Latest Updates
-
கர்நாடகா மட்டன் சாறு ரெசிபி - இந்த மாதிரி மட்டன் குழம்பு வைச்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
100 ஆண்டுகளாக சிக்கன் மற்றும் முட்டை சாப்பிடாத வினோத கிராமம் - ஆனா மட்டன் சாப்பிடுவாங்க - காரணம் என்ன தெரியுமா -
18 ஆண்டுக்கு பின் கேது துலாம் ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு கெட்ட நேரம் தொடங்கப்போகுதாம் -
மும்பை ஸ்டைல் சன்னா மசாலா புலாவ் ரெசிபி - இந்த மாதிரி புலாவ் செஞ்சு பாருங்க - டக்கரா இருக்கும் -
6 நெல்லிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
அக்டோபர் 17, 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாள் காத்திருக்காம் -
சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
அக்டோபர் 28-ல் சுக்கிரன் உதயமாவதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆந்திரா ஸ்டைல் குடைமிளகாய் தக்காளி சாதம் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - பிரியாணி மாதிரி இருக்கும் -
பண்டிகைக் காலத்தில் சருமத்தை பளிச்சென்று புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும் 5 காபி ஃபேஸ் பேக்குகள்!
உங்க உடலில் இந்த அறிகுறிகள் இருக்கா? அப்ப உங்க கல்லீரல் பெரிய ஆபத்தில் இருக்குன்னு அர்த்தமாம்...ஜாக்கிரதை!
அடிவற்றில் திரவம் குவியும் நிலை ஆஸ்கைட்ஸ் என்று அழைக்கப்படுகிறது. சிரோசிஸ் பிரச்சனை உங்கள் வயிற்றில் திரவத்தை உருவாக்கலாம். இதன் விளைவாக வயிற்றில் வீக்கம் மற்றும் வலி ஏற்படலாம்.
நம் உடலிலுள்ள முக்கியமான உறுப்புகளில் கல்லீரலும் ஒன்று. கல்லீரலில் சிரோசிஸ் வளர்ச்சி என்பது ஒரு கடுமையான மருத்துவ நிலை ஆகும். இது கல்லீரல் திசுக்களில் அதிக சேதத்தை ஏற்படும் போது ஏற்படுகிறது. மேலும், இது நீண்ட கால கல்லீரல் பாதிப்பால் கல்லீரலில் ஏற்படும் வடு (ஃபைப்ரோஸிஸ்) என்றும் அழைக்கப்படுகிறது. இந்த வடு திசு கல்லீரல் சரியாக வேலை செய்வதைத் தடுக்கிறது மற்றும் பலவீனமான கல்லீரல் செயல்பாட்டிற்கு வழிவகுக்கிறது. இந்த நாள்பட்ட கல்லீரல் நிலை கல்லீரல் திசு சேதம் மற்றும் முற்போக்கான வடு (ஃபைப்ரோஸிஸ்) ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது.

முக்கிய உறுப்பான கல்லீரல் ஊட்டச்சத்துக்களை செயலாக்குகிறது மற்றும் பல வேலைகளில் இருந்து நச்சுகளை நீக்க உதவுகிறது. இந்த வேலைகள் தடைபடும்போது, அவை உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். ஆபத்தான நோயான கல்லீரலில் சிரோசிஸின் அறிகுறிகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

கல்லீரலில் சிரோசிஸ்
கல்லீரல் இழைநார் வளர்ச்சி என்றழைக்கப்படும் கல்லீரல் சிரோசிஸ் மிகவும் கடுமையானது. இது கல்லீரல் செயலிழப்பு, கல்லீரல் புற்றுநோய் மற்றும் மரணம் போன்ற சிக்கல்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இந்த நோய்க்கான அடிப்படை காரணத்தை கணடறிந்து, அறிகுறிகள் மற்றும் சிக்கல்களைக் கட்டுப்படுத்த மருந்துகளை உட்கொள்ள வேண்டும். மேலும் சில சந்தர்ப்பங்களில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யக்கூடிய ஆபத்தான நிலையும் ஏற்படலாம்.

மஞ்சள் காமாலை
அடிக்கடி தோல் மற்றும் கண்களின் வெள்ளை நிறம் மஞ்சள் நிறமாக மாறுவது, கல்லீரல் சிரோசிஸின் ஒரு அறிகுறி. இரத்த சிவப்பணுக்களை அழிப்பதன் மூலம் பிலிரூபின் என்ற கழிவுப் பொருளானது, இரத்தத்தில் உருவாகி, கல்லீரலால் அதைச் செயல்படுத்த முடியாதபோது மஞ்சள் நிறத்தை உருவாக்குகிறது. இது கண் மற்றும் தோலில் ஏற்படுகிறது.

சோர்வு மற்றும் பலவீனம்
கல்லீரலில் சிரோசிஸ் பிரச்சனை வளர்ந்து வரும்போது, அது கல்லீரல் செயல்பாட்டை முற்றிலும் பாதிக்கும். கல்லீரல் செயல்பாடு குறையத் தொடங்கும்போது, உடல் முக்கியமான வளர்சிதை மாற்றப் பணிகளைச் செய்வது கடினமாக மாறுகிறது. இது உங்களுக்கு உடல் சோர்வு, பலவீனம் மற்றும் ஒட்டுமொத்த உடல்நலக்குறைவை ஏற்படுத்தும்.

அடிவயிற்றில் வீக்கம் மற்றும் வலி
அடிவற்றில் திரவம் குவியும் நிலை ஆஸ்கைட்ஸ் என்று அழைக்கப்படுகிறது. சிரோசிஸ் பிரச்சனை உங்கள் வயிற்றில் திரவத்தை உருவாக்கலாம். இதன் விளைவாக வயிற்றில் வீக்கம் மற்றும் வலி ஏற்படலாம். இந்நிலையில், ஆஸ்கைட்ஸ் மற்ற உறுப்புகளுக்கு அழுத்தம் கொடுத்து உங்கள் வலியை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இரைப்பை குடல் இரத்தப்போக்கு
கல்லீரல் இழைநார் வளர்ச்சியானது அசாதாரண குடல் இரத்தப்போக்கை ஏற்படுத்தலாம். இது உணவுக்குழாயின் மூலம் மலத்தில் இரத்தத்தை வெளியேற்றுகிறது. கல்லீரல் மோசமடைவதால், குறைவான இரத்த உறைவு புரதங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இது இரத்தப்போக்கு உள் மற்றும் வெளிப்புறமாக கட்டுப்படுத்த எளிதாக்குகிறது.

மன நிலையில் மாற்றங்கள்
கல்லீரல் சரியாக வேலை செய்யாதபோது, பொதுவாக உடலில் இருந்து வடிகட்டப்படும் நச்சுகள் (அம்மோனியா) இரத்த ஓட்டத்தில் குவிந்து, குழப்பம், மனநிலையில் மாற்றம் மற்றும் நினைவாற்றல் பிரச்சினைகள் போன்ற மன மாற்றங்களை ஏற்படுத்தும். சில நேரங்களில், சிரோசிஸ் குணப்படுத்த முடியாத பிரச்சனையாக இருக்கலாம். ஆனால் அறிகுறிகள் மற்றும் சிக்கல்களை நிர்வகிக்க சில வழிகள் உள்ளன. அதன் மூலம் நிலைமை மோசமடைவதை தடுக்கலாம்.



Click it and Unblock the Notifications
