Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
வெங்காயத்துல இப்படி டீ வைச்சு குடிச்சா கொரோனா கிட்ட கூட வராதாம்...வெங்காய தேநீரின் அற்புத நன்மைகள்..
வெங்காயத்தை நாம் இப்பொழுது வெறும் சுவைக்காக மட்டுமே பயன்படுத்தி வருகிறோம் ஆனால் பழங்காலத்தில் வெங்காயம் பால வித்தியாசமான வழிகளில் மருந்தாக உபயோகிக்கப்பட்டது.
நமது முன்னோர்கள் உணவே மருந்து என்னும் கூற்றுக்கு ஏற்றார் போல உணவுப் பொருட்களையே மருந்து பொருட்களாக பயன்படுத்தி ஆரோக்கிய வாழ்வை வாழ்ந்து வந்தனர். இன்று நாம் சுவைக்காக மட்டும் பயன்படுத்தும் பல பொருட்கள் நமது முன்னோர்கள் காலத்தில் பல நோய்களை குணப்படுத்தும் அற்புத மருந்து பொருட்களாக இருந்து வந்தது.

வெங்காயத்தை நாம் இப்பொழுது வெறும் சுவைக்காக மட்டுமே பயன்படுத்தி வருகிறோம் ஆனால் பழங்காலத்தில் வெங்காயம் பால வித்தியாசமான வழிகளில் மருந்தாக உபயோகிக்கப்பட்டது. அதனால்தான் இன்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் வெங்காயத்திற்கு என்று தனியிடம் உள்ளது. உணவில் சேர்த்து வறுப்பதைத் தவிர்த்து வெங்காயத்தை பல்வேறு வழிகளில் நாம் பயன்படுத்தலாம், அதில் முக்கியமான ஒன்றுதான் வெங்காய தேநீர். இந்த பதிவில் வெங்காய தேநீரால் கிடைக்கும் அற்புத பலன்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

வெங்காய டீ
நிச்சயம் இது கேட்பதற்கு வித்தியாசமாக இருக்கலாம், ஆனால் தேயிலைக்கு பதிலாக வெங்காயத்தை பயன்படுத்தி தேநீர் தயாரிக்கலாம். வெங்காயத்தின் அற்புதமான நன்மைகள் மற்றும் அதன் மருத்துவ குணங்கள் பற்றி நாம் அனைவரும் அறிவோம், ஆனால் அதை ஒரு தேநீராகப் பயன்படுத்த ஒருபோதும் நினைத்திருக்க மாட்டோம். வெங்காய சாறு மிகவும் கொழுப்பை எரிக்கும் பொருள் என்று பரவலாக அறியப்படுகிறது, ஆனால் இது நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் தூக்கமின்மை போன்ற பல சிக்கல்களைக் குறைக்கவும் மிகவும் உதவியாக இருக்கும்.

எப்படி தயாரிப்பது?
முதலில் வெங்காயத்தை நன்றாக கழுவி நறுக்கிக் கொள்ளவும், வெங்காயத் துண்டுகளை கொதிக்கும் நீரில் போடவும்.வெங்காயத்தில் இருந்து தண்ணீர் நிறத்தை பெற்ற பின்னர் அதில் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் க்ரீன் டீ பையை கலக்கவும். இப்போது அதை வடிகட்டி, உங்கள் விருப்பப்படி தேன் சேர்த்து ஆரோக்கியமான வெங்காய டீயை குடிக்கவும். வெங்காய டீ வழங்கும் அற்புத நன்மைகள் என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

நல்ல தூக்கம்
தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு வெங்காய தேநீர் ஒரு அற்புதமான மருந்தாகும். படுக்கைக்கு செல்லும் முன் ஒரு கிளாஸ் வெங்காய டீ குடிப்பது தூக்கத்தைத் தூண்டுகிறது. மேலும் இன்சோம்னியா குறைபாட்டை குறைக்கப் பயன்படுகிறது.

நோயெதிர்ப்பு மண்டலம்
நோயெதிர்ப்பு மண்டலத்தை பலமாக வைத்துக்கொள்ள வைட்டமின் சி மிகவும் அவசியமானதாகும். அதிர்ஷ்டவசமாக வெங்காயத்தில் வைட்டமின் சி அதிகமுள்ளது. வெங்காயத்தில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் பைட்டோ கெமிக்கல்ஸ்களும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கொரோனா வேகமாக பரவிக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் வெங்காய தேநீரை குடிப்பது மிகவும் நல்லதாகும்.

வீக்கம்
வெங்காயத்தில் உள்ள அழற்சி கூறுகள் வீக்கம் மற்றும் வலியைக் குறைக்க உதவுகின்றன, அதனால்தான் பண்டைய மருத்துவ நடைமுறையில் மூல வெங்காயத்தை காயங்களின் மேற்பரப்பில் தேய்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். வீக்கங்களின் மீது வெங்காயத்தை அழுத்தமாக தேய்ப்பது நல்ல நிவாரணத்தை வழங்கும்.

சளி மற்றும் காய்ச்சல்
சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அனைத்து பிரச்சினைகளுக்கும் வெங்காய டீ ஒரு அற்புதமான மருந்தாகும். குறிப்பாக தொண்டைப்புண் இருப்பவர்கள் வெங்காய டீ குடிப்பது அவர்களுக்கு உடனடி தீர்வு வழங்கும்.

செரிமானம்
இது செரிமானத்தை அதிகரிக்கும் சாறுகளின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இது செரிமான பாதை நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது மற்றும் பெருங்குடலை மற்றும் பெருங்குடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றுகிறது.

புற்றுநோய் பாதுகாப்பு
வெங்காயத்தில் குவெர்செட்டின் என்னும் கலவை இருக்கிறது. இது புற்றுநோயிலிருந்து சிறப்பான பாதுகாப்பை வழங்குகிறது. இது இரத்தத்தில் இருக்கும் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.

எடை குறைப்பு
எடையை வேகமாக குறைக்க விரும்புபவர்கள் வெங்காய தேநீரை குடிக்க வேண்டியது அவசியமாகும். மற்ற பொருட்களுடன் ஒப்பிடும்போது இது வயிற்று பகுதியில் இருக்கும் கொழுப்பை வேகமாக குறைக்கிறது, மேலும் வளர்சிதை மாற்றத்தை 2 வாரங்களில் அதிகரிக்கிறது.



Click it and Unblock the Notifications