Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
தண்ணியடிச்சாலும் ஆரோக்கியமா வாழணுமா? இந்த மாதிரி குடிக்க கத்துக்கோங்க...!
மது அருந்துவது ஆரோக்கியமற்றது என்ற கருத்து பொதுவாக நிலவினாலும் வயது வந்தவர்களுக்கு மது அருந்தும் போது கிடைக்கும் மகிழ்ச்சியை புறக்கணிக்க முடியாது.
இந்த உலகத்தில் தற்போதிருக்கும் சூழ்நிலையில் ஆரோக்கியமாக வாழ்வது என்பது மிகவும் சவாலான ஒன்றாகும். ஆரோக்கியமான வாழ்க்கை முறை என்பது தேவை என்பதையும் தாண்டி அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. ஏனெனில் நமது சுற்றுசூழல் முழுவதும் நச்சுக்கள் நிறைந்ததாக மாறிவிட்டது. ஆரோக்கியமான வாழ்க்கை முறை என்னும்போது உணவுமுறை, டயட், உடற்பயிற்சி என இவற்றில் கவனம் செலுத்தும்போது முக்கியமான பழக்கவழக்கங்களை பற்றி மறந்து விடுகிறோம்.

முக்கியமான பழக்கம் எனும்போது அதில் முதல் இடத்தில் இருப்பது மது அருந்துவதுதான். மது அருந்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பொதுவாக மது அருந்துவது நமது ஆரோக்கியத்திற்கு நல்லது இல்லைதான். ஆனால் சரியான முறையில், அளவாகக் குடிக்கும்போது அது உங்களுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கும்.

மது நல்லதா?
மது குடிப்பது நல்லதா? இல்லையா? என்னும் விவாதம் பல நூற்றாண்டுகளாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. மது அருந்துவது ஆரோக்கியமற்றது என்ற கருத்து பொதுவாக நிலவினாலும் வயது வந்தவர்களுக்கு மது அருந்தும் போது கிடைக்கும் மகிழ்ச்சியை புறக்கணிக்க முடியாது. மனஅழுத்தம், வார இறுதி கொண்டாட்டங்கள் என அனைத்திற்கும் மருந்தாக பலரும் இதைத்தான் நாடுகிறார்கள். உங்களுக்கு பிடித்த அதிக கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளைப் போல ஆல்கஹாலும் சிறிது கலோரிகளையும், ஜீரோ ஊட்டச்சத்தையும் கொண்டுள்ளது. ஆனால் டயட்டை பின்பற்றுபவர்கள் இதனை கட்டாயம் தவிர்த்தே ஆக வேண்டும்.

ஆரோக்கியமான வாழ்க்கை முறை
உங்களின் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையில் மதுவும் இடம்பெற முடியும். இங்கு நாம் மதுவிற்கு அடிமையாக இருப்பதை பற்றி பேசவில்லை. ஆரோக்கியமான முறையில் பயன்படுத்தினால் இதனை மருந்தாகவும் பயன்படுத்தலாம். உங்களின் ஆரோக்கிய டயட்டில் மதுவையும் சேர்த்துக் கொண்டு நீங்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம்.

ஆராய்ச்சி முடிவுகள்
சில ஆராய்ச்சி முடிவுகளின் படி மிதமான குடிப்பது உங்களின் மனஅழுத்தத்தை குறைப்பது, நினைவாற்றலை தக்க வைப்பது, கற்பனைத்திறனை அதிகரிப்பது, உற்பத்தித் திறனை அதிகரிப்பது போன்றவற்றுடன் தொடர்புடையது. குறிப்பிட்ட அளவு ஆல்கஹாலுடன் உங்களுக்கு பிடித்த உணவுகளை சாப்பிடும்போது அது உங்களின் ஆயுளை அதிகரிக்கும். ஆனால் அளவிற்கு அதிகமாக குடிப்பது உடல் பருமன், சர்க்கரை நோய்கள், இதய நோய், ஈரல் செயலிழப்பு போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். ஆரோக்கியமாக மது அருந்துவது எப்படி என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

இலக்கை நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும்
நீங்கள் செல்லும் இடத்திற்கெல்லாம் மதுவையும் எடுத்து செல்லக்கூடாது. குறிப்பாக மற்றவர்களின் கட்டாயத்திற்க்காக குடிப்பதை தவிருங்கள். உங்களின் இலக்கு என்பதை நீங்களே தீர்மானம் செய்து அதனை கடுமையாக கடைபிடிக்க வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை குடிப்பது உங்களின் ஆரோக்கியத்திற்கு நீங்களே செய்து கொள்ளும் நல்லதாகும்.

உங்களின் மதுவை புத்திசாலித்தனமாக தேர்வு செய்யுவும்
நீங்கள் தேர்ந்தெடுக்கும் மதுவில் இருக்கும் கலோரிகளின் அளவை பார்க்க வேண்டும். மேலும் அதிலிருக்கும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள், கார்போஹைட்ரேட்டுகள், சர்க்கரை அளவு போன்றவற்றை சோதிக்க வேண்டும். உங்களின் ஆரோக்கியத்திற்கு ஏற்ற மதுவை தேர்வு செய்யவும். குறிப்பாக பீர் நோக்கி போக வேண்டாம், ஏனெனில் அதில் அதிகளவு கலோரிகள் உள்ளது.

வெறும் வயிற்றில் ஒருபோதும் குடிக்காதீர்கள்
உங்கள் வயிற்றில் எந்த உணவுகளும் இல்லாத போது நீங்கள் மது அருந்தும் போது அது உங்கள் இரத்தத்தால் நேரடியாக உறிஞ்சப்படுகிறது. அதனால் வாந்தி மற்றும் தலைவலி போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. எனவே மது அருந்துவதற்கு முன் ஆரோக்கியமாக எதையாவது சாப்பிடுவது நல்லது.

சர்க்கரை அதிகம் உள்ள பானங்களை தேர்வு செய்ய வேண்டாம்
சில சமயங்களில் உங்கள் எடை அதிகரிக்க நீங்கள் குடிக்கும் காக்டெயில்களே காரணமாக இருக்க வாய்ப்புள்ளது. கண்டிப்பாக சோடா மற்றும் சர்க்கரை சேர்க்கப்பட்ட குளிர்பானங்களை மதுவுடன் சேர்த்துக் குடிப்பதை தவிர்ப்பது நல்லது. பெரும்பாலும் தண்ணீரை மதுவுடன் சேர்த்து குடிப்பதே நல்லது.

அதிக கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு உணவுகளை தவிர்க்கவும்
உங்கள் கோபால் பருமன் அதிகரிக்க முக்கியக் காரணம் நீங்கள் மதுவுடன் சேர்த்து சாப்பிடும் நொறுக்குத் ஏற்கனவே பூஜ்ஜிய ஊட்டச்சத்து மற்றும் அதிக கலோரிகள் ஆல்கஹாலில் அதிகமாக இருப்பதால் அதனுடன் அதிக கொழுப்புள்ள உணவுகளைச் சேர்ப்பது அதன் பாதிப்பை அதிகரிக்கும். உங்களின் சைடிஸ்கள் அதிக உப்பு, கொழுப்பு மற்றும் ஆரோக்கியமற்ற கார்போஹைட்டுகள் இல்லாததாக பார்த்துக் கொள்ளுங்கள். சாலட் அல்லது அதிக புரோட்டின் இருக்கும் உணவுகளை சேர்த்துக் கொள்வது சமநிலையை ஏற்படுத்தும்.

நச்சுத்தன்மையை வெளியேற்றுங்கள்
மது அருந்துவதற்கு முன்னரும், பின்னரும் அதிக அளவு தண்ணீர் குடிக்கவும். உடலில் அதிகளவு நீர்ச்சத்து இருப்பது உங்கள் உடலில் இருக்கும் நச்சுப்பொருட்களை வெளியேற்ற உதவும். நிறைய இலைக்காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது உங்களின் உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றும். ஆரோக்கியமான டயட் உங்கள் உடலின் இரத்த அழுத்தத்தையும், சர்க்கரை அளவையும் சமநிலையில் வைத்திருக்க உதவும்.



Click it and Unblock the Notifications











