Latest Updates
-
மூங்கில் அரிசி கிச்சடி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...!
உங்களுக்கு இருமல் இப்படி வருதா? அத சாதாரணமா நினைக்காதீங்க... ஆபத்தான இந்த நோயா இருக்க வாய்ப்பிருக்கு!
நிமோனியா என்பது வைரஸ்கள், பூஞ்சைகள் அல்லது பாக்டீரியாக்களால் ஏற்படும் நுரையீரல் தொற்று ஆகும். இது ஒரு உலர் இருமல் அல்லது பச்சை, மஞ்சள் அல்லது இரத்தம் தோய்ந்த சளியுடன் இருமலை ஏற்படுத்தலாம்.
இருமல் என்பதை சாதாரண பிரச்சனையாக மக்கள் பார்க்கிறார்கள். ஆம், இருமல் சாதாரண பிரச்சனைதான். ஆனால், சில நேரங்களில் அது உயிருக்கு ஆபத்தான நோய்களின் அறிகுறியாகக்கூட இருக்கலாம். பொதுவாக சளி காரணமாக மக்கள் அடிக்கடி இருமலால் பாதிக்கப்படுகிறார்கள். இருப்பினும், இது பொதுவாக மூன்று வாரங்களுக்குள் சரியாகிவிடும். துரதிர்ஷ்டவசமாக, சிலர் தொடர் இருமலை பிரச்சனையை அனுபவிக்கலாம். இது பல்வேறு காரணிகளால் ஏற்படக்கூடும். நீடித்த அல்லது நாள்பட்ட இருமல் பெரியவர்களுக்கு எட்டு வாரங்கள் அல்லது அதற்கு மேல் நீடிக்கும் அல்லது குழந்தைகளில் நான்கு வாரங்கள் நீடிக்கும்.

தேனுடன் தேநீர் அருந்துதல் அல்லது மருந்துகள் எடுத்துக்கொள்வது போன்ற இயற்கை வைத்தியங்கள் மூல காரணத்தைப் பொறுத்து உங்கள் இருமல் பிரச்சனையை போக்கலாம். உங்கள் நாள்பட்ட இருமலுக்கான சில காரணங்கள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் இருமல் சரியான நேரத்தில் குறையவில்லை என்றால், உடனே மருத்துவரைப் பார்க்க வேண்டும்.

கடந்தகால நோய்த்தொற்றுகள்
சளி மற்றும் காய்ச்சலால் நீங்கள் பாதிக்கப்படும்போது, உங்களுக்கு இருமல் ஏற்படுவது சகஜம். ஆனால், சளி மற்றும் காய்ச்சல் பிரச்சனை தீர்ந்த பிறகும், உங்களுக்கு இருமல் இருந்தால், அது கவனிக்கப்பட வேண்டியவை. இருமல் என்பது உங்கள் நுரையீரலை குணப்படுத்தும் நோக்கத்திற்காக உங்கள் உடலின் ஓர் வழியாகும். கோவிட்-19 தொற்று நுரையீரல் அழற்சி மற்றும் வறட்டு இருமலுக்கும் வழிவகுக்கும். உங்களுக்கு தொடர் இருமல் இருந்தாலோ அல்லது இருமல் நிற்கவில்லை என்றாலோ உங்கள் மருத்துவரை உடனே அணுகுவது நல்லது.

புகைபிடித்தல்
புகையிலை புகையில் உள்ள இரசாயனங்கள் மற்றும் துகள்கள் உங்கள் தொண்டையை எரிச்சலடையச் செய்யும். இதன் விளைவாக உங்களுக்கு நாள்பட்ட இருமல் ஏற்படலாம். ஆஸ்துமா மற்றும் சுவாச நோய்த்தொற்றுகள் போன்ற இருமலை ஏற்படுத்தும் பிற பிரச்சினைகளின் அறிகுறிகளையும் இது மோசமாக்கும். புகைப்பிடிப்பவரின் இருமல் நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோய் (சிஓபிடி) போன்ற உடல்நலப் பிரச்சினைகளின் ஆரம்ப அறிகுறிகளில் ஒன்றாகக்கூட இது இருக்கலாம். புகைபிடிப்பது இருமல், மூச்சுத் திணறல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் போன்றவற்றுக்கு வழிவகுக்கும் என்பதால், நீங்கள் புகைபிடிக்காமல் இருப்பது நல்லது.

நிமோனியா
நிமோனியா என்பது வைரஸ்கள், பூஞ்சைகள் அல்லது பாக்டீரியாக்களால் ஏற்படும் நுரையீரல் தொற்று ஆகும். இது ஒரு உலர் இருமல் அல்லது பச்சை, மஞ்சள் அல்லது இரத்தம் தோய்ந்த சளியுடன் இருமலை ஏற்படுத்தலாம். இருமலுடன், நிமோனியாவின் பிற சாத்தியமான அறிகுறிகளில் காய்ச்சல், வியர்த்தல் மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவை அடங்கும். நிமோனியாவால் பெரும்பாலும் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள்.

காசநோய்
உங்கள் நுரையீரலை முக்கியமாக பாதிக்கும் ஒரு தீவிர தொற்று காசநோயாகும். மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட வாரங்களுக்கு மேல் இருமல் நீடித்தால், அது காசநோயின் எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம். சளி மற்றும் இருமலின்போது உங்களுக்கு இரத்தம் வெளியேறினால், அது காசநோயால் ஏற்படலாம். இருப்பினும், இது வறட்டு இருமலாகவும் இருக்கலாம். காசநோயின் மற்ற அறிகுறிகள் மார்பு வலி, தற்செயலாக எடை இழப்பு, சோர்வு, காய்ச்சல், இரவில் வியர்த்தல், குளிர் மற்றும் பசியின்மை ஆகியவை அடங்கும். நுரையீரல் தவிர, காசநோய் சிறுநீரகம், முதுகெலும்பு அல்லது மூளை போன்ற உங்கள் உடலின் மற்ற பாகங்களையும் பாதிக்கலாம்.

நுரையீரல் புற்றுநோய்
நுரையீரல் புற்றுநோய் இருமலுக்கு வழிவகுக்கலாம். புற்றுநோய் இருந்தால் உங்களுக்கு தொடர் இருமல் இருக்கும் மற்றும் அது காலப்போக்கில் இன்னும் மோசமாகிவிடும். இருமல் தவிர, நுரையீரல் புற்றுநோயாளிகள் மார்பு வலி, மூச்சுத்திணறல், மூச்சுவிடுவதில் சிரமம் மற்றும் தற்செயலாக எடை இழப்பு ஆகியவற்றை அனுபவிக்கலாம். சிலருக்கு புற்றுநோய் தீவிரமடையும் வரை எந்த அறிகுறியும் இல்லாமல் இருக்கலாம். இருப்பினும், முதலில் உங்கள் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்துகொள்வது நல்லது.



Click it and Unblock the Notifications











