போகி பண்டிகையின்போது நெருப்புக்கு அருகில் நீங்க செல்வதனால் என்னென்ன ஆபத்து ஏற்படும் தெரியுமா?

போகி பண்டிகையின்போது, நீங்கள் பருத்தி ஆடைகள் அணிந்துகொள்வது சிறந்த தேர்வாகும். ஏனெனில் அது நெருப்பிலிருந்து உருகாமல் நம்மைப் பாதுகாப்பாக வைத்திருக்கும்.

போகி பண்டிகை என்பதே பழையனவற்றை தீயில் போட்டு கொளுத்தும் பண்டிகையாகும். தமிழகத்தில் நான்கு நாட்கள் கொண்டாடப்படும் பொங்கல் விழா, ஜனவரி 14ஆம் தேதியன்று போகி பண்டிகையோடு மிகவும் உற்சாகத்துடன் தொடங்க இருக்கிறது. இந்த நாளில் 'பழையன கழிதலும், புதியன புகுதலும்' என்பதற்கு ஏற்ப நம் வீட்டில் உள்ள பழையவற்றை தீயில் போட்டு எரிக்கிறோம். அதுபோல நம் மனதில் உள்ள தீய எண்ணங்களையும் நினைவுகளையும் மறந்துவிட்டு, புதிய ஆரோக்கியமான எண்ணங்களோடு வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற கருத்தை போகி பண்டிகை கூறுகிறது. நெருப்பு இல்லாமல் போகி பண்டிகை கிடையாது.

bhogi-2023-beware-of-things-before-getting-too-close-to-the-fire-in-tamil

நெருப்பைச் சுற்றி மக்கள் கூடி, பாடல்களைப் பாடி, மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஆனால், நெருப்புக்கு அருகில் கொண்டாடும் போது நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நெருப்புக்கு மிக அருகில் நிற்பது ஆபத்தானது மற்றும் தீங்கு விளைவிக்கும். போகி பண்டிகையின்போது, நீங்கள் கவனமாக இருக்கவும், உங்களை சுற்றி இருக்கும் தீ அபாயங்களை பற்றியும் இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தோல் எரிகிறது

தோல் எரிகிறது

போகி பண்டிகையின்போது பலர் நெருப்புக்கு அருகில் கூடுகிறார்கள். நீங்கள் நெருப்புக்கு மிகவும் அருகில் இருந்தால், அது உங்கள் சருமத்தை சிவப்பாகவும், கறையாகவும், வெண்மையாகவும் மாற்றும். தீயினால் கொப்புளங்கள் கூட உருவாகலாம். முதலில், நீங்கள் தோலில் அசௌகரியத்தை அனுபவிக்கலாம். ஆதலால் போகி தீ எரியும்போது, தோலில் தீக்காயங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க பாதுகாப்பான தூரத்தில் நீங்கள் நிற்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

நெருப்பிலிருந்து வரும் புகை

நெருப்பிலிருந்து வரும் புகை

நெருப்பின் போது விறகிலிருந்து வெளியேறும் புகை உங்களுக்கு சுகாதார பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இது மாரடைப்பு, ஆஸ்துமா தாக்குதல்கள் மற்றும் இருமல் நோய்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஆபத்தான விளைவுகளுக்கு கூடுதலாக, இது உங்கள் நுரையீரலுக்கும் தீங்கு விளைவிக்கும். உங்கள் நுரையீரல் தீப் புகையால் வீக்கமடைந்து எரிச்சலடையலாம். இது நுரையீரல் தொற்று அபாயத்தை அதிகரிக்கிறது. போகி நெருப்பின் போது மட்டுமல்ல, குளிர்காலம் முழுவதும் நெருப்புக்கு மிக அருகில் நிற்பதையோ உட்காருவதையோ தவிர்க்க வேண்டும்.

வெப்ப வெளிப்பாடு

வெப்ப வெளிப்பாடு

நெருப்பின் அருகில் செல்வதைத் தவிர்க்கவும். ஏனெனில் இது உங்கள் உடல் வெப்பநிலையை அதிகரிப்பதன் மூலம் அதிக வெப்பம் மற்றும் மூச்சுத் திணறலை ஏற்படுத்தும். இதன் விளைவாக, நீங்கள் மூச்சுத் திணறல், ஈரமான மற்றும் வெளிர் தோல், அத்துடன் சோர்வு மற்றும் பலவீனம் போன்ற அறிகுறிகளை அனுபவிக்கலாம். நடக்கக்கூடிய மிக மோசமான நிலைகளில் ஒன்று வெப்ப பக்கவாதம். ஆதலால், போகி பண்டிகை கொண்டாடும்போது, கவனமாக இருக்க வேண்டும்.

கண்களில் எரியும் உணர்வு

கண்களில் எரியும் உணர்வு

பெரும்பாலும் PM2.5 நுண்ணிய துகள்கள் எனப்படும் நுண்ணிய துகள்கள், தீ புகையில் உள்ளன. இந்த துகள்கள் உங்கள் கண்களை எரிச்சலூட்டும் மற்றும் எரிக்கும் திறன் கொண்டவை. இது கண்களை சிவத்தல் மற்றும் கண்களிலிருந்து நீரை ஏற்படுத்தலாம். நெருப்பு துகள்கள் உங்கள் கண்களில் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆதலால், மிக கவனமாக இருக்க வேண்டும்.

ஆடைகளில் தீப் பிடிக்கலாம்

ஆடைகளில் தீப் பிடிக்கலாம்

போகி பண்டிகையின்போது, நீங்கள் பருத்தி ஆடைகள் அணிந்துகொள்வது சிறந்த தேர்வாகும். ஏனெனில் அது நெருப்பிலிருந்து உருகாமல் நம்மைப் பாதுகாப்பாக வைத்திருக்கும். இது அதிக உறிஞ்சுதல் கொண்டது. மற்ற ஆடைகளை அணிந்து கொண்டு நெருப்பு அருகில் செல்வது நல்லதல்ல. ஏனெனில் அது சூடாகும்போது உருகும், தீப்பிடிக்கும் போது நம் உடலில் ஒட்டிக்கொண்டு அதிக சேதத்தை ஏற்படுத்தும்.

இறுதி குறிப்பு

இறுதி குறிப்பு

இந்த நிலைகளில் ஏதேனும் ஒன்று திடீரென ஏற்படலாம். எனவே, நீங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கிறீர்கள் என்பதையும், தீக்கு மிக அருகில் செல்லாமல் இருப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் போகி பண்டிகையை கொண்டாடுங்கள். போல்ட் ஸ்கை சார்பாக உங்கள் அனைவருக்கும் போகி நல்வாழ்த்துக்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Friday, January 13, 2023, 20:17 [IST]
Desktop Bottom Promotion