Latest Updates
-
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா?
இந்த 3 பானங்களை குடிக்காதீங்க.. இல்ல சீக்கிரம் ஞாபக மறதி நோய் வந்துடும்.. எச்சரிக்கும் அமெரிக்க மருத்துவர்..
World Brain Day 2025: ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இதய ஆரோக்கியம் எப்படி மிகவும் முக்கியமானதோ, அதற்கு இணையாக மூளையின் ஆரோக்கியமும் மிகவும் இன்றியமையாததாகும். இந்த மூளையின் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 22 ஆம் தேதி உலக மூளை தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று உலக மூளை தினமாகும்.
தற்போது நிறைய பேர் நினைவாற்றல் தொடர்பான பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். ஒருவரது நினைவாற்றல் பாதிக்கப்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், நாம் உண்ணும் உணவும், பானங்களும் மூளையின் ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெரியுமா?

தற்போது நாம் உண்ணும் உணவுகள், குடிக்கும் பானங்கள் என அனைத்திலுமே, உடலுக்கு வேண்டிய சத்துக்கள் உள்ளதோ இல்லையோ, கேடு விளைவிக்கும் கெமிக்கல்கள் நிறைந்துள்ளன. இந்த கெமிக்கல்கள் உடலினுள் உள்ள உறுப்புக்களை கொஞ்சம் கொஞ்சமாக சேதப்படுத்தி, நாளடைவில் மீள முடியாத சேதத்தை, அதாவது அல்சைமர் போன்ற நோய்களை ஏற்படுத்திவிடுகின்றன.
இன்று உலக மூளை தினம் என்பதால், அமெரிக்காவைச் சேர்ந்த இரைப்பை குடல் நிபுணரான டாக்டர் சேத்தி தனது இன்ஸ்டா பக்கத்தில் மூளைக்கு சேதத்தை ஏற்படுத்தி அல்சைமர் நோயின் அபாயத்தை அதிகரிக்கும் மிகவும் மோசமான 3 பானங்கள் குறித்து பகிர்ந்துள்ளார். அந்த பானங்கள் எவையென்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.
1. டயட் சோடா
"ஆரோக்கியத்தின் மீது அக்கறை கொண்ட நிறைய பேர் ஆரோக்கியமானது என்று குடித்து வரும் ஒரு பானம் தான் டயட் சோடா. உண்மையில் இந்த சோடா ஆபத்தானது. முக்கியமாக மூளையின் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கக்கூடியது. டயட் சோடாவில் செயற்கை இனிப்புடன் அஸ்பர்டேமும் உள்ளது. இது குடல் பாக்டீரியாக்களுக்கு தீங்கை விளைவிக்கும். மேலும் இது குடல் மூளைக்கு இடையே ஒரு வலுவான தொடர்பு உள்ளது. எனவே இந்த டயட் சோடாவை குடிப்பதை அறவே தவிர்க்க வேண்டும்" என்று டாக்டர் கூறினார்.
2. ஆல்கஹால்
இரண்டாவதாக, ஆல்கஹால் குடல் பாக்டீரியாக்களை மட்டுமின்றி, கல்லீரல் ஆரோக்கியத்தையும் மோசமாக பாதிக்கும் ஒரு மோசமான பானமாகும். அதோடு இது ஒருவரது தூக்கத்திலும் இடையூறை ஏற்படுத்தும். மூளையின் ஆரோக்கியத்திற்கு தூக்கம் இன்றியமையாதது. இந்த தூக்கம் பாதிக்கப்பட்டால் மூளை ஆரோக்கியம் மோசமாக பாதிக்கப்படும். எனவே ஆல்கஹால் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
3. ஸ்போர்ட்ஸ் எனர்ஜி பானங்கள்
"பெரும்பாலான ஸ்போர்ட்ஸ் எனர்ஜி பானங்களில் சர்க்கரை அளவுகள் அதிகமாக உள்ளன. மேலும் இவற்றில் நார்ச்சத்துக்களும் எதுவும் இல்லை. இதனால் இந்த பானத்தைக் குடிக்கும் போது இரத்த சர்க்கரை அளவு சட்டென்று அதிகரித்து, க்ளுக்கோஸ் மற்றும் இன்சுலின் அளவுகள் வேகமாக உயர்வதோடு, அதன் விளைவாக அல்சைமர் வருவதற்கான அபாயமும் அதிகரிக்கும்" என்று டாக்டர் சேத்தி கூறினார்.
எனவே நண்பர்களே! இதுவரை நீங்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள பானங்களை அடிக்கடி குடித்து வந்தால், உடனே அவற்றைக் குடிப்பதை தவிர்த்திடுங்கள். இல்லாவிட்டால், மூளை அதிகம் சேதமடைந்து விரைவில் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட நேரிடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications