Latest Updates
-
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம்
ஆணுறுப்பின் விறைப்புத்தன்மையை பாதிக்கும் டாப் 10 காரணங்கள்... உங்களுக்கு இதில் ஏதாவது இருக்கா?
ஆணுறுப்பின் விறைப்புத்தன்மை குறைபாடு என்பது உடலுறவில் ஈடுபடுவதற்கு போதுமான அளவு ஆண்குறியின் விறைப்புத்தன்மையைப் பெறவோ அல்லது பராமரிக்கவோ இயலாத நிலையாகும்.
ஆணுறுப்பின் விறைப்புத்தன்மை குறைபாடு என்பது உடலுறவில் ஈடுபடுவதற்கு போதுமான அளவு ஆண்குறியின் விறைப்புத்தன்மையைப் பெறவோ அல்லது பராமரிக்கவோ இயலாத நிலையாகும். உடலுறவின் போது போது விறைப்புத்தன்மையைப் பெறுவதில் தோல்வி என்பது 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் ஒரு பொதுவான பிரச்சினையாகும்.

துரதிர்ஷ்டவசமாக சமீப காலமாக இளைஞர்களுக்கும் ஆணுறுப்பு விறைப்புத்தன்மையில் குறைபாடு ஏற்படுவது தொடர்கதையாகி விட்டது. அதற்கு பல்வேறு விஷயங்கள் காரணமாக இருக்கலாம். இந்த பதிவில் ஆண்களுக்கு விறைப்புத்தன்மை கோளாறு ஏற்பட காரணமாக இருக்கும் டாப் 10 விஷயங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

குறைவான இரத்த ஓட்டம்
விறைப்புத்தன்மையில் குறைபாடு ஏற்படுத்தும் காரணங்களில் இது முதலிடத்தில் உள்ளது. ஆண்குறியில் சீரான இரத்த ஓட்டம் இருக்கும்போது ஒரு விறைப்பு ஏற்படுகிறது. உயர் இரத்த அழுத்தம், கொழுப்பு மற்றும் உறைதல் போன்ற சில ஆரோக்கிய பிரச்சினைகள் இரத்தத்தின் திறமையான சுழற்சியில் தலையிடக்கூடும். இதனால் ஆணுறுப்பு நீண்ட நேரம் விறைப்புத்தன்மையுடன் இருப்பதில்லை.

ஹார்மோன் கோளாறுகள்
டெஸ்டிகளில் போதுமான அளவு டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தி இல்லாமல் இருப்பதும் விறைப்புத்தன்மை குறைபாட்டை ஏற்படுத்தும். குறைந்த டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தி பிட்யூட்டரி சுரப்பியின் முறையற்ற செயல்பாடு அல்லது வேறு எந்த நரம்பு மண்டல கோளாறுகள் காரணமாகவும் இருக்கலாம்.

அதிகப்படியாக சைக்கிள் ஓட்டுதல்
அதிகப்படியான சைக்கிள் ஓட்டுதல் அல்லது பைக் சவாரி என்பது விறைப்புத்தன்மை குறைபாட்டிற்கு ஒரு பொதுவான காரணமாகும். நீண்ட நேரம் பைக்கில் உட்கார்ந்து இருக்கும்போது ஆண்குறி நரம்புக்கு ஏற்படும் அழுத்தம் காரணமாக இது நிகழ்கிறது.

செயல்திறன் குறித்த கவலை
படுக்கையில் அவர்களின் செயல்திறன் அல்லது ஆண்குறியின் அளவு பற்றி கவலைப்படுகிற ஆண்களும் விறைப்புத்தன்மைக்கு பலியாகிறார்கள். நீங்கள் எப்போதும்பதட்டத்துடன் இருந்தால், நீங்கள் உங்கள் துணையுடன் படுக்கையில் இருக்கும்போது, நரம்பு எதிர்வினைகள் விறைப்புத்தன்மையைத் தடுக்கலாம் மற்றும் ஒரு தீய சுழற்சியை அமைக்கும். எனவே உற்சாகமாகவும், நம்பிக்கையுடனும் இருங்கள்.

அறுவை சிகிச்சைகள்
ஆண்குறி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் செய்யப்படும் அறுவை சிகிச்சைகள் அல்லது அளிக்கப்படும் வேறு சிகிச்சையும் ஒரு விறைப்புத்தன்மையை பராமரிக்க தேவையான நரம்புகள் மற்றும் தமனிகளை சேதப்படுத்தும். இதனால் விறைப்புத்தன்மை பிரச்சினை ஏற்படலாம்.

மனஅழுத்தம்
தொடர்ச்சியான கவலைகள் அல்லது மனச்சோர்வு விறைப்புத்தன்மைக்கு மற்றொரு பொதுவான காரணமாகும். மனச்சோர்வு என்பது ஒரு மனக்கோளாறு, இது படுக்கையில் உங்கள் செயல்திறனில் மிகவும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

குடிப்பழக்கம்
அதிகப்படியான குடிப்பழக்கம் அல்லது ஆல்கஹால் உட்கொள்வது நீண்ட காலத்திற்கு விறைப்புத்தன்மையில் குறைபாட்டை ஏற்படுத்தும். சிலசமயங்களில் நிலையான ஆண்மைக்குறைபாட்டிற்கு கூட இது வழிவகுக்கும்.

புகைப்பிடித்தல்
சிகரெட் புகைப்பதால் இரத்த நாளங்கள் குறுக்கிடப்படுகின்றன. இது ஆண்குறிக்கு இரத்த ஓட்டம் குறைந்து விறைப்புத்தன்மைக் குறைபாட்டை ஏற்படுத்தும். புகைப்பிடிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சினைகளில் இது மிகவும் முக்கியமானதாகும்.

மருந்துகளின் பக்க விளைவுகள்
மாத்திரைகள் தொடர்ந்து எடுத்துக் கொள்வதும் விறைப்புத்தன்மை பிரச்சினையை ஏற்படுத்தும். ஆண்டிடிரஸண்ட்ஸ் மாத்திரைகள் மற்றும் பீட்டா-தடுப்பான்கள் ஆகியவை விறைப்புத்தன்மை குறைபாட்டை ஏற்படுத்தும் மிகவும் பொதுவான மருந்துகளாகும்.

காயங்கள்
முதுகெலும்பு அல்லது இடுப்பு காயம் விறைப்புத்தன்மையைத் தூண்டும் நரம்புகளை சேதப்படுத்தும். இடுப்புப் பகுதியில் ஏற்படும் விபத்துகள் ஆணுறுப்பின் செயல்பாட்டின் மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.



Click it and Unblock the Notifications