Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
ஆண்களே! உங்களுக்கு அந்த விஷயத்தில் ஆர்வம் குறையுதா? அப்ப உங்களுக்கு சீக்கிரம் மரணம் வரலாமாம்... ஜாக்கிரதை!
ஜப்பானில் வசிக்கும் ஆண்களிடையே நடத்தப்பட்ட ஒரு புதிய ஆய்வில், பாலியல் ஆர்வமின்மை ஆரம்பகால மரணம் அதிகரிக்கும் அபாயத்துடன் இணைக்கப்படலாம் என்று கண்டறிந்துள்ளது.
ஜப்பானில் வசிக்கும் ஆண்களிடையே நடத்தப்பட்ட ஒரு புதிய ஆய்வில், பாலியல் ஆர்வமின்மை ஆரம்பகால மரணம் அதிகரிக்கும் அபாயத்துடன் இணைக்கப்படலாம் என்று கண்டறிந்துள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இறப்பு மற்றும் லிபிடோ இடையேயான சரியான தொடர்பு இப்போது வரை உறுதியாக தெரியவில்லை. குறைவான செக்ஸ் டிரைவ் பல அடிப்படை உடல்நலப் பிரச்சினைகளின் அறிகுறியாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் யூகித்துள்ளனர். இந்த ஆரோக்கிய பிரச்சினைகள் மரணத்தை நோக்கி ஆண்களை தள்ளலாம்.

ஆய்வு என்ன சொல்கிறது?
இந்த ஆய்வில் ஜப்பானில் 40 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய 8,558 ஆண்கள் மற்றும் 12,411 பெண்களிடைய, ஆறு வருட காலப்பகுதியில் வருடாந்திர ஆரோக்கிய பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
யமகட்டா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், முதலில் சுயமாக பதில் அளிக்கக்கூடிய கேள்வித்தாள் மற்றும் பல ஆண்டுகளுக்குப் பிறகு நடத்தப்பட்ட பின்தொடர்தல் கணக்கெடுப்பின் அடிப்படையில் ஆய்வில் பங்கேற்றவர்களின் பாலியல் ஆர்வத்தின் அளவைப் சோதித்தனர். 20,969 பங்கேற்பாளர்களில் பின்தொடர்தல் கணக்கெடுப்பின் போது 503 பேர் இறந்துவிட்டனர்.

குறைந்த பாலியல் ஆர்வம், அதிக இறப்பு ஆபத்து
பாலியல் ஆர்வமின்மையை அனுபவிக்கும் ஆண்களுக்கு புற்றுநோயால் இறப்பு மற்றும் பிற காரணங்களால் இறப்பு ஏற்பட அதிக ஆபத்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். வயது, கல்வி, திருமண நிலை, புகைபிடித்தல், மது அருந்துதல், பிஎம்ஐ, சிரிப்பின் அதிர்வெண், மன உளைச்சல், உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற காரணிகளும் இந்த ஆய்வில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வு முற்றிலும் கணிப்புகளின் அடிப்படையில் இருப்பதால், மரணத்திற்கான காரணம் என்னவென்பதை கண்டறிய மேலும் ஆய்வுகள் தேவைப்படுகிறது.

பெண்களுக்கு பாதிப்பில்லை
சுவாரஸ்யமாக, ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களுக்கு குறைந்த பாலியல் ஆர்வம் மற்றும் இறப்பு ஆகியவற்றுக்கு இடையே குறிப்பிடத்தக்க தொடர்பை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிக்கவில்லை. என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆண்களை விட பெண்கள் பாலியல் ஆர்வமின்மையைப் புகாரளிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த ஆய்வில் பங்கேற்ற பெண் பங்கேற்பாளர்களில் 16 சதவீதம் பேர் பாலியல் ஆர்வமின்யை புகாரளித்தனர், ஆண் பங்கேற்பாளர்களில் 8 சதவீதம் பேர் பாலியல் ஆர்வமின்மையை புகாரளித்தனர்.

சாத்தியமான காரணங்கள்
ஆண்கள் மத்தியில் பாலியல் ஆர்வமின்மை ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைகளுடன் இணைக்கப்படலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். மேலும், பாலியல் ஆர்வம் நேர்மறையான உளவியல் காரணிகளுடன் தொடர்புடையது என்று நீங்கள் கருதினால அது தவறானது. பாலியல் ஆர்வம் இல்லாதது அழற்சி, நியூரோஎண்டோகிரைன் மற்றும் நோயெதிர்ப்பு ஆற்றலின் வரம்புகளைப் பாதிக்கலாம்.



Click it and Unblock the Notifications