Just In
- 4 min ago
சுயஇன்பத்தின் போது ஆண்கள் செய்யும் பொதுவான தவறுகள் இவைதான்...இனிமே இத பண்ணாதீங்க...!
- 39 min ago
தினமும் இந்த விஷயங்கள செஞ்சா போதுமாம்... உங்களுக்கு கொழுப்பு கல்லீரல் நோய் வராதாம் தெரியுமா?
- 2 hrs ago
30 ஆண்டுகளுக்கு பின் கும்பத்தில் நிகழும் சனி-சுக்கிர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு செம ஜாக்பாட் அடிக்கப்போகுது..
- 3 hrs ago
பால் குடிக்கும் முன் மறந்தும் இந்த உணவுகளை சாப்பிட்ராதீங்க.. இல்லன்னா பெரிய பிரச்சனையை சந்திப்பீங்க...
Don't Miss
- Movies
"அறம் வெல்லும்" கண்கலங்கிய விக்ரமன்...நெகிழ்ந்து பாராட்டிய பிக் பாஸ்!
- News
பஞ்சாபில் 88 வயது ஏழை தாத்தாவுக்கு அடித்த யோகம்.. லாட்டரி பரிசால் ஓவர் நைட்டில் கோடிகளை அள்ளினார்
- Sports
ஒருத்தரை நீக்கியே ஆகனும்.. 2வது ஒருநாள் போட்டி.. குழம்பி நிற்கும் ரோகித் சர்மா - என்ன காரணம்??
- Automobiles
தேஸ்வி சூர்யா திறந்த எமர்ஜென்ஸி கதவுக்குப் பின்னாடி இவ்வளவு பெரிய விஷயங்கள் இருக்குதா?
- Technology
கர்மா இஸ் பூமராங்! 62,084 கிமீ வேகத்தில் பூமியை நெருங்கும் சிறுகோள்! NASA கணிப்பு சொல்வது என்ன?
- Finance
Netflix சிஇஓ ராஜினாமா.. எல்லோருக்கும் பதில் சொல்ல முடியல..!
- Education
TNPSC Road inspector Recruitment 2023:சிவில் டிராட்மென்ஷிப் சான்றிதழ் இருந்தால் 716 பேருக்கு வாய்ப்பு..!
- Travel
மூணாறில் உறைபனி - சென்னை to மூணாறு காரில் செல்ல இது தான் சரியான நேரம்!
சுயஇன்பம் பற்றிய இந்த ரகசியங்களை யாரும் உங்ககிட்ட சொல்லி இருக்க மாட்டாங்க... அது என்ன தெரியுமா?
செக்ஸ் பல அம்சங்களைக் கொண்டுள்ளது. அவற்றில் எதுவும் இரண்டு நபர்களுக்கு ஒரே மாதிரியாக இருக்காது. எல்லா மக்களுக்கும் வெவ்வேறு விருப்பங்கள் மற்றும் ஆசைகள் இருக்கலாம். ஒரு பெண்ணின் தேவை ஒரு பெண்ணுக்கும் மற்றொரு பெண்ணுக்கும் பெரிதும் மாறுபடும். அதேபோல அவை ஆணிடமிருந்து முற்றிலும் மாறுபடும். சுயஇன்பம் உங்கள் ஈரோஜெனஸ் மண்டலங்களைப் பற்றிய ஒரு யோசனையை உங்களுக்கு வழங்குகிறது. உடலுறவு அல்லது வேறொருவருடன் பாலியல் செயல்களில் ஈடுபடும் போது ஏற்படும் சிக்கல்கள் இல்லாமல் உங்கள் உடல் மற்றும் உங்கள் பாலியல் உணர்வுகளைப் பற்றி அறிய சுயஇன்பம் ஒரு சிறந்த வழியாகும். தேவையற்ற கர்ப்பம் அல்லது பாலியல் பரவும் தொற்றுநோய் போன்ற ஆபத்துகளைப் பற்றி கவலைப்படாமல் நீங்கள் நன்றாக உணரலாம்.
நீங்கள் எப்படித் தூண்டப்படுகிறீர்கள் அல்லது தூண்டுதல் எப்படி இருக்கிறது என்று நீங்கள் யோசித்தால், பாலியல் இன்பம் மற்றும் உங்கள் உடலைப் பற்றி அறிய சுயஇன்பம் ஒரு சிறந்த வழியாகும். இதை பெற்றி ஆண்களும், பெண்களும் பொதுவெளியில் பேச வேண்டும். இக்கட்டுரையில், சுயஇன்பம் பற்றி ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் பற்றி காணலாம்.

ஆய்வு கூறுவது
18-49 வயதுடைய அமெரிக்கப் பெண்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 3 மாதங்களுக்கு ஒருமுறையாவது சுயஇன்பம் செய்கிறார்கள் என்று தி கின்சி இன்ஸ்டிடியூட் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இது ஒற்றைப் பெண்களுக்கும் ஜோடியாக இருப்பவர்களுக்கும் பொருந்தும். ஆனால், இந்தியாவில் சுயஇன்பம் பற்றி இன்னும் பல பெண்கள் தவறான கற்பனையையே வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லா பெண்களும் சுயஇன்பம் பற்றி உணரும் விதத்தையும் -- எது உங்கள் பாலியல் ஆர்வத்தை தூண்டுகிறது என்பதை பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும்.

மனநிலைக்கு ஏற்ப செய்யுங்கள்
ஒரு பாடல், சிற்றின்ப இசை, மங்கலான ஒளி அல்லது சில சிற்றின்பக் காட்சிகள் உங்கள் பாலியல் தூண்டுதலைத் தூண்டக்கூடியவை என பெரும்பாலும் சுயஇன்பத்தின் மூலம் தெரிந்து கொள்ளப்படுகின்றன. சில நேரங்களில் புனைகதைகள் கூட உங்களை இயக்கலாம். சுயஇன்பத்தின் மூலம் உங்கள் வழியை பரிசோதனை செய்து, உங்களுக்கு எது வேலை செய்கிறது என்பதைக் கண்டறியவும். எதில் நீங்கள் அதிக தூண்டுதலை பெறுகிறீர்கள் என்பதை தெரிந்துகொண்டு செயல்படுங்கள்.

இது யோனி பற்றி மட்டுமல்ல
உங்கள் புணர்புழையைத் தவிர உடலில் வேறு பல எரோஜெனஸ் மண்டலங்கள் இருக்கிறது. ஆம், உங்கள் உடலில் தொடுவதற்கும் உணர்ச்சிகளுக்கும் கூட உணர்திறன் கொண்ட பல்வேறு உடல் உறுப்புகள் உள்ளன. அவை காதுகள், கழுத்து, மார்பகக்காம்புகள், முதுகு, தொடை மற்றும் பல இடங்கள் உள்ளன. நீங்கள் இன்பத்தை பெற சுயஇன்பத்தை உங்களுக்கு பிடித்த மாதிரி எப்படி வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம். யாருக்கும் தெரிந்துவிடுமோ என்று பயந்து சுயஇன்பம் செய்யத் தயங்காதீர்கள்.

கிளிட்டோரிஸ் உங்கள் சிறந்த நண்பர்
பெண்களின் இந்த சிறிய அந்தரங்க உறுப்பு பற்றி மிகவும் குறைவாகவே அறியப்படுகிறது. கிளிட்டோரிஸ் இன்பத்தைப் பெறுவதற்கும் உச்சக்கட்டத்தை அடைவதற்கும் ஒவ்வொரு பெண்ணின் சிறந்த நண்பராக இருக்க வேண்டும். பெண்களின் யோனி மூலம் ஆரோக்கியமான உச்சியை தூண்டும். இது பெண்களுக்கு இன்பத்தையும் உச்சக்கட்டத்தையும் அதிகமாக வழங்கும்.

சுயஇன்பம் தவறானது அல்ல
சுயஇன்பம் மோசமானதல்ல மற்றும் அதை செய்வதில் தவறில்லை. உங்கள் உடலை ஆராய்ந்து, உங்களுக்கு இன்பம் தருவதைக் கண்டறிவதற்கான ஒரு சாதாரண வழி இது. மேலும், உச்சக்கட்டத்தை அடைவதற்கு இது பாதுகாப்பான வழி என்பதை நினைவில் கொள்ளுங்கள். உடலுறவு இல்லாமலே உங்களால் உச்சக்கட்டம் அடைய முடியும். சிலர் உடலுறவு கொள்ளும்போது உச்சக்கட்டம் அடைவதில்லை. அவர்கள் சுயஇன்பத்தின் மூலம் உச்சக்கட்டம் அடைகிறார்கள்.

ஆர்கஸம் இல்லை என்றால் கவலைப்பட வேண்டாம்
சுயஇன்பம் உச்சக்கட்டத்திற்கு உத்தரவாதம் அளிக்காது. சில நேரங்களில் அது உங்களுக்கு இன்பத்தையும் தராது. ஏனெனில், ஒவ்வொருவரின் விருப்பமும் அவர்கள் உச்சக்கட்டம் அடையும் நேரமும் வேறுபாடும். சிலர் உச்சக்கட்டத்தை அடைய இரண்டு நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறார்கள், இன்னும் சிலருக்கு ஒரு மணிநேரம் ஆகும். ஆதனால், எவ்வளவு நேரம் எடுக்கும் என்று யாராலும் யூகிக்க முடியாது.

உங்கள் சகிப்புத்தன்மையை பாதிக்கும்
அதிகப்படியான சுயஇன்பம் பலவீனத்திற்கு வழிவகுக்கும் மற்றும் உங்கள் சகிப்புத்தன்மையையும் பாதிக்கும். இவைமட்டுமல்லாமல் உங்கள் துணையுடன் நீங்கள் கொண்டிருக்கும் பாலியல் நெருக்கத்தையும் பாதிக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், சுயஇன்பத்திற்கான உந்துதல் வயது மற்றும் பாலியல் தூண்டுதலின் தன்மையைப் பொறுத்து பெண்ணுக்குப் பெண் மாறுபடும்.