Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
இந்த செயல்கள் ஆணுறுப்பின் ஆரோக்கியத்தை பாதிப்பதோடு ஆணுறுப்பில் முறிவையும் ஏற்படுத்துமாம்... உஷார்..!
அந்தரங்கப் பகுதிகளின் ஆரோக்கியத்தைப் பற்றி யாரும் அதிகம் விவாதிப்பதில்லை, ஆனால் அனைவரும் இதனைப் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்
அந்தரங்கப் பகுதிகளின் ஆரோக்கியத்தைப் பற்றி யாரும் அதிகம் விவாதிப்பதில்லை, ஆனால் அனைவரும் இதனைப் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். மனித உடலின் மிகவும் உணர்திறன் வாய்ந்த உறுப்புகள் யோனியும், ஆணுறுப்பும்தான். அந்தரங்க உறுப்புகளைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய உள்ளது.

மனித உடல்கள் ஒவ்வொரு நபரிடமும் வேறுபடுகின்றன, இருப்பினும் தனிப்பட்ட உறுப்புகளை கையாளும் போது நீங்கள் செய்யக்கூடாத சில அடிப்படை விஷயங்கள் உள்ளன. குறிப்பாக ஆணுறுப்பை கையாளும் போது கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். ஆணுறுப்பு ஆரோக்கியமாகவும், சீராகவும் செயல்பட வேண்டுமெனில் சில வாழ்க்கைமுறைகளை பின்பற்ற வேண்டும். அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

அதிகம் புகைபிடிக்கக்கூடாது
புகைப்பிடித்தல் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி ஆணுறுப்பிற்கும் மிகவும் தீங்கு விளைவிக்கும். புகைபிடிப்பதால் ஆண்குறியின் திசுக்கள் சேதமடைகின்றன, அதாவது உடலுறவில் ஈடுபடும் போது விறைப்புத்தன்மையில் குறைபாடு ஏற்படும். விறைப்புத்தன்மை என்பது ஆண்களில் பொதுவாகக் காணப்படும் பிரச்சனைகளில் ஒன்றாகும், அதற்கு புகைபிடித்தல் முக்கியமான காரணமாகும்.

அளவிற்கு அதிகமாக மது அருந்துவது
அதிகப்படியான குடிப்பழக்கம் உங்கள் உடலுறவில் குறைபாட்டை ஏற்படுத்தும். எனவே நீங்கள் குடிப்பழக்கம் உள்ளவராகவும், அளவுக்கு அதிகமாக குடிப்பவராகவும் இருந்தால், அந்தப் பழக்கத்தைக் கைவிட்டு, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வழிநடத்துங்கள். ஏனெனில் நீங்கள் அவ்வாறு செய்யாவிட்டால் அது உங்கள் பாலியல் வாழ்க்கையை மோசமாக பாதிக்கும்.

ஆணுறுப்பை சுத்தம் செய்ய சோப்பு மற்றும் தண்ணீரை பயன்படுத்தவும்
உங்கள் ஆணுறுப்பை எப்போதும் சுத்தமாகவும், துர்நாற்றம் இல்லாமலும் வைத்துக்கொள்வது ஆணுறுப்பின் சுகாதாரத்திற்கு அவசியமானது. ஆனால் ஆணுறுப்பை சுத்தப்படுத்த எப்போதும் சோப்பு மற்றும் தண்ணீரை மற்றும் பயன்படுத்தவும். ஷாம்பூ, தரை துடைப்பான்கள் அல்லது வேறு ஏதேனும் க்ளீனர்களை பயன்படுத்துவது ஆணுறுப்பில் விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தும்.

ஆணுறுப்பில் அதிக உராய்வு ஏற்படுவதைத் தவிர்க்கவும்
ஆணுறுப்பின் மீது சிறிதளவு உராய்வு பாதிப்பை ஏற்படுத்தாது, ஆனால் உராய்வு அதிகமாக இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தீவிர உராய்வு உங்கள் ஆணுறுப்பில்எரிச்சல் ஏற்படுவதற்கு வழிவகுக்கும், மேலும் சிகிச்சை பெற மருத்துவமனைக்குச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை. எனவே உங்கள் ஆணுறுப்பை கையாளும் போது எப்போதும் கவனமாக கையாளவும்.

ஆண்குறியை இழுப்பது தவிர்க்கப்பட வேண்டும்
உடலுறவு மற்றும் சுயஇன்ப நேரங்களைத் தவிர, உங்கள் ஆண்குறியை அதிகமாக இழுப்பதைத் தவிர்க்கவும். சில ஆண்களுக்கு எந்த காரணமும் இல்லாமல் ஆண்குறியை இழுக்கும் இந்த வித்தியாசமான பழக்கம் இருக்கும். இது உங்கள் ஆண்குறியை வளர்க்க உதவும் என்று நீங்கள் நினைத்தால், அது முற்றிலும் தவறாகும். இது உங்கள் நேரத்தை வீணடிப்பதோடு ஆணுறுப்பின் ஆரோக்கியத்தையும் சிதைக்கும்.

ஆபாசப்படங்களில் பார்க்கும் அனைத்தையும் முயற்சிக்காதீர்கள்
நீங்கள் ஆபாசப்படங்களில் பார்க்கும் அனைத்தையும் முயற்சிக்க வேண்டும் என்று நினைப்பது முட்டாள்தனமானது. ஏனெனில் ஆபாசப்படங்களில் காட்டப்படும் காட்சிகள் திட்டமிட்டு எடுக்கப்படுவது, ஆனால் நிஜ வாழ்க்கையில் உடலுறவு அப்படி இருக்காது. மேலும் அந்தரங்க உறுப்புகளில் உணவுப்பொருட்களை பயன்படுத்தக்கூடாது.

ஆணுறுப்பை கடினமாக கையாளக்கூடாது
ஆணுறுப்பு மிகவும் உணர்திறன் வாய்ந்ததாகும், எனவே தீவிர உடலுறவின் போது கூட ஆணுறுப்பை அடிப்பதோ அல்லது கடினமாக கையாளுவதோக் கூடாது. இதனால் ஆணுறுப்பில் வலி மற்றும் பல பின்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். ஆபாசபடத்தைப் பார்த்து முயற்சிப்பது கடுமையான காயத்தை ஏற்படுத்தக்கூடும், எனவே இதுபோன்ற பரிசோதனைகளைத் தவிர்க்குமாறு பரிந்துரைக்கப்படுகிறது.

ஆணுறுப்பை அதிகம் வளைக்கக்கூடாது
ஆணுறுப்பு எந்த கோணத்திலும் வளைந்து போகாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. உங்கள் ஆணுறுப்பு நிமிர்ந்து இருந்தால், அது குறிப்பிட்ட கோணங்களில் வளைந்துவிடாமல் இருக்க சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் உடலுறவில் ஈடுபடும்போது காயப்படுத்திக் கொள்ளாதீர்கள். நீங்கள் பொசிஷன்களை அடிக்கடி மாற்றிக்கொண்டிருக்கும் நிலையில், உங்கள் ஆண்குறி பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யவும்.ஏனெனில் சில பொசிஷன்களில் ஆணுறுப்பில் முறிவு ஏற்பட வாய்ப்புள்ளது.



Click it and Unblock the Notifications