Latest Updates
-
1 கைப்பிடி கொடாமல்லியும், 2 தக்காளியும் இருந்தா.. காலையில் இட்லிக்கு இப்படி சட்னி செய்யுங்க.. -
அக்டோபர் 19, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நவம்பர் 12 வரை இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஒரே இரவில் பளிச்சென்று ஜொலிக்கணுமா? அப்ப நைட் டைம்-ல இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சூரியன் துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளதால் நவம்பர் மாதம் வரை ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் -
5 முட்டை இருந்தா இந்த ஆப்கானி முட்டை மசாலாவை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடற டேஸ்ட்ல இருக்கும் -
ஆயுத பூஜைக்கு இப்படி சுண்டல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப வெளிப்டையானவர்களாக இருப்பார்களாம் - இவங்க வாயில பொய் வரது ரொம்ப கஷ்டம் -
Ayudha Pooja 2026: ஆயுத பூஜை ஏன் கொண்டாடப்படுகிறது? பூஜை செய்ய உகந்த நேரம் எது? -
வெள்ளை நிற ஆடையில் உள்ள விடாப்பிடியான கறைகளை நீக்கும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க
இந்த பிரச்சனை உள்ள பெண்களுக்கு அந்தரங்க உறுப்பில் ஆபத்து ஏற்பட வாய்ப்பு அதிகமாம்...ஜாக்கிரதை!
நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பல பாக்டீரியா தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. இது பாக்டீரியாவின் வளர்ச்சியை அழிக்கலாம் அல்லது மெதுவாக்கலாம். மேலும், இது சிக்கலான நிலைமைகளுக்கு வழிவகுக்கும்.
ஈஸ்ட் தொற்று என்பது கேண்டிடா அல்பிகான்ஸ் என்ற பூஞ்சையின் அதிகப்படியான வளர்ச்சியால் ஏற்படும் பூஞ்சை தொற்று ஆகும். பொதுவாக, உங்கள் யோனியில் கேண்டிடா மற்றும் பாக்டீரியா உள்ளிட்ட ஈஸ்ட் சீரான கலவை உள்ளது. இருப்பினும், உங்கள் யோனியில் ஈஸ்ட் அதிகமாக வளரும் போது, அது தொற்றுக்கு வழிவகுக்கும். ஈஸ்ட் தொற்று நோய் உங்களை அவதிப்படுத்தும் மிகவும் எரிச்சலூட்டும். இது பிறப்புறுப்பில் அரிப்பு மற்றும் எரிச்சல், எரியும் உணர்வு, பிறப்புறுப்பு வீக்கம், யோனி வலி, சொறி மற்றும் தடித்த, வெள்ளை, துர்நாற்றம் இல்லாத பிறப்புறுப்பு வெளியேற்றம் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். பல காரணிகள் ஈஸ்ட் தொற்றுக்கு வழிவகுக்கும். ஆதலால், பெண்கள் தங்கள் ஆரோக்கியம் குறித்து கவனமாக இருக்க வேண்டும்.

யோனி பகுதியை சுத்தமாகவும் ஈஸ்ட் தொற்றுக்கள் ஏற்படாமலும் பாதுகாக்க வேண்டும். பெண்களே! இந்த சர்வேதச மகளிர் தினத்தில் உங்கள் யோனி ஆரோக்கியம் குறித்து நீங்கள் பல விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டும். உங்கள் யோனியில் ஈஸ்ட் தொற்று ஏற்படுவதற்கான காரணங்கள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

உயர் இரத்த சர்க்கரை அளவு
ஈஸ்ட் தொற்று சர்க்கரை நோயாளிகளை அதிகமாக பாதிக்கும். அதிக இரத்த சர்க்கரை அளவு உள்ளவர்களுக்கு யோனியில் ஈஸ்ட் தொற்று அதிகமாக வளரக்கூடும். உடலில் அதிகப்படியான இரத்த சர்க்கரை பூஞ்சைகளின் இனப்பெருக்கம் செய்யும் இடமாக செயல்படுகிறது. மேலும், அதிகப்படியான சர்க்கரையானது நெருக்கமான பகுதியில் உள்ள pH சமநிலையை பாதிக்கிறது. இது ஈஸ்ட் தொற்று மேலும் வளர வழிவகுக்கிறது.

நுண்ணுயிர் எதிர்ப்பிகள்
நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பல பாக்டீரியா தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. இது பாக்டீரியாவின் வளர்ச்சியை அழிக்கலாம் அல்லது மெதுவாக்கலாம். மேலும், இது சிக்கலான நிலைமைகளுக்கு வழிவகுக்கும். இருப்பினும், நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் பயன்பாடு பல பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். அவற்றில் ஒன்று ஈஸ்ட் தொற்று. பரந்த அளவிலான பாக்டீரியாக்களை அழிக்கும் பரந்த-ஸ்பெக்ட்ரம் நுண்ணுயிர் எதிர்ப்பிகள், புணர்புழையில் உள்ள ஆரோக்கியமான பாக்டீரியாக்களையும் கொல்லலாம். இது ஈஸ்ட் தொற்றின் அதிக வளர்ச்சியை ஏற்படுத்தும்.

பேண்டி லைனர்கள்
பேண்டி லைனர்கள் ஈஸ்ட் தொற்றுக்கு வழிவகுக்கும் என்பதற்கு உறுதியான ஆதாரம் இல்லை என்றாலும், நாள்பட்ட ஈஸ்ட் தொற்றுக்கு ஆளாகும் பெண்கள் பேண்டி லைனர்களைப் பயன்படுத்துவதற்கு எதிராக அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏனெனில், அவை உங்கள் யோனியில் உள்ள ஈரப்பதத்தைப் பிடிக்கும் மற்றும் காற்று ஓட்டத்தைத் தடுக்கும், இது ஈஸ்ட் தொற்றை அதிகமாக உருவாக்கும்.

சுகாதார பொருட்கள்
மெடிக்கல் நியூஸ் டுடே கருத்துப்படி, உங்கள் யோனி பகுதியை கழுவுதல் மற்றும் பிற வகையான யோனி சுத்தப்படுத்திகள் பயன்படுத்துவது பாக்டீரியா தொற்றுக்கான அதிக ஆபத்தை 3.5 மடங்கு அதிகரிக்கிறது. அதேபோல, சிறுநீர் பாதை தொற்றுகளின் அபாயத்தை 2.5 மடங்கு அதிகரிக்கிறது. ஜெல் சானிடைசர்கள் ஈஸ்ட் நோய்த்தொற்றின் எட்டு மடங்கு அதிக ஆபத்துடன் தொடர்புடையவை என்று சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. அத்துடன் பாக்டீரியா தொற்றுக்கான ஆபத்து கிட்டத்தட்ட 20 மடங்கு அதிகம் என்றும் அவை தெரிவிக்கிறது. ஆதலால், உங்கள் அந்தரங்க பகுதியில் பயன்படுத்தும் பொருட்கள் குறித்து நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

உள்ளாடைகள் அணிவதில் தவறுகள்
இறுக்கமான உள்ளாடைகள் உங்கள் அந்தரங்க பகுதியை சுவாசிக்க கடினமாக்குகிறது. இறுக்கமான மற்றும் செயற்கை உள்ளாடைகள் வெப்பம் மற்றும் ஈரப்பதத்தை தக்க வைக்கும், இது ஈஸ்ட் தொற்றுகளை மிகவும் பரவலாக்குகிறது. ஆதலால், பருத்தி உள்ளாடைகளை அணிய நிபுணர்கள் எப்போதும் பரிந்துரைக்கிறார்கள். இது ஈரப்பதத்தை ஆவியாக்க அனுமதிக்கிறது. மேலும், உங்கள் உள்ளாடைகள் தளர்வாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications
