-
400 ஆண்டுக்கு முன் தோன்றி இப்போதும் செயல்பாட்டில் உள்ள உலகின் முதல் வங்கி எது? அதன் முதலாளி யார் தெரியுமா? -
ராகுவின் நட்சத்திர பெயர்ச்சி: ஆகஸ்ட் 02 முதல் இந்த 4 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
மசாலா மினி இட்லி - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
ஜூலை 27-ல் சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்குவதால் 138 நாட்கள் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
மணமணக்கும் மல்லி வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 5 ரேகைகளில் ஒன்று கையில் இருப்பவர்களுக்கு நிச்சயம் காதல் திருமணம்தான் நடக்குமாம் - உங்க கையில் இருக்கா? -
சூரியன்-ராகு உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் சகல துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கோலாப்பூரி முட்டை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
22 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் அதிசய முலாம்பழம் - இந்த பழத்தில் அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?
எச்சரிக்கை! உங்க கண்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? உடனே டாக்டர் கிட்ட போங்க.. இல்லன்னா வருத்தப்படுவீங்க..
World Keratoconus Day 2025: ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 10 ஆம் தேதி உலக கெரடோகோனஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில் கெரடோகோனஸ் பற்றி விழிப்புணர்வு பிரச்சாரங்கள் ஆங்காங்கு நடத்தப்படும். சரி, கெரடோகோனஸ் என்றால் என்ன என்று பலரும் கேட்கலாம்.
கெரடோகோனஸ் என்பது ஒருவிதமான கண் நோய். இன்று கெரடோகோனஸ் தினம் என்பதால், இந்த கெரடோகோனஸ் என்றால் என்ன, இதன் அறிகுறிகள் என்ன, இது யாருக்கு வரலாம், இதன் ஆபத்து காரணிகள் என்னவென்பது போன்ற பல விஷயங்கள் குறித்து விரிவாக காண்போம்.

நமது கண்களின் வெளிப்படையான மற்றும் தெளிவான வெளிப்புற அடுக்கு தான் கார்னியா. இந்த கார்னியாவின் மேற்பரப்பில் ஏற்படும் சீரற்ற தன்மை மற்றும் கார்னியா மெலிந்து போவதை கெரடோகோனஸ் என்று அழைப்பர். கார்னியாவின் தடிமனான பகுதியாக இருக்கும் நடுத்தர அடுக்கு ஜொலாஜன் மற்றும் நீரால் ஆனது. யாருக்கு கெரடோனோனஸ் உள்ளடோ, அந்நபரின் கார்னியா மெலிந்து கூம்பு வடிவமாக வீங்கி, பார்வை இழப்புக்கு வழிவகுக்கும்.
கெரடோகோனஸ் அல்லது கூம்பு வடிவ கார்னியா மங்கலான பார்வையை ஏற்படுத்துவதோடு, வெளிச்சத்தை கண்டால் கண் கூச்சத்தை உண்டாக்கும். இந்த நோய் பொதுவாக இரண்டு கண்களையும் பாதிக்கும். இருப்பினும், இது ஒரு கண்ணை மற்றொன்றை விட அதிகமாக பாதிக்கலாம். பொதுவாக இது டீன்-ஏஜ் மற்றும் 30 வயதுடையவர்களை பாதிக்கும். இந்த நிலையானது கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறும்.
கெரடோகோனஸ் அறிகுறிகள்
கெரடோகோனஸ் நோய் இருந்தால், நோய் முன்னேறும் போது அறிகுறிகள் தெரியத் தொடங்கும். அந்த அறிகுறிகள் பின்வருமாறு:
* மங்கலான பார்வை
* வெளிச்சத்தைக் கண்டால் கண் கூசுவது, குறிப்பாக இரவு நேரத்தில் வாகனத்தை ஓட்டுவதில் சிரமத்தை சந்திக்க நேரிடும்.
* அடிக்கடி கண்ணாடியை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படும்.
* திடீரென்று பார்வை மோசமாகும் அல்லது மங்கலாகும்.
கெரடோகோனஸ் காரணங்கள்
கெரடோகோனஸ் ஒருவருக்கு எந்த காரணத்தினால் வருகிறது என்று சரியாக தெரியவில்லை. இருப்பினும், மரபணுக்கள் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள் இந்நிலைக்கு காரணமாக இருக்கலாம். முக்கியமாக 10-ல் ஒருவர் கெரடோகோனஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அவரது பெற்றோருக்கும் இந்நிலை இருப்பது தெரிய வந்துள்ளது.
கெரடோகோனஸ் ஆபத்து காரணிகள்
கெரடோகோனஸ் ஒருவருக்கு வரும் அபாயத்தை பின்வரும் காரணிகள் அதிகரிக்கின்றன. அவையாவன:
* கெரடோகோனஸ் உள்ள குடும்ப வரலாறு
* கண்களை அதிகமாக தேய்ப்பது
* ரெடினிடிஸ் பிக்மென்டோசா, டவுன் சிண்ட்ரோம், எஹ்லர்ஸ்-டான்லோஸ் சிண்ட்ரோம், மார்பன் சிண்ட்ரோம், ஹே காய்ச்சல் மற்றும் ஆஸ்துமா போன்றவைகளும் இதன் அபாயத்தை அதிகரிக்கலாம்.
கெரடோகோனஸை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், கண்ணாடிகள் அல்லது மென்மையான காண்டாக்ட் லென்ஸ்கள் மூலம் பார்வை சிக்கல்களை சரிசெய்யலாம். ஒருவேளை உங்களின் நிலை மோசமடைந்தால், கார்னியா மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.
எனவே நண்பர்களே! நீங்கள் உங்களின் கண்களில் இந்த மாதிரியான அறிகுறிகளை சந்தித்தால், அதை சற்றும் புறக்கணிக்காமல், உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து, சிகிச்சை மேற்கொள்ளுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

