Latest Updates
-
தங்கம் ஏன் மஞ்சள் நிறத்தில் மட்டும் இருக்கிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சுக்ராதித்ய யோகத்தால் இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்.. பண மழை கொட்டும்.. -
கம்பு ரொட்டியும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
அக்டோபர் 22, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணும் - ஜாக்கிரதை -
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசியில் உருவாகும் குரு மங்கள யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
நவராத்திரிக்கு பின் உருவாகும் இரட்டை ராஜயோகத்தால் ஜெயிக்கிற குதிரையாக போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - ஆரோக்கியமா சூப்பரா இருக்கும் -
வாஸ்துப்படி அதிர்ஷ்டத்தை ஈர்க்க இந்த ஓவியங்களை வாங்கி வீட்டுல வையுங்க.. பண கஷ்டமே வராது! -
ஆயுத பூஜைக்கு வாங்குன பொரியும், 2 முட்டையும் இருந்தா.. நைட் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. அள்ளும்.. -
Skin Care: இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுவது அதிக முகப்பருக்களை ஏற்படுத்துமாம் - கவனமா சாப்பிடுங்க
உடலுறவால் உங்கள் ஆரோக்கியம் பாதிக்கப்படாமல் இருக்க உடலுறவிற்கு பிறகு என்ன செய்யணும் தெரியுமா?
இயல்பாகவே உடலுறவின் உச்சக்கட்டத்திற்குப் பிறகு ஆண், பெண் இருவரும் களைப்பாக உணர்வார்கள், அதனால் அவர்களின் உடலுக்கு அதிக ஓய்வு தேவைப்படும்.
இயல்பாகவே உடலுறவின் உச்சக்கட்டத்திற்குப் பிறகு ஆண், பெண் இருவரும் களைப்பாக உணர்வார்கள், அதனால் அவர்களின் உடலுக்கு அதிக ஓய்வு தேவைப்படும். ஆனால் சோம்பல் காரணமாக உடலுறவிற்குப் பிறகு படுக்கையிலேயே இருப்பது அவர்களுக்கு வேறுமாதிரியான பிரச்சினைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

உடலுறவிற்குப் பிறகு நீங்கள் உங்கள் பிறப்புறுப்புகளை சுத்தப்படுத்தவில்லை என்றால் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் போன்ற விரும்பத்தகாத நோய்த்தொற்றுகள் ஏற்படும் அபாயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. உடலுறவு உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்காமல் இருக்க நீங்கள் செய்ய வேண்டியது என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

சிறுநீர் கழிக்க வேண்டும்
உடலுறவுக்குப் பின் சிறுநீர் கழிப்பதன் மூலம் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம். உடலுறவின் போது, சில நேரங்களில் குதப் பகுதியிலிருந்து வரும் பாக்டீரியாக்கள் யோனி மற்றும் சிறுநீர் பாதை பகுதிகளுக்கு அருகில் முடிவடையும், மேலும் சிறுநீர் கழிப்பது பாக்டீரியா பரவாமல் உங்கள் சிறுநீர்ப்பையை அடைவதைத் தடுக்கிறது.

காண்டத்தை சோதனை செய்யுங்கள்
பாதுகாப்பான உடலுறவு கொள்வது எப்போதும் மோசமான விஷயமல்ல. ஏனெனில் இது உங்களை பல பிரச்சினைகளில் இருந்து பாதுகாக்கிறது. உங்கள் துணை ஆணுறை ஒன்றைப் பயன்படுத்தியிருந்தால், ஆணுறையில் கிழிசல் அல்லது விரிசல்கள் இருக்கிறதா என்பதை சரிபார்த்து, அதை முறையாக அப்புறப்படுத்த மறக்காதீர்கள். மேலும்முக்கியமானது என்னவென்றால், ஆணுறையை சோதனை செய்வது நீங்கள் ஒரு குழந்தைக்காக முயற்சிக்காவிட்டால், கர்ப்ப பயத்தைத் தடுக்க உதவும்.

வெளியேற்றத்தை சரிபார்க்கவும்
வித்தியாசமான நிற வெளியேற்றம் தொற்று அல்லது இரத்தப்போக்குக்கான அறிகுறியாக இருக்கலாம், எனவே உடலுறவுக்குப் பிறகு சரியாகச் சரிபார்த்து, பின்னர் உங்கள் யோனி வெளியேற்றத்தைக் கண்காணிக்கவும்.

யோனியை சுத்தம் செய்யுங்கள்
உடலுறவிற்குப் பிறகு யோனியின் வெளிப்புற பகுதிகளை ஈரமான துணி அல்லது டிஸ்யூ பேப்பரால் துடைக்கவும், அவை முக்கியமான பகுதிகளுக்கு ஏற்றவை. யுடிஐ தடுக்க முன்பகுதியில் இருந்து பின்னால் வரை துடைக்க மறந்து விடாதீர்கள்.

தண்ணீர் குடிக்கவும்
உடலுறவுக்குப் பிறகு எப்போதும் சிறுநீர் கழிப்பது ஒரு நல்ல பழக்கமாகும், மேலும் தண்ணீர் குடிப்பது உங்களுக்கு மேலும் சிறுநீர் கழிக்க உதவும். இது உங்கள் உடல் அதிக பாக்டீரியாக்களை வெளியேற்றவும், தொற்றுநோய்கள் வராமல் தடுக்கவும் உதவும். தீவிரமான உடலுறவிற்குப் பிறகு உங்களை நீரேற்றம் செய்வது நல்லது.

கைகளைக் கழுவவும்
உடலுறவின் போது உங்களுடைய அல்லது உங்கள் கூட்டாளியின் பிறப்புறுப்புகளைத் தொட்டிருந்தால், நீங்கள் பாக்டீரிய தோற்றால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே இந்த பாக்டீரியாக்களை அகற்ற சோப்பு மற்றும் தண்ணீரில் கைகளை கழுவ வேண்டும்.

செக்ஸ் பொம்மைகளை சுத்தப்படுத்தவும்
ஒருவேளை நீங்கள் செக்ஸ் பொம்மைகளை பயன்படுத்தியிருந்தால் பயன்படுத்தப்பட்ட செக்ஸ் பொம்மைகளை சரியாக சுத்தம் செய்யப்படாவிட்டால் நோய்த்தொற்றுகள் மற்றும் பால்வினை நோய்கள் பரவக்கூடும். பல்வேறு வகையான பொம்மைகளுக்கு சுத்தம் செய்வதற்கான குறிப்பிட்ட முறைகள், அதிலேயே போடப்பட்டிருக்கும். நீங்கள் பெட்டியை தூக்கி எறிந்திருந்தால், பொம்மையைத் துடைக்க திரவ பாக்டீரியா எதிர்ப்பு சோப்பு மற்றும் சூடான நீரைப் பயன்படுத்துவது நல்லது.



Click it and Unblock the Notifications
