Latest Updates
-
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும் -
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்! -
1/2 கப் கொள்ளு இருந்தா.. இப்படி ஒருவாட்டி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்
குழந்தை பெற விரும்பும் பெண்ணா நீங்கள்.. அப்போ இந்த உணவுகளை சாப்பிடுங்கள்.. !
புதுமணத் தம்பதிகள் சில வாரங்கள் அல்லது மாதங்களுக்கு கருத்தடை முறைகளை முயற்சி செய்வார்கள்.. தம்பதிகளாக வாழ்க்கையை வாழ ஆசைப்படுவார்கள். ஆனால் பிறகு தனக்கென ஒரு குழந்தை வேண்டும் என்ற ஆசை எழும். அத்தகைய சூழலில், அவர்கள் ஆணுறை போன்ற கருத்தடை சாதனங்களைத் தவிர்த்துவிட்டு, இல்லற வாழ்க்கையை இயற்கையான முறையில் தொடங்க ஆரம்பிப்பார்கள்..
இல்லற வாழ்க்கை எவ்வளவு இனிமையாக இருந்தாலும், உடனே கர்ப்பம் தரிக்க சிலர் சிரமப்படுகிறார்கள்.. இதற்கு முக்கிய காரணங்களில் ஆண்களின் விந்தணு எண்ணிக்கை குறைவாக இருக்கலாம் என்பதும் ,பெண்களின் கருவுறுதல் தகுதியும் இடம் பெறுகிறது.. குறைந்த விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் விந்தணுக்களின் தரம் குறைவாக இருப்பது ஆண்களின் கருவுறுதலை பாதிக்கிறது. இதன் காரணமாக, ஆண்களுக்கு மலட்டுத்தன்மை பிரச்சனை ஏற்படலாம். அதேபோல, ஆரோக்கியமாக இருந்தாலும் கருவுறவில்லை என்று பல பெண்கள் கவலைப்படுகின்றனர்.

அயோடின், ஃபோலிக் அமிலம் மற்றும் இரும்பு போன்ற சில நுண்ணூட்டச்சத்துக்கள் பெண்களின் கரு முட்டைகளின் வளர்ச்சிக்கு முக்கியமானவை என்பதால், இந்த சத்துக்கள் அதிகமுள்ள உணவுகளை தினசரி அடிப்படையில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆண் பெண் இருபாலரும் சரியான ஊட்டச்சத்து எடுத்து சில வாழ்க்கை முறை ஆலோசனைகளை பின்பற்றினால் கருவுறுதலுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கலாம்.
நீங்கள் உண்ணும் உணவைப் பொறுத்து, உங்கள் குடல் ஆரோக்கியம் மேம்படும், இரத்த ஓட்டம், ஹார்மோன் சுரப்பு சீராக இருக்கும். இதனால் மற்ற உடல் ஆரோக்கியத்துடன், உங்கள் கருத்தரிக்கும் வாய்ப்புகள் இயல்பாகவே அதிகரிக்கும். அது என்னென்ன உணவுகள் என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...
சால்மன்
சால்மன் மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இந்த மீன் புல் கார்ப் என்று அழைக்கப்படுகிறது. இந்த மீனை சாப்பிடுவதால் உங்கள் கர்பப்பையின் ஆரோக்கியம் மேம்படும். இதில் புரதச்சத்து மிக அதிகம். சில மீன்களில் தீங்கு விளைவிக்கும் பாதரசம் இருந்தாலும், இந்த சால்மனுக்கு அந்த பிரச்சனை இல்லை.
இறைச்சி
ஆடு, கோழி இறைச்சியை விட கல்லீரல், சிறுநீரகம், மூளை, குடல் போன்ற உறுப்புகளை உட்கொள்வது நல்லது. இத்தகைய கூறுகளில் வைட்டமின் பி, இரும்பு மற்றும் துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
ஷெல்ஃபிஷ்
ஓடு கொண்டிருக்கும் கடல் அல்லது நீர்வாழ் உயிரினங்கள். உதாரணமாக நண்டு, இறால் போன்ற உணவுகள் உண்பது நல்லது. ஆனால் அவற்றை நன்றாக வேகவைத்து உண்ண வேண்டும்.
முட்டை
புரோட்டீன் நிரம்பிய முட்டைகள் கர்ப்பத்திற்கு சிறந்த உணவுகளில் ஒன்றாகும். வைட்டமின் பி12 மற்றும் ஈ போன்ற சத்துக்களும் இதில் உள்ளன. சிலர் முட்டையின் மஞ்சள் கருவை நிராகரிப்பார்கள். ஆனால் மஞ்சள் கருவில் கர்ப்பம் தரிக்க உதவும் சத்துக்கள் அதிகம் என்பதை மறந்துவிடாதீர்கள்.
அக்ரூட் பருப்புகள்
இதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் நிரம்பியுள்ளது. இது மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. ஹார்மோன் சுரப்பை ஒழுங்குபடுத்துகிறது. ஆண்கள் தினமும் வால்நட் சாப்பிடுவது விந்தணுக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
பீன்ஸ் மற்றும் பருப்பு
பீன்ஸ் மற்றும் பருப்புகளில் புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது கருப்பையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது இறைச்சியில் காணப்படும் புரதத்தை மாற்றுகிறது.
புளிக்காத தயிர், வெண்ணெய்
கால்சியம், புரோபயாடிக்ஸ், வைட்டமின் டி, புளிக்காத தயிர். வெண்ணெய் போன்ற சத்துக்கள் நிறைந்திருப்பதால் கருப்பை ஆரோக்கியம் மேம்படும். இது புரதச்சத்தும் நிறைந்தது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications