Latest Updates
-
கருப்பு கவுனி தேங்காய் பால் கஞ்சியும், கறிவேப்பிலை துவையலும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
அக்டோபர் 20, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப கவலையான நாளாக இருக்கப்போகுதாம் -
இந்த 4 ராசிக்காரங்க ஓவர் தன்னம்பிக்கையால் எப்பவும் சொதப்பிட்டே இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆயுத பூஜைக்கு சுண்டல் சாப்பிட்டு கேஸ் ஏறிடுச்சா? அப்ப இந்த இயற்கை பானங்களை குடிங்க.. -
சனி-சூரியனால் உருவாகியுள்ள ஷடாஷ்டக யோகம்: இந்த 3 ராசிக்காங்க கவனமாக இருக்கணும்! -
காரசாரமான பன்னீர் தேங்காய் மசாலா ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வேற லெவல் சுவையில் இருக்கும் -
ஆயுத பூஜை நாளில் உங்க ராசிப்படி தானம் செய்யுங்க.. துர்கையின் ஆசியால் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
கைகளில் சொடக்கு எடுக்கும்போது அதிலிருந்து ஏன் சத்தம் வருகிறது? இப்படி செய்வது பாதிப்பை ஏற்படுத்துமா? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், 2 தக்காளியும் இருந்தா.. காலையில் இட்லிக்கு இப்படி சட்னி செய்யுங்க.. -
அக்டோபர் 19, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுதாம்
சிகரெட்டால் பாழான உங்க நுரையீரலை சரிசெய்ய இந்த பொருட்களில் ஒன்றை தினமும் சாப்பிட்டால் போதுமாம்...!
புகைபிடித்தல் ஒரு ஆபத்தான தீயப்பழக்கம் என்பது அனைவரும் அறிந்ததுதான். சாதாரண பழக்கமாகத் தொடங்கும் இது நாளடைவில் உங்களை மாற்றக்கூடிய அபாயம் கொண்டது.
புகைபிடித்தல் ஒரு ஆபத்தான தீயப்பழக்கம் என்பது அனைவரும் அறிந்ததுதான். சாதாரண பழக்கமாகத் தொடங்கும் இது நாளடைவில் உங்களை மாற்றக்கூடிய அபாயம் கொண்டது. புகைபிடித்தல் புற்றுநோய் முதல் கடுமையான நுரையீரல் பிரச்சினைகள் வரை உங்கள் ஆரோக்கியத்தில் பல மோசமான பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

சிகரெட் புகைப்பவர்கள் ஏரோசல் துகள்கள் மற்றும் நிகோடின் கலந்த புகையிலையை சுவாசிக்கிறார்கள். இந்தக் கலவையானது நுரையீரலுக்குள் ஆழமாகச் செல்லும். இந்த தீங்கு விளைவிக்கும் கூறுகள் இரத்த ஓட்டத்தில் நுரையீரலால் உறிஞ்சப்படுகின்றன. இதனால் காலப்போக்கில் உங்கள் நுரையீரலின் சேதம் அதிகரிக்கிறது. புகைப்பழக்கத்தால் முதலில் மற்றும் அதிகம் பாதிக்கப்படும் உறுப்பு நுரையீரல்தான். புகைபிடிப்பவர்கள் அந்த பழக்கத்தை அறவே விட்டாலும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். இந்த சூழலில் சில உணவுகள் புகைப்பழக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய உதவலாம்.

தக்காளி மற்றும் ஆப்பிள்
புகைபிடிப்பவர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில் தக்காளி மற்றும் ஆப்பிள் அவர்களின் நுரையீரல் செயல்பாட்டை ஊக்குவிப்பதாகவும், நுரையீரல் சேதத்தை சரி செய்வதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று ஆப்பிள்கள் அல்லது தக்காளி சாப்பிடுபவர்களின் நுரையீரல் ஒரு தக்காளி மட்டும் சாப்பிட்டவர்களின் நுரையீரலை விட விரைவாக குணமடைவது ஆய்வில் கண்டறியப்பட்டது.

க்ரீன் டீ
க்ரீன் டீயில் கேடசின்கள் அதிக அளவில் உள்ளன, இது உடலில் ஒட்டுமொத்த செயல்பாட்டுக்கு மிகவும் அவசியமானதாகும். இது தக்காளி மற்றும் ஆப்பிளைப் போலவே வயதுக்கு ஏற்ப நுரையீரல் திறன் குறைவதையும், புகைபிடிப்பதால் ஏற்படும் ஆபத்தை குறைக்கவும் உதவுகிறது. கேடசின்கள் என்பது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், எடை இழப்பை ஊக்குவிக்கவும், மூளையை நோயிலிருந்து பாதுகாக்கவும் உதவும் கலவையாகும். க்ரீன் டீயில் உள்ள கேட்டசின்கள் நுரையீரலில் உள்ள சளியை உடைத்து தளர்த்தும். கிரீன் டீயில் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் நிறைந்துள்ளன, இது நுரையீரல் செயல்பாட்டையும், ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது.

மஞ்சள்
மஞ்சளில் சக்திவாய்ந்த சில அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, இது புகைபிடிப்பதால் நுரையீரலில் ஏற்படும் பாதிப்பைப் போக்க உதவுகிறது. இதற்கு காரணம் அதிலுள்ள குர்குமின் ஆகும், இது வலுவான ஆக்ஸிஜனேற்ற, அழற்சி எதிர்ப்பு மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளை வழங்குகிறது, இது நுரையீரலை நிகோடினால் ஏற்பட்ட சேதத்திலிருந்து பாதுகாக்கிறது. சிகரெட் புகையானது சுவாசப்பாதையில் வீக்கம் மற்றும் அடைப்பை ஏற்படுத்தும். COPD போன்ற நாள்பட்ட நுரையீரல் அழற்சி நோய்களின் வளர்ச்சியிலிருந்து குர்குமின் பாதுகாக்கிறது.

இஞ்சி
இஞ்சியில் உடலுக்கு அத்தியாவசியத் தேவையான சில அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது சுவாசக் குழாயிலிருந்து நச்சுகளை அகற்ற உதவுகிறது. மேலும் இஞ்சியில் பொட்டாசியம், மெக்னீசியம், பீட்டா கரோட்டின் மற்றும் துத்தநாகம் உள்ளிட்ட பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இஞ்சியின் சில சாறுகள் நுரையீரல் புற்றுநோய் செல்களைக் கொல்லும் என்றும் அறியப்படுகிறது.உங்களின் அன்றாட உணவுகளில் இஞ்சியை வெவ்வேறு வடிவங்களில் சேர்த்துக் கொள்ளலாம்.

காய்கறி ஜூஸ்
புகைபிடித்தல் உள்ளுறுப்புகளை மட்டுமின்றி சரும ஆரோக்கியத்தையும் கடுமையாக பாதிக்கும். புகைபிடிப்பவர்கள் விரைவில் வயதான தோற்றத்தை அடைவதை நீங்கள் பார்க்கலாம். புகைபிடிப்பதை நிறுத்தியவர்கள் இழந்த சரும ஆரோக்கியத்தை மீண்டும் பெற தினமும் ஒரு டம்ளர் காய்கறி சாறு குடிக்க வேண்டும். கேரட் மற்றும் பீட்ரூட் சாறுகள் விரைவான மாற்றத்தை ஏற்படுத்த உதவும்.



Click it and Unblock the Notifications
