Latest Updates
-
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது!
மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொண்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா? அப்ப மிஸ் பண்ணாதீங்க..
மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்ள தயக்கம் கொள்ள வேண்டாம். சொல்லப்போனால் மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொண்டால், நல்ல இன்பத்தை அனுபவிக்கலாம்.
நிறைய பேருக்கு மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்ளலாமா? கூடாதா என்ற கேள்வி மனதில் இருக்கும். இதுக்குறித்து மற்றவர்களிடம் பேசவும் சற்று தயக்கமாக இருக்கலாம். சரி, ஏன் மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்ள தயக்கம் கொள்கிறார்கள் என்று தெரியுமா? அதற்கு முக்கிய காரணம், மாதவிடாய் காலத்தில் பெண்களின் உடலில் இருந்து வெளியேற்றப்படும் இரத்தத்தை பலரும் கெட்ட இரத்தமாக நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் மாதவிடாய் இரத்தம் உடலின் மற்ற பகுதிகளில் ஓடும் இரத்தத்தைப் போன்றே சுத்தமானது தான். ஆனால் இது எண்டோமெட்ரியத்தில் இருந்து, அதாவது கருப்பையின் புறணியில் இருந்து வெளியேற்றப்பட்ட திசுக்களையும் கொண்டுள்ளது.

எனவே மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்ள தயக்கம் கொள்ள வேண்டாம். சொல்லப்போனால் மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொண்டால், நல்ல இன்பத்தை அனுபவிக்கலாம். ஏனெனில் மற்ற நேரங்களை விட மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு செக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கும். இப்போது மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொண்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.

வயிற்று வலி/பிடிப்பில் இருந்து நிவாரணம்
மாதவிடாய் காலத்தில் பெரும்பாலான பெண்கள் சந்திக்கும் ஓர் பிரச்சனை தான் வயிற்று பிடிப்புகள். கருப்பையின் புறணி சுருங்கும் போது தான் பிடிப்புகள் ஏற்படுகின்றன. ஆனால் மாதவிடாய் காலத்தில் பெண்கள் உடலுறவில் ஈடுபட்டு புணர்ச்சி அடையும் போது, அது மாதவிடாய் கால பிடிப்புகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. மேலும் உடலுறவில் புணர்ச்சி அடையும் போது, அது எண்டோர்பின்கள் என்னும் கெமிக்கலை வெளியிட்டு, ஒருவித நல்ல உணர்வைத் தருகிறது.

மாதவிடாய் காலம் குறையும்
மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொண்டால், அது மாதவிடாய் நாட்களைக் குறைக்கும். எப்படியெனில் மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொண்டு புணர்ச்சி/உச்சக்கட்ட இன்பத்தை அடையும் போது, அது கருப்பை தசைகளை சுருக்கி வேகமாக புறணியில் இருந்து திசுக்களை வெளியேற்றுகிறது. இதன் விளைவாக பீரியட் நாட்களானது குறையும்.

செக்ஸ் உணர்வு அதிகம் இருக்கும்
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் செக்ஸ் உணர்ச்சியானது மிகவும் அதிகமாக இருக்கும். பொதுவாக ஓவுலேசன் காலத்தில், அதாவது மாதவிடாய் சுழற்சிக்கு ஒரு வாரத்திற்கு முன்பு தான் பெண்கள் அதிக செக்ஸ் உணர்வை கொண்டிருந்தாலும், நிறைய பெண்கள் மாதவிடாய் காலத்திலும் கட்டுப்படுத்த முடியாத செக்ஸ் உணர்வைக் கொண்டுள்ளார்கள். எனவே உடலுறவில் நல்ல இன்பத்தை அனுபவிக்க நினைத்தால், இந்த மாதவிடாய் காலத்தில் ஈடுபடுங்கள்.

நேச்சுரல் லூப்ரிகேஷன்
உடலுறவு கொள்ளும் போது சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனை யோனி வறட்சி. பெண்களின் யோனிப் பகுதி வறட்சியாக இருந்தால், உறவில் ஈடுபடும் போது வலியை அனுபவிக்க நேரிடும். இந்த தருணத்தில் வறட்சியைப் போக்க பலர் எண்ணெய்களைப் பயன்படுத்துவார்கள். ஆனால் மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபட்டால், அந்த யோனி வறட்சி பிரச்சனையே இருக்காது மற்றும் இரத்தமே ஒரு நேச்சுரல் லூப்ரிகண்ட்டாக செயல்படும்.

தலைவலியில் இருந்து நிவாரணம்
நிறைய பெண்கள் மாதவிடாய் காலத்தில் தலைவலியை அனுபவிப்பதுண்டு. இப்படி மாதவிடாய் காலத்தில் சந்திக்கும் ஒற்றைத் தலைவலியில் இருந்து நிவாரணம் பெற, உடலுறவில் ஈடுபடுங்கள். இதனால் உடலுறுவின் போது அடையும் புணர்ச்சியால் வெளியிடப்படும் எண்டோர்பின்கள் தலைவலியில் இருந்து நல்ல நிவாரணத்தை அளிக்கும். எண்டோர்பின்களானது தலைவலியில் இருந்து நிவாரணம் அளிப்பதோடு மட்டுமின்றி, மனதை ரிலாக்ஸாக உணர வைக்கும்.

மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்வதற்கான டிப்ஸ்
மாதவிடாய் காலத்தில் உடலுறவை மிகவும் வசதியாக அனுபவிக்க ஒருசில டிப்ஸ் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவை:
* மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்வதாக இருந்தால், அடர் நிறத்திலான ஒரு துணியை படுக்கையில் விரித்துக் கொள்ளுங்கள். முடிந்தால் உடலுறவில் ஈடுபடும் முன் ஒரு குளியலை போடுங்கள்.
* உங்கள் துணையை காண்டம் அணிந்து கொள்ள சொல்லுங்கள். இது கர்ப்பம் மற்றும் பிற பாலியல் நோய்த்தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும்.
* உங்களின் வழக்கமான உடலுறவு கொள்ளும் நிலை வசதியாக இல்லாவிட்டால், வேறு நிலையில் முயற்சி செய்யுங்கள்.



Click it and Unblock the Notifications