Latest Updates
-
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
அடிக்கடி சிறுநீர் கழிச்சிகிட்டே இருக்கீங்களா? அப்ப உங்களுக்கு இந்த ஆபத்தான நோய் இருக்க வாய்ப்பிருக்காம்!
ஓவர் ஆக்டிவ் பிளாடர் (OAB) என்பது ஒருவருக்கு திடீரென சிறுநீர் கழிப்பதற்கான தூண்டுதலை உணரலாம் மற்றும் கட்டுப்படுத்த கடினமாக இருக்கலாம். அடிக்கடி சிறுநீர் கழிப்பது இந்த நிலையின் பொதுவான அறிகுறியாகும்
நம் உடல் பல்வேறு உறுப்புகளின் செயல்பட்டால் இயங்கி கொண்டிருக்கிறது. ஏதேனும் உறுப்புகள் தங்கள் செயல்பாடுகளை நிறுத்தும்போதும், அந்த உறுப்புகள் பாதிக்கப்படும்போது, ஆபத்தான விளைவுகளை நாம் சந்திக்க வேண்டியிருக்கும். அந்த வகையில், சிறுநீரகங்களின் செயல்பாடு நம் உடலுக்கு மிகவும் இன்றியமையாதது. அவற்றில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால், அவை உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கும். அதேபோல உங்கள் உடலில் வேறு ஏதேனும் நோய்தொற்றுகள் இருந்தால், அவை உங்கள் சிறுநீரக செயல்பாட்டில் பிரதிபலிக்கும். நாம் அனைவரும் தினசரி சிறுநீர் கழிக்கிறோம். ஆனால், நீங்கள் வழக்கத்தை விட அதிகமாக சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை இருந்தால், அது உங்கள் உடலில் உள்ள பிரச்சனையை குறிக்கலாம்.

உங்கள் சிறுநீர்ப்பை கட்டுப்பாட்டை இழந்து, அடிக்கடி கழிவறைக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் தொடர்ந்து இருக்கிறதா? அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கு பல காரணிகள் உள்ளன. பல சுகாதார நிலைகளும் அறிகுறியைத் தூண்டலாம். அதிகப்படியான நீரேற்றம் ஒரு பொதுவான காரணமாக இருக்கலாம். நீரிழிவு போன்ற நாள்பட்ட உடல்நலப் பிரச்சினைகளும் ஒரு சாத்தியமான காரணமாக இருக்கலாம். நீங்கள் அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கு என்ன காரணமாக இருக்கலாம் என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

நீரிழிவு நோய்
அதிக சிறுநீர் கழிப்பது நீரிழிவு நோயின் பொதுவான அறிகுறிகளில் ஒன்றாகும். இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவையின் (NHS) அறிக்கைப்படி, சிறுநீரின் அளவு லேசான நோயாளிகளில் 3 லிட்டரிலிருந்து ஒரு நாளைக்கு 20 லிட்டர் வரை கழிக்க நேரிடலாம். இது நீரிழிவு நோயின் தீவிர நிலையை குறிக்கிறது. நீங்கள் 7-10 முறைக்கு மேல் சிறுநீர் கழித்தால், அது வகை 1 அல்லது வகை 2 நீரிழிவு நோயைக் குறிக்கலாம். ஒருநாளைக்கு நீங்கள் அதிகப்படியாக சிறுநீர் கழித்தால், உடனே மருத்துவ பரிசோதனை செய்வது நல்லது.

அதிகப்படியான சிறுநீர்ப்பை (OAB)
ஓவர் ஆக்டிவ் பிளாடர் (OAB) என்பது ஒருவருக்கு திடீரென சிறுநீர் கழிப்பதற்கான தூண்டுதலை உணரலாம் மற்றும் கட்டுப்படுத்த கடினமாக இருக்கலாம். அடிக்கடி சிறுநீர் கழிப்பது இந்த நிலையின் பொதுவான அறிகுறியாகும். சிலருக்கு தற்செயலாக சிறுநீர் கழிப்பதை கட்டுப்படுத்த முடியாமலும் இருக்கலாம். இருப்பினும், விரைவிலையே உங்கள் சிறுநீர்ப்பை நிரம்புவதும், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என உணர்வை தூண்டுவதும் போன்ற அறிகுறிகள் இருந்தால், மருத்துவ பரிசோதனையை நாடுவது நல்லது.

சிறுநீர் பாதை தொற்று (UTI)
சிறுநீர் பாதை நோய்த்தொற்று (UTI) என்பது சிறுநீர் அமைப்பில் ஏற்படும் தொற்றுநோயைக் குறிக்கிறது. சிறுநீர் கழிக்கும் போது வலி மற்றும் எரிதல் உணர்வு, அடிக்கடி சிறுநீர் கழித்தல், அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு, வயிற்றுப் பிடிப்பு மற்றும் சிறுநீரில் இரத்தம் வெளியேறுவது ஆகியவை பொதுவான அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் இருந்தால், உடனே மருத்துவ உதவியை நாடுங்கள். இது பல்வேறு தொற்றுநோய்க்களுக்கும் வழிவகுக்கும்.

ஆண்களில் புரோஸ்டேட் பிரச்சினைகள்
ஆண்கள் அடிக்கடி சிறுநீர் கழிப்பது மற்றும் சிறுநீர் கழிக்க தூண்டுவது புரோஸ்டேட் பிரச்சனைகளைக் குறிக்கலாம். தீங்கற்ற புரோஸ்டேடிக் ஹைப்பர் பிளேசியா (பிபிஹெச்), இது விரிவாக்கப்பட்ட புரோஸ்டேட் புரோஸ்டேடிடிஸைக் குறிக்கிறது. பாக்டீரியா தொற்று காரணமாக இது புரோஸ்டேட் அழற்சி என்று அழைக்கப்படுகிறது. இது புரோஸ்டேட்டில் உள்ள செல்கள் கட்டுப்பாடில்லாமல் வளரத் தொடங்கும் போது ஏற்படுகிறது.

பெண்கள் அடிக்கடி சிறுநீர் கழித்தல்
பெண்களைப் பொறுத்த வரையில், சிறுநீர் பாதை தொற்று(UTI), ஓவர் ஆக்டிவ் பிளாடர்(OAB), சிறுநீர்ப்பை தொற்று மற்றும் நீரிழிவு தவிர வேறு பல நிலைமைகள் உள்ளன. அவை, பெண்களை அதிகமாக மற்றும் அடிக்கடி சிறுநீர் கழிக்க தூண்டும். இதில் கர்ப்பம், நார்த்திசுக்கட்டிகள், மாதவிடாய் நிறுத்தம் மற்றும் கருப்பை புற்றுநோயால் ஏற்படும் குறைந்த ஈஸ்ட்ரோஜன் அளவு ஆகியவை அடங்கும். உங்களுக்கு ஏற்படும் அறிகுறிகளை மருத்துவரிடம் கூறுவதால், நீங்கள் எதனால் பாதிக்கப்படுகிறீர்கள் அல்லது கையாளுகிறீர்கள் என்பதை தெரிந்துகொள்ளலாம்.



Click it and Unblock the Notifications