Latest Updates
-
ஆயுத பூஜைக்கு வாங்குன பொரியும், 2 முட்டையும் இருந்தா.. நைட் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. அள்ளும்.. -
Skin Care: இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுவது அதிக முகப்பருக்களை ஏற்படுத்துமாம் - கவனமா சாப்பிடுங்க -
இந்த 4 ராசி ஆண்கள் 'ஒருவனுக்கு ஒருத்தி' என்று வாழும் நேர்மையான கணவராக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
அக்டோபர் 24-ல் வக்ரமடையும் புதன்: இந்த 5 ராசிக்காரங்க பேச்சால் பல பிரச்சனைகளை சந்திப்பாங்க.. உஷார்.. -
உங்கள் பழைய வெள்ளி நகைகளை செலவே இல்லாமல் வீட்டிலேயே புதிது போல மாற்றும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரியுது சொல்லுங்க.. உங்கள பத்தி சொல்றோம்.. -
இராவணனுக்கு 10 தலைகள் கிடைத்ததற்கு பின்னால் உள்ள கதை என்ன தெரியுமா? அந்த 10 தலைகளின் அர்த்தம் என்ன தெரியுமா? -
3/4 கிலோ சிக்கன் வாங்குனா.. இப்படி கெட்டி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
பொரி மிச்சமிருந்தா இந்த மாதிரி மொறுமொறுனு வடை சுடுங்க - டீ, காபியோட சாப்பிட சூப்பரா இருக்கும் -
லென்ஸ் போட்டிருக்கீங்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க.. பார்வைக்கே ஆபத்தாயிடும் - எச்சரிக்கும் கண் டாக்டர்!
பெண்கள் வயாகரா எடுத்துக்கொள்ளலாமா? எடுத்துக் கொண்டால் என்ன நடக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க!
ஆண்களுக்கு விறைப்பு செயலிழப்பு பிரச்சினை இருந்தால் அவர்கள் அதனை தற்காலிகமாக குணப்படுத்த வயாகராவை உபயோகிக்கலாம் என்பது அனைவரும் அறிந்த உண்மை.
ஆண்களுக்கு விறைப்பு செயலிழப்பு பிரச்சினை இருந்தால் அவர்கள் அதனை தற்காலிகமாக குணப்படுத்த வயாகராவை உபயோகிக்கலாம் என்பது அனைவரும் அறிந்த உண்மை. இந்த சிறிய நீல நிற மாத்திரை பல ஆண்களின் பாலியல் வாழ்க்கையை மேம்படுத்த உதவியது.

பெண்கள் வயாகரா மாத்திரையை எடுத்துக் கொண்டால் என்ன நடக்கும்? வயாகரா பெண்கள் உடலில் வேலை செய்யுமா? வயாகரா பெண்களின் உடலில் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தும்? என்று எப்போதாவது சிந்தித்து இருக்கிறீர்களா? இந்த கேள்விகளுக்கான பதில்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

வயாகரா பெண்கள் உடலில் வேலை செய்யுமா?
பெண்கள் வயாகராவை பாலியல் உச்சக்கட்ட பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தலாம், இதில் தாமதமான உச்சக்கட்டம் அல்லது விரைவான உச்சகட்டம் போன்றவை அடங்கும். படுக்கையில் திருப்தியாக இருப்பது எப்பொழுதும் எளிதல்ல. மிகவும் பொதுவான பெண் பாலியல் பிரச்சினைகளில் ஒன்று பாலியல் ஆர்வமின்மை மற்றும் உடலுறவில் விருப்பமின்மை ஆகியவை அடங்கும். இது சில நேரங்களில் ஹார்மோன் மாற்றங்கள் அல்லது புற்றுநோய், நீரிழிவு அல்லது இருதய நோய் போன்ற அடிப்படை சுகாதார நிலைமைகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.

பாலியல் தூண்டுதல் பிரச்சனை உள்ள பெண்கள் வயாகரா சாப்பிடலாமா?
வயாகரா எவ்வாறு செயல்படுகிறது என்றால், பிறப்புறுப்புகளுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. அந்த வகையில், அதிக உணர்திறன் மற்றும் மேம்பட்ட பாலியல் தூண்டுதல் இருக்கும். இருப்பினும், பாலியல் ஆசை குறைவாக இருக்கும் பெண்களுக்கு இது பயனளிக்காது.

பெண்கள் வயாகரா எடுத்துக்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள்
இந்த சிறிய நீல மாத்திரை ஆண்கள் இரத்த நாளங்களை விரிவுபடுத்தவும், ஆணுறுப்புக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. அதேபோன்று, பெண்களைப் பொறுத்தமட்டில், பிறப்புறுப்புகளுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது என்று நிபுணர் விளக்குகிறார்கள். இது பாலியல் செயல்பாடு, உணர்திறன் மற்றும் விழிப்புணர்வை அதிகரிக்க உதவும். இருப்பினும், இது சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும் மற்றும் பிற மருந்துகளுடன் தொடர்பு கொள்ளலாம். இந்த பக்க விளைவுகள் ஆண்கள் அனுபவிக்கும் அதே பக்க விளைவுகள் போல் இருக்கலாம். ஆய்வின் படி, வயாகரா அல்லது பிற விறைப்புச் செயலிழப்பு மருந்துகளை தொடர்ந்து எடுத்துக் கொண்டால், கடுமையான கண் பிரச்சினைகள் உருவாகும் ஆபத்து 85 சதவீதம் அதிகரிக்கும்.

பிற பக்க விளைவுகள்
- தலைசுற்றல்
- தலைவலி
- குறைந்த இரத்த அழுத்தம்
- கண்கள் முன்னால் ஒளி தோன்றுதல்

உளவியல் சிகிச்சைகள்
எந்தவொரு மனச்சோர்வு அல்லது சிகிச்சையளிக்கப்படாத கவலையும் பெண்களுக்கு பாலியல் செயலிழப்பை ஏற்படுத்தலாம். உடலுறவு அல்லது பிற அம்சங்களைப் பற்றி உங்கள் துணையுடன் நீண்டகால மோதல்கள் கூட உங்கள் பாலியல் உறவைப் பாதிக்கலாம். தனித்தனியாகவோ அல்லது தம்பதியாகவோ, உணர்ச்சி அல்லது உளவியல் தடைகளை ஆலோசனை மூலம் தீர்க்க முடியும்.

ஹார்மோன் சிகிச்சை
அறிகுறிகளைப் பொறுத்து, கிரீம்கள், யோனி மூலம் நிர்வகிக்கப்படும் மருந்துகள் அல்லது வாய்வழி மருந்துகள் மூலம் ஹார்மோனை சமநிலைப்படுத்த பரிந்துரைக்கப்படலாம்.



Click it and Unblock the Notifications
