Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
World AIDS Day 2025: எச்.ஐ.வி இருந்தால் முதல் சில வாரங்களில் தெரியக்கூடிய ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகள்!
World AIDS Day 2025: எய்ட்ஸ் என்பது பாலியல் ரீதியாக பரவக்கூடிய மிகவும் கொடிய நோய். இது எச்.ஐ.வி என்னும் வைரஸால் ஏற்படுகிறது. இந்த எச்.ஐ.வி உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை சேதப்படுத்துகிறது. இதனால் உடல் தொற்றுகள் மற்றும் நோயை எதிர்த்துப் போராடும் திறன் குறைந்துவிடுகிறது. தற்போது என்ன தான் மருத்துவ உலகில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், இன்று வரை இந்த கொடிய நோயை முழுமையாக குணப்படுத்த மருந்து ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்த கொடிய நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 01 ஆம் தேதி உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில் இந்த எய்ட்ஸின் ஆரம்பகால அறிகுறிகளை கண்டறிந்து, சரியான நேரத்தில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள் ஆங்காங்கு நடத்தப்படும்.

இன்னும் நிறைய பேருக்கு எய்ட்ஸின் ஆரம்ப கால அறிகுறிகள் தெரியவில்லை. ஏனெனில் இதன் அறிகுறிகள் பொதுவான நோயை போன்றே இருக்கும். ஆனால் ஆரம்பத்திலேயே அறிகுறிகளை அறிந்து சிகிச்சை மேற்கொண்டால், நீண்ட காலத்திற்கு நல்வாழ்வை வாழலாம். இப்போது எச்.ஐ.வி-யின் ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகளைக் காண்போம்.
ஒருவருக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டால், அவருக்கு அறிகுறிகளானது 2 முதல் 4 வாரங்களில் தெரியத் தொடங்கும். இந்த காலக்கட்டம் பொதுவாக கடுமையான எச்.ஐ.வி தொற்று என்று அழைக்கப்படுகிறது. பெரும்பாலான நபர்கள் இந்த காலத்தில் தெரியும் அறிகுறிகளை பருவகால வைரஸ் தொற்றுகள் அல்லது காய்ச்சலாக கருது அசால்ட்டாக விட்டுகிறார்கள். இப்போது இக்காலத்தில் எந்த மாதிரியான அறிகுறிகள் தெரியும் என்பதைக் காண்போம்.
காய்ச்சல்
எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டால் தெரியவரும் ஆரம்பகால அறிகுறிகளுள் ஒன்று தான் உடலின் வெப்பநிலை தொடர்ந்து அதிகமாக இருக்கும். அதுவும் இந்த காய்ச்சல் மிதமானது முதல் அதிகமானது வரை இருக்கலாம். அத்துடன் குளிர் அல்லது மிகுந்த வியர்வையையும் சந்திக்க நேரிடலாம். எனவே இந்த மாதிரியான அறிகுறி தெரிந்தால் சாதாரணமாக விட்டுவிடாதீர்கள்.
தொண்டை கரகரப்பு
எச்.ஐ.வி தொற்றின் ஆரம்ப கால அறிகுறிகளுள் ஒன்று தான் தொண்டை கரகரப்பு. காரணமில்லாமல் திடீரென்று தொண்டை கரகரப்பு அல்லது தொண்டை புண் போன்றவற்றை சந்தித்தால், சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அதுவும் இந்த தொண்டை தொற்று சில சமயங்களில் நீண்ட காலம் நீடித்திருக்கும்.
தலை வலி மற்றும் உடல் வலி
எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட ஏராளமானோர் ஆரம்ப காலத்தில் மிகுந்த உடல் சோர்வுடன், தசை மற்றும் மூட்டுகளில் வலியை சந்தித்ததாக புகாரளித்துள்ளனர். அதுவும் இந்த வலியானது சில நாட்கள் நீடித்திருக்கும்.
சரும தடிப்பு
சருமத்தில் சிவப்பு நிற தடிப்புகள் அல்லது சிவப்பு நிற படலங்கள் காணப்படுகிறதா? அதுவும் இந்த தடிப்புகள் எவ்வித அரிப்புக்களையும் ஏற்படுத்தாமல் இருக்கும். முக்கியமாக இவை மேல் உடல், முகம் அல்லது கைகளில் காணப்படலாம்.
வீக்கமடைந்த சுரப்பிகள்
கழுத்துப் பகுதியில் உள்ள நிணநீர் முனையங்கள் மற்றும் கைகளுக்குக் கீழே அல்லது இடுப்புப் பகுதிக்குக் கீழே அமைந்துள்ள நிணநீர் முனையங்களில் வீக்கத்தை சந்திக்கிறீர்களா? அப்படியானால், நோயெதிரப்பு மண்டலம் வைரஸை தாக்க செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.
செரிமான பிரச்சனைகள்
குமட்டல், மூக்கு ஒழுகல் அல்லது வயிற்று வலி போன்றவற்றை திடீரென்று சந்திக்கிறீர்களா? எச்.ஐ.வி தொற்றின் ஆரம்ப கால அறிகுறிகளுள் ஒன்று தான் இந்த அறிகுறிகள். ஆனால் இந்த அறிகுறிகள் தோன்றி மறைந்துவிடும். எனவே காரணமின்றி திடீரென்று இப்படியான செரிமான பிரச்சனைகளை சந்தித்தால், உடனே கவனியுங்கள்.
எடை இழப்பு
காரணமின்றி திடீரென்று உடல் எடை குறைவதை காண்கிறீர்களா? அப்படியானால் சந்தோஷப்படாதீர்கள். ஏனெனில் எச்.ஐ.வி தொற்று இருந்தாலும் இப்படி உடல் எடை சட்டென்று குறைந்து, உடல் பலவீனமாகிவிடும்.
எனவே மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகள் ஒருவருக்கு தெரிந்தால், அவர்களுக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பதற்கான வாய்ப்புள்ளது. இந்த அறிகுறிகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், உடனே மருத்துவரை அணுகி என்ன காரணம் என்பதை அறிந்து சிகிச்சை மேற்கொள்ளுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications