Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
எச்சரிக்கை! உடலுறவே கொள்ளாமல் நீங்க 'இத' பண்ணும்போதும்... உங்களுக்கு பாலியல் தொற்றுநோய் ஏற்படுமாம்!
இரத்தமேற்றுதல் மூலமாகவும் எய்ட்ஸ் பரவுகிறது என்பதை மக்கள் ஏற்றுக்கொள்வதற்கு நீண்ட காலம் எடுத்தாலும், தவறான இரத்தமாற்றத்தால் பல பாலியல் பரவும் தொற்றுநோய்கள் ஏற்படலாம் என்பது உண்மைதான்.
உடலுறவு மிகவும் இன்பம் தரக்கூடிய ஒரு அற்புதமான விஷயம். இது தம்பதிகள் இருவரும் இணைந்து ஒருமித்தமாக செயல்படும்போது கிடைக்ககூடிய இன்பம். உடலுறவு கொள்ளும்போது மிகவும் பாதுகாப்பாகவும் சுகாதாரமாகவும் இருக்க வேண்டும் என்று மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஏனெனில், உடலுறவு மூலமாக உங்களுக்கு பல்வேறு நோய்தொற்றுகள் பரவுவதற்கு வாய்ப்புள்ளது. உடலுறவு மூலமாக மட்டுல்லாமால் இன்னும் பிற காரணங்களாலும் உங்களுக்கு பாலியல் தொற்றுநோய்கள் ஏற்படலாம். பெரும்பாலும், பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் அல்லது எஸ்.டி.டி-கள் (STDs) பாதுகாப்பற்ற பாலியல் நடைமுறைகளால் ஏற்படுகின்றன.

இருப்பினும், இந்த நோய்த்தொற்றுகள் ஏற்படும் ஒவ்வொரு முறையும் பாலினத்தை காரணமாக கூறுவது தவறானது. ஊடுருவும் உடலுறவு இல்லாமலேயே பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவதற்கு வேறு பல வழிகள் உள்ளன. அவை என்னனென்ன வழிகள் என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

முத்தம்
வாய்வழியாக முத்தம் கொடுப்பது சில நேரங்களில் நோய்தொற்றுகளுக்கு வழிவகுக்கும். உடலுறவின்போது, முத்தமிடுவது தம்பதிகள் இருவருக்கும் சிற்றின்பத்தை கொடுக்கும். ஆனால், வாய்வழி முத்தம் ஹெர்பெஸ்-HSV 1, பிறப்புறுப்பு ஹெர்பெஸ்-HSV 2, சைட்டோமெகலோவைரஸ் மற்றும் சிபிலிஸ் ஆகிய நோய் தொற்றை பரப்பலாம். மேலும், உங்கள் வாயில் குளிர் புண்கள் இருந்தால், முத்தத்தில் ஈடுபட வேண்டாம். ஏனெனில், உமிழ்நீர் நோய்க்கிருமிகளை ஏற்படுத்தும் தொற்றுநோய்களின் கேரியராக இருக்கலாம்.

வாய்வழி செக்ஸ்
வாய்வழி உடலுறவு எப்போதும் தொற்றுநோயைப் பரப்புவதற்கான அதிக ஆபத்தாகக் கருதப்படுகிறது. பாதுகாப்பற்றதாக இருந்தாலும், இந்த நாட்களில் வாய்வழி உடலுறவு மிகவும் பொதுவான உடலுறவின் அம்சமாக பார்க்கப்படுகிறது. ஆனால், கிளமிடியா மற்றும் கோனோரியா தொற்றுக்கள் வாய்வழி செக்ஸ் மூலம் பரவுகிறது. பிறப்புறுப்பு பகுதியில் ஒரு கொப்புளம் அல்லது புண் இருந்தால், அது கவனிக்கப்படாமல் போனால், இது சிபிலிஸ் மற்றும் பிறப்புறுப்பு ஹெர்பெஸ் அபாயத்தையும் ஏற்படுத்தும்.

வாய்வழி முலைக்காம்பு தூண்டுதல்
இது பாலியல் பரவும் தொற்றுநோய்களுக்கான மற்றொரு அச்சுறுத்தல் காரணியாகும். போர்ஃபிளேவில் மார்பக தொடர்பு உங்களை அதிகமாக தூண்டும். இது உடலுறவின் மிக முக்கியமான பகுதி. மார்பகங்கள் அல்லது அதற்கு அருகில் மருக்கள் அல்லது புண்களைக் கண்டால், அந்த நபருடன் எந்த தோல் தொடர்பும் கொள்ளாமல் பார்த்துக் கொள்ளுங்கள். குறிப்பாக, உங்கள் வாயால் முத்தமிடவோ அல்லது அந்த இடத்தை நாவல் தூண்டவோ வேண்டாம்.

பல் துலக்குதல்
ஒருவரின் பல் துலக்குதலைப் பயன்படுத்துவதன் மூலம் பாலியல் ரீதியாக பரவும் நோயைப் பெறுவதற்கான ஆபத்து, வாய்வழி உடலுறவு மூலம் அதைப் பெறுவதற்கு சமமானதாகும். பல் துலக்கும்போது வாயில் இருந்து ரத்தம் கலந்து பல் துலக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. உங்கள் பல் துலக்கும் ப்ரஷை வேறு யாராவது பயன்படுத்தினால் அல்லது வேறு யாரவது பயன்படுத்திய ப்ரஷை நீங்கள் பயன்படுத்தினால். அது நோய்க்கிருமிகளை மற்றவருக்கு தீவிரமாக மாற்றும். ஆதலால், மற்றவருடையதை எப்போதும் பயன்படுத்தாதீர்கள்.

இரத்தமாற்றம்
இரத்தமேற்றுதல் மூலமாகவும் எய்ட்ஸ் பரவுகிறது என்பதை மக்கள் ஏற்றுக்கொள்வதற்கு நீண்ட காலம் எடுத்தாலும், தவறான இரத்தமாற்றத்தால் பல பாலியல் பரவும் தொற்றுநோய்கள் ஏற்படலாம் என்பது உண்மைதான். நீங்கள் இரத்தமாற்றம் செய்யச் செல்லும் போதெல்லாம், நம்பகமான இரத்த வங்கியிலிருந்து அதைச் சேகரித்து சரிபார்க்கவும்.

செக்ஸ் பொம்மைகளைப் பகிர்தல்
முன்பு கூறியது போல், செக்ஸ் பொம்மைகள் திருப்தியைப் பெறுவதற்கான பாலியல் முறைகளில் ஒன்றாகும். அந்த வகையில், நீங்கள் வேறொருவரது செக்ஸ் பொம்மைகளைப் பயன்படுத்துவதன் மூலம் எஸ்.டி.டி. நோயால் பாதிக்கப்படலாம். மேலும், நீங்கள் தனியாகப் பயன்படுத்தினால், ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் பிறகு அதைச் சரியாகச் சுத்தம் செய்து சுகாதாரமான இடத்தில் வைக்க வேண்டும்.

இதை அறிவது ஏன் முக்கியம்?
பாலியல் தொற்றுநோய்களின் இந்த அம்சத்தை அறிந்து கொள்வது முக்கியம். ஏனென்றால் பலர் ஊடுருவாத பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடுவது மிகவும் தூண்டுதலாக இருப்பதாக நினைக்கிறார்கள். உடலுறவில் உள்ளவர்களின் தேவை மற்றும் திருப்தி தேவைகள் தனி நபருக்கு மாறுபடும். இது உச்சகட்டத்தை அடைவதற்கான புதிய மற்றும் பாரம்பரியமற்ற வழிகளை ஆராய்வதற்கு வழிவகுக்கிறது. சில நேரங்களில் ஊடுருவல் உடலுறவு இல்லாதபோது சுகாதாரம் புறக்கணிக்கப்படுகிறது. உடலுறவு மட்டுமே சுகாதாரத்திற்கு ஆபத்து என்று தவறாக நம்பப்படுகிறது. ஆதலால், சுகாதாரமாகவும் மகிழ்ச்சியானதாகவும் உங்க பாலியல் வாழ்க்கையை நீங்கள் மாற்றுவது முக்கியம்.



Click it and Unblock the Notifications