Latest Updates
-
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சௌ சௌ வாங்குனா இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் அஸ்தமனமாவதால் துரதிர்ஷ்டத்தால் துரத்தப்படப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஈவ்னிங் டைம்ல ந்த செட்டிநாடு உருளைக்கிழங்கு அடையை செஞ்சு கொடுங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
உலகில் எந்த நாட்டில் இன்டர்நெட் மிகவேகமாக உள்ளது தெரியுமா? இந்தியாவின் இன்டர்நெட் வேகம் என்ன தெரியுமா? -
ஆந்திரா பூண்டு மிளகு கார குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
எலான் மஸ்க் அவருடைய பணத்தை பிரித்துக் கொடுத்தால் பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா? -
டிபன் சென்டர் டிபன் சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. அது என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
உங்க சருமத்தில் ஏற்படும் மாற்றங்கள் உங்க கிட்னி அசாதாரண ஆபத்தில் இருப்பதன் அறிகுறியாம்... ஜாக்கிரதை!
சிறுநீரகம் நமது உடலின் மிகவும் முக்கியமான உறுப்பாக இருப்பதால், அதில் ஏற்படும் பாதிப்பு நமது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.
நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது மிகவும் பொதுவான நிலையாக மாறிவருகிறது. நீரிழிவு நோய், பெருங்குடல் அழற்சி மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றின் அதிக நிகழ்வுகள் மற்றும் பரவல் காரணமாக இந்தியாவில் இது மிகவும் பொதுவான நோயாக மாறிவருகிறது, இது நாள்பட்ட சிறுநீரக நோய்க்கான பொதுவான காரணங்களாகும்.

சிறுநீரகம் நமது உடலின் மிகவும் முக்கியமான உறுப்பாக இருப்பதால், அதில் ஏற்படும் பாதிப்பு நமது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கும். உங்கள் சிறுநீரகத்தில் ஏற்படும் பாதிப்பை உங்கள் உடல் பல்வேறு அறிகுறிகளின் மூலம் வெளிப்படுத்தும். இவற்றை ஆரம்பத்திலேயே கண்டறிந்து நடவடிக்கை எடுத்தால் பல ஆபத்துக்களைத் தடுக்காலம்.

பொதுவான அறிகுறிகள்
சிறுநீரக நோய் மூச்சுத் திணறல், சோர்வு, தூங்குவதில் சிரமம் மற்றும் சிறுநீரில் இரத்தம் போன்ற பல்வேறு ஆரம்பகால அறிகுறிகளைக் கொண்டுள்ளது. ஆரம்ப கட்டங்களில், சில மிக நுட்பமான அறிகுறிகளில் ஒன்று பாதங்களில் வீக்கம். இவை மட்டுமின்றி சருமத்திலும் சில அறிகுறிகள் தோன்றலாம்.

சிறுநீரக பிரச்சினையைக் குறிக்கும் சரும பிரச்சினைகள்
சிறுநீரகத்தில் சிக்கல்கள் இருக்கும் போது பாதிக்கப்பட்டவர் சருமத்தின் அரிப்பு அல்லது தோல் வெடிப்பு அல்லது சருமத்தின் வறட்சி போன்ற சில தோல் நிலைகளை உருவாக்குவார்கள், இது உடலில் சிறுநீர் அளவு அதிகமாக இருப்பதால். குறிப்பாக டயாலிசிஸ் செய்யும் நோயாளிகள், அரிப்பு போன்ற பல தோல் அறிகுறிகளைப் அடிக்கடி அனுபவிக்கிறார்கள், இது மீண்டும் உடலில் சிறுநீரின் அளவு அதிகமாக இருப்பதால் ஏற்படுகிறது. இதனால் சருமத்தில் கீறல்கள் மற்றும் தடிப்புகள் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.

சருமத்தில் மஞ்சள் நிறம் தோன்றுதல்ருமத்தில் மஞ்சள் நிறம் தோன்றுதல்
இரத்தம் சுத்தப்படுத்தப்படாததால் இந்த நிலை ஏற்படுகிறது. சிறுநீரக நோயால் தோலில் ஏற்படும் பொதுவான மாற்றங்களில் ஹைப்பர் பிக்மென்டேஷன் மற்றும் தோலில் மஞ்சள் நிறமாற்றம் ஆகியவை அடங்கும்.

சிறுநீரக நோயைக் கண்டறிதல்
ஒரு நோயாளிக்கு விவரிக்க முடியாத தோல் அறபு அல்லது அசாதாரண தடிப்புகள் இருந்தால், சி.கே.டி-க்கான சிறுநீரகப் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. சில சமயங்களில் தோல் பிரச்சனைக்கான அடிப்படைக் காரணம் நாட்பட்ட சிறுநீரக நோயாக இருக்கும்.

கடுமையான அரிப்பு
இது சிறுநீரக நோய்களின் மிகவும் பொதுவான மற்றும் மோசமான அறிகுறி ஆகும். இரவில் அரிப்பு மோசமாகி, நோயாளி தூங்குவதை கடினமாக்குகிறது.

சிகிச்சை முறைகள்
நாள்பட்ட சிறுநீரக பிரச்சினையால் ஏற்படும் இந்த சரும பிரச்சினைகளுக்கு பெரும்பாலும் சிகிச்சையளிப்பது கடினம். அடிப்படை நாள்பட்ட சிறுநீரக நோய்க்கு சிகிச்சை அளித்து, சிறுநீரக பரிசோதனையை மேம்படுதினால், நிச்சயமாக, சிறுநீரக நிலை மேம்படும். இருப்பினும், மற்றபடி நாம் பொதுவாகப் பயன்படுத்தும் க்ரீம்கள் சருமத்தை மிருதுவாக மாற்றும். அவை பொதுவாக அரிப்பைக் குறைக்க உதவுகின்றன.

சிறுநீரக நோயை தடுக்க உதவும் டயட்
உங்கள் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க விரும்பினால், அதிக உப்பு உள்ள எதையும் தவிர்க்கவும். உப்பு சேர்க்கப்பட்ட உணவு மற்றும் உறைந்த இரவு உணவுகள் மற்றும் துரித உணவு போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிட வேண்டாம். நீங்கள் தினமும் உட்கொள்ளும் சோடியத்தின் அளவு மற்றும் உங்கள் புரத உட்கொள்ளலைக் கட்டுப்படுத்த முயற்சிக்கவும். உங்கள் குடும்பத்தில் யாருக்கேனும் சிறுநீரக பிரச்சனைகள் இருந்தால் குறைந்த பொட்டாசியம் உணவுகளை தேர்வு செய்வது நல்லது.



Click it and Unblock the Notifications