Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
இந்த விரல் நீளமா இருந்தா உங்களுக்கு புற்றுநோய் வரவே வராதாம் தெரியுமா?
நமது உடல் குறித்த அனைத்து ரகசியங்களுக்கும் நமது உடலிலேயே பதில் உள்ளது. நமது உடலில் ஏற்படும் குறைபாடுகளையும், நமது உடலுக்கு ஏற்படும் ஆபத்துகளையும் நமது உடலில் இருக்கும் பாகங்கள் முன்கூட்டியே கூறிவிடும்
நமது உடல் என்பது பல ரகசியங்களும், அதிசயங்களும் நிறைந்த ஒன்றாகும். மருத்துவத்தில் எவ்வளவோ முன்னேற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் நமது உடல் குறித்த ஆராய்ச்சிகள் இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. நமது உடலில் இருக்கும் ஒவ்வொரு பாகமும் ஒன்றுக்கொன்று பிணைக்கப்பட்டுள்ளது.

நமது உடல் குறித்த அனைத்து ரகசியங்களுக்கும் நமது உடலிலேயே பதில் உள்ளது. நமது உடலில் ஏற்படும் குறைபாடுகளையும், நமது உடலுக்கு ஏற்படும் ஆபத்துகளையும் நமது உடலில் இருக்கும் பாகங்கள் முன்கூட்டியே கூறிவிடும். அதில் முக்கியமான ஒன்று நமது கைகள் ஆகும். இந்த பதிவில் உங்கள் கைகள் உங்களின் ஆரோக்கியத்தைப் பற்றிக்கூறும் ரகசியங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

வலுவான பிடிப்பு
வலிமையான பிடிப்பு உள்ளவர்களின் இதயம் வலிமையானதாக இருக்கும். நீங்கள் கைகுலுக்கும் விதம் உங்களின் ஆளுமையைப் பற்றி நிறையக்கூறும். வலிமையான பிடிப்பு நல்ல ஆரோக்கியத்தின் அறிகுறியாகும். வலிமையான கைகுலுக்கல் உங்கள் இதயத்தின் ஆரோக்கியத்தை குறிக்கிறது.

பலவீனமான பிடிப்பு
நடுத்தர வயதில் இருபவர்களுக்கு இருக்கும் பலவீனமான பிடிப்பு அவர்கள் பல நோய்களுக்கு ஆளாவதன் அறிகுறியாகும், இவர்கள் சுவாச நோய்கள், இதயக்கோளாறு, புற்றுநோய் போன்றவற்றிற்கு ஆளாக வாய்ப்புள்ளது. கை வலிமை உங்கள் மூட்டுகளில் வலிமைக் குறியீட்டைக் குறிக்கும் மற்றும் உங்கள் ஒட்டுமொத்த ஊட்டச்சத்துடன் கூட தொடர்புடையதாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

சிறப்பான பிடி
கை வலிமைக்கும் உங்கள் ஆரோக்கியத்திற்கும் இடையிலான தொடர்புகள் சுவாரஸ்யமானவை, இது உங்கள் அறிவாற்றல் திறன்களையும் வெளிப்படுத்தக்கூடும். வலிமையான பிடியைக் கொண்டவர்கள் சிறந்த நினைவாற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள், அதேசமயம் பிரச்சினைகளுக்கு எளிதில் தீர்வு காண்பவர்களாகவும் இருப்பார்கள்.

பெரிய விரல்நுனி
உங்கள் விரல் நுனியில் ஏற்படும் அசாதாரண வளர்ச்சி ஆபத்திற்கான அறிகுறியாகும். இது விரல்களின் எல்லைகளில் இருக்கும் விரல்களின் முனைகளைச் சுற்றியுள்ள திசுக்களின் அதிகரிப்பு ஆகும். இதற்கு காரணம் இரத்தத்தில் இருக்கும் குறைந்த ஆக்சிஜன் ஆகும், இது நுரையீரலை நோய்களுக்கான அறிகுறி ஆகும்.

நகம் கடிப்பது
இது ஒரு கெட்ட பழக்கம் மட்டுமல்ல, உங்கள் ஆரோக்கியத்தை கெடுக்கும் பழக்கம் கூட. உங்கள் நகத்தைக் கடிக்கும்போது இரத்தப்போக்கு ஏற்பட்டால் நீங்கள் மருத்துவரை அணுக வேண்டியது அவசியமாகும். நகம் கடிப்பதை கட்டுப்படுத்த முடியாமல் இருக்கும் நிலை OCD நோயின் அறிகுறியாகும்.

நகங்களின் நிறம் மாறுவது
உங்களின் விரல் நகங்கள் விரல் நுனியை விட்டு வெளியேறி அதன் நிறம் வெள்ளை, மஞ்சள் அல்லது பச்சை நிறத்திற்கு மாறினால் நீங்கள் மருத்துவரை அணுக வேண்டியது அவசியமாகும். ஓனிகோலிசிஸ் என்று அழைக்கப்படும் இது சமீபத்திய பாக்டீரியா அல்லது பூஞ்சை தொற்று காரணமாக இருக்கலாம் அல்லது தைராய்டு நோய் போன்ற அடிப்படை உடல்நலப் பிரச்சினையின் அறிகுறியாக இருக்கலாம்.

ஒல்லியான நகம்
இரும்பு ஒரு முக்கியமான ஊட்டச்சத்து ஆகும், இது உங்கள் ஆற்றல் மட்டத்தை உயர்த்தி, நகங்களின் வளர்ச்சியில் முக்கியப்பங்கு வகிக்கிறது. கடுமையான மாதவிடாய், கர்ப்பம், இரும்புச்சத்து இல்லாத உணவு அல்லது புண்கள் போன்ற பொதுவான நிலைமைகள் இரும்புச்சத்து குறைபாடுள்ள இரத்த சோகைக்கு வழிவகுக்கும். உங்கள் நகங்கள் பலவீனமாகவும், ஒல்லியாகவும் இருப்பது உங்கள் உடலில் இரும்புச்சத்து குறைவாக இருப்பதற்கான அறிகுறி ஆகும்.

நகத்தில் இருக்கும் கோடு
பொதுவாக தோல் புற்றுநோய் இருக்கிறதா என்பதை ஆராய நீங்கள் சருமத்தைத்தான் பார்ப்பீர்கள் ஆனால் நகத்தை எப்போதாவது கவனித்து இருக்கிறீர்களா?. தோல் புற்றுநோயின் கொடிய வடிவமான மெலனோமா உங்கள் நகங்களின் கீழ் தோன்றும். நகத்தின் நடுவில் ஒரு மெல்லிய கரும்புள்ளி தோன்றினால் நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியமாகும். இது மெலனோமாவின் அறிகுறியாக இருக்க வாய்ப்புள்ளது. அதேபோல விரல் நுனியில் வீக்கம் ஏற்படுவதும் சரும புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.

நீளமான ஆள்காட்டி விரல்
உங்களின் ஆள்காட்டி விரலும், மோதிர விரலும் உங்களின் ஆரோக்கியத்தைப் பற்றியும், தலைவிதியைப் பற்றியும் நிறைய கூறஇயலும். இது பாலியல் ஹார்மோன்களான டெஸ்டோஸ்டிரோன் மற்றும் கருப்பையில் உள்ள ஈஸ்ட்ரோஜனை வெளிப்படுத்துவதன் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் ஒன்றாகும். அந்த வெளிப்பாடுகள் புரோஸ்டேட் புற்றுநோய் ஆபத்து உள்ளிட்ட பல நோய்களிலிருந்து உங்களை முன்கூட்டியே அல்லது பாதுகாக்கக்கூடும். மோதிர விரலை விட ஆள்காட்டி விரலைக் கொண்ட ஆண்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோயின் ஆபத்து 33 சதவீதம் குறைவாக இருப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகிறது.



Click it and Unblock the Notifications