Latest Updates
-
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்!
ஆண்களே! எந்த வயதில் உங்க ஆணுறுப்பின் வளர்ச்சி நிற்கிறது தெரியுமா? இப்போ உங்க வயசு என்ன?
பொதுவாக ஆண்களின் பிறப்புறுப்பை பற்றி பல்வேறு கட்டுக்கதைகள் நிலவி வருகின்றன. பிறப்புறுப்பை நீங்கள் சுகாதாரமாக வைத்திருப்பது ஒருபுறம் இருந்தாலும், அது உங்கள் பாலியல் வாழ்க்கையோடும் சம்பந்தப்பட்டுள்ளது. பாலியல் இன்பத்தில் ஆண்குறி அளவு முக்கிய பங்கு வகிப்பதாக பொதுவாக ஒரு கருத்து கூறப்படுகிறது. இதனால், பல ஆண்கள் தங்கள் ஆண்குறியின் நீளம் மற்றும் அளவை அதிகரிக்க முயற்சி செய்கிறார்கள்.
ஆண்குறி எப்போது வளரத் தொடங்கியது, அது எப்போது தன் வளர்ச்சியை நிறுத்தும் என்பதை பற்றி ஆண்களுக்கு சரியான புரிதல் இல்லை. ஆண்கள் பொதுவாக பருவமடையும் போது ஆண்குறி வளர்ச்சி அடையத் தொடங்குகிறது. பருவமடைதல் தொடங்குவதற்கான பொதுவான வயது வரம்பு 9 முதல் 14 வயது வரை இருக்கும்.

ஆணுறுப்பின் வளர்ச்சி பொதுவாக வயது வரம்பு மற்றும் சிலருக்கு பருவமடைதலுக்கு பிறகு கூட ஏற்படலாம். பருவமடையும் போது, பொதுவாக ஆண்களில் சராசரியாக 12 வயதில் ஆண்குறியின் வளர்ச்சி தொடங்குகிறது. இது சராசரி வயது மற்றும் உடல் வளர்ச்சி பொறுத்து நபருக்கு நபர் அடிப்படையில் மாறுபடும். உங்கள் ஆண்குறியை பற்றி தெரியாத பல விஷயங்களை இக்கட்டுரையில் காணலாம்.

விரை வளர்ச்சி
விரை வளர்ச்சி என்பது பொதுவாக ஆண்கள் பருவமடைவதற்கான முதல் அறிகுறியாக இருக்கும். இது விதைப்பையில் ஏற்படும் மாற்றங்களுடன் தொடங்குகிறது. விதைப்பையின் தோல் கருமையாகி, பெரிதாகிறது. தோல் மெல்லியதாகி, சிறிய புடைப்புகள் மற்றும் மயிர்க்கால்களை உருவாக்குகிறது.

ஆண்குறி வளர்ச்சியை எப்போது நிறுத்துகிறது?
ஆண்குறி முதலில் நீளமாகவும் பின்னர் சுற்றளவிலும் வளரத் தொடங்கும். உங்களின் உயரத்தைப் போலவே, ஆணுறுப்பின் வளர்ச்சியும் இருக்கும். பருவமடையும்போது, வளரத் தொடங்கும், இந்த வளர்ச்சி சுமார் ஐந்து ஆண்டுகள் வரை நீடிக்கும். அந்த வகையில், பொதுவாக 18 முதல் 21 வயதில் ஆணுறுப்பின் வளர்ச்சி முடிவடைகிறது.

அளவுகள் என்ன சொல்கிறது?
ஆண்குறி வளர்ச்சி, வடிவம் மற்றும் அளவு பெரிதும் மாறுபடும். இது ஒவ்வொரு ஆணுக்கும் வேறுபடும். சாதாரண, சரியான அல்லது சிறந்த அளவுகள் என்று எதுவுமில்லை. சிறுநீர் கழித்தல் அல்லது உடலுறவு போன்ற நிலையான செயல்பாடுகளில் நீங்கள் சிக்கல்களை பிரச்சனைகளை சந்திக்கும் வரை, ஆண்குறி அளவைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. உங்கள் ஆண்குறியில் பிரச்சனை இருந்தால், உடனே மருத்துவரை நாடுங்கள்.

உங்கள் ஆண்குறியின் அளவை அதிகரிக்க முடியுமா?
உங்கள் ஆண்குறியின் அளவை அதிகரிக்கக்கூடிய மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை விருப்பங்கள் உள்ளன. இருப்பினும், இவற்றில் பெரும்பாலானவை பல அபாயங்கள் மற்றும் சிக்கல்களை உங்களுக்கு ஏற்படுத்தலாம். மேலும், எந்த பக்கவிளைவுகளும் இல்லாமல் ஆணுறுப்பின் அளவைப் பாதுகாப்பாக அதிகரிக்க முடியும் என்பதைச் சரிபார்க்க போதுமான அறிவியல் சான்றுகளுடன் கூடிய மருந்து மாத்திரைகள், சப்ளிமெண்ட்ஸ், கிரீம்கள் அல்லது உடற்பயிற்சிகள் எதுவும் இல்லை. இந்த வழிகள் சிக்கலானவை மற்றும் முறையான மருத்துவ பரிந்துரை இல்லாமல் எதையும் முயற்சிக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஆணுறுப்பின் அளவு முக்கியமா?
பல ஆய்வுகளில், ஆண்களின் சராசரி ஆண்குறியின் அளவை மிகைப்படுத்தி மதிப்பிடுகின்றனர். இது அவர்களின் சராசரி அளவிலான ஆண்குறியை பற்றி சந்தேகத்தையும் பயத்தையும் ஏற்படுத்துகிறது. ஆண்குறியின் அளவைப் பற்றி நீங்கள் தவறாக நம்பிக்கொண்டிருக்கும் பல கட்டுக்கதைகள் உள்ளன. ஆணுறுப்பின் அளவு, உங்கள் துணை உங்களை எவ்வளவு கவர்ச்சியாகக் காண்கிறார் அல்லது நீங்கள் எவ்வளவு சிறப்பாக உடலுறவு கொள்கிறீர்கள் என்பதை பற்றி ஏதும் கூறவில்லை. உங்கள் ஆணுறுப்பின் அளவு உங்கள் டெஸ்டோஸ்டிரோன் அளவுகள், ஆண்மைத்தன்மை அல்லது இனப்பெருக்கத் திறன் ஆகியவற்றின் அடையாளம் அல்ல என்பதை புரிந்துகொள்ளுங்கள். உங்கள் உயரம் உங்கள் ஆண்குறியின் அளவைக் குறிக்கவில்லை, இவை அனைத்தும் ஆதாரம் இல்லாத கட்டுக்கதையான கருத்துக்கள்.



Click it and Unblock the Notifications