Latest Updates
-
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...!
தினமும் 1 வெள்ளரிக்காய் சாப்பிட்டால் என்னென்ன மாற்றங்கள் உடலில் ஏற்படும்...?
தினந்தோறும் நாம் உண்ண கூடிய உணவுகள் அனைத்துமே நமது உடலை அதிக ஆற்றலுடன் வைக்கும் அளவிற்கு இருத்தல் வேண்டும். அதிக பலசாலியாக இருக்க வேண்டுமென்றால் நிச்சயம் சரிவிகித உணவு அவசியம். தினமும் சாப்பிட கூடிய உணவில் அந்த அளவிற்கு ஆரோக்கியம் இல்லை என நீங்கள் உணர்ந்தீர்கள் என்றால், உங்களுக்கு பல அற்புதங்களை நிகழ்த்த இந்த வெள்ளரிக்காய் தயாராக உள்ளது.

வெள்ளரிக்காயை தொடர்ந்து 1 மாதம் சாப்பிட்டு வந்தால் உடலில் ஏராளமான மாற்றங்கள் உண்டாகும். சாதாரண இந்த காயில் உள்ள நன்மைகள் நமக்கு இத்தனை நாட்களாக தெரியாமல் இருந்துள்ளது. வெள்ளரிக்காயை ஒன்றை எடுத்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் எடை முதல் உடல் நச்சுக்களால் சேர்ந்துள்ள பிரச்சினை வரை தீர்வுக்கு கொண்டு வந்து விடும். ஏன், ஒரு மாத்திற்கு தொடர்ந்து வெள்ளரிக்காய் சாப்பிட வேண்டும்..? என்கிற உங்களின் கேள்விக்கான விடையே இந்த பதிவு.

வெள்ளரியும் ஆற்றலும்.!
வெள்ளரிக்காயில் எண்ணற்ற ஆற்றல்கள் இருப்பதற்கு ஒரு சில தாதுக்கள் தான் காரணம். இவை நம் அன்றாட உணவில் இருப்பதை விட அதிக அளவில் காணப்படுகிறதாம்.
முக்கிய சத்தாக வைட்டமின் எ, வைட்டமின் கே, பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், கேரட்டின் போன்றவை அதிக அளவில் உள்ளதே இதற்கான மூல காரணம்.

நச்சுக்களை நீக்க
உடலில் சேர்ந்துள்ள நச்சு தன்மையுள்ள அழுக்குகளை போக்க மிக பெரிய அளவில் எதையுமே செய்ய வேண்டியதில்லை. மாறாக, 1 மாதம் தொடர்ந்து வெள்ளரிக்காய் சாப்பிட்டு வந்தாலே போதும்.
இவற்றில் உடலை சுத்தம் செய்ய கூடிய தன்மை அதிக அளவில் நிறைந்துள்ளது. முக்கியமாக சிறுநீரக கற்களை கரைக்க கூடிய ஆற்றல் இதற்கு உண்டாம்.

புற்றுநோய்
புற்றுநோய் அபாயத்தை குறைக்க கூடிய தன்மை இந்த வெள்ளரிக்காயில் உள்ளது. தொடர்ந்து 1 மாதம் சாப்பிட்டு வருவதால் உங்களின் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நோய் தொற்றுகளை அழித்து விடும்.

எடை குறைய
காரணமே இல்லாமல் உடல் எடை கூடி உள்ளவர்களுக்கு ஒரு அற்புத தீர்வை தேடி தருகிறது இந்த வெள்ளரிக்காய்.
இவை மிக குறைந்த அளவில் கலோரிகளை கொண்டுள்ளதால் உடல் எடை கூடுவதில் இருந்து உங்களை காக்கும். இதனை வெறுமையாகவோ சாலட் போன்றோ செய்து சாப்பிடலாம்.

இதய பாதுகாப்பிற்கு
வெள்ளரிக்காயில் உள்ள பொட்டாசியம் அதிக ஆற்றலை கொண்டது. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் நம் உடலில் இதயத்திற்கு வர கூடிய மாரடைப்பு, இதய நோய்கள், ரத்த உறைதல் போன்றவை தடுக்கப்படுகிறது. மேலும், ரத்த அழுத்தமும் சீரான அளவில் இருக்க வெள்ளரிக்காய் ஒன்றே போதும்.

அட..! இதுக்கும் கூட..!
அதிக அளவில் மதுவை அருந்தி விட்டு தலை கால் புரியாமல் இருப்போருக்கு ஒரு எளிய வழி உள்ளது. அது தான் நம் வெள்ளரிக்காய் வழி.
உங்களின் ஹாங்ஓவரை சரி செய்ய வெள்ளரிக்காயை சாப்பிட்டாலே போதுங்க. இதை ட்ரை செய்து எப்படி உள்ளது என்பதை கமெண்டில் தெரிவிக்கவும்.

சர்க்கரை அளவு
ரத்தத்தில் உள்ள அதிக படியான சர்க்கரையை குறைக்க முடியாமல் பலரும் தேனருகின்றனர். வெள்ளரிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு குறைய, வாய்ப்புகள் அதிகம் உள்ளது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வெண்மையான சருமம்
சருமத்தின் அழகை இரட்டிப்பாக்க வெள்ளரிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால் போதும். இதில் உள்ள வைட்டமின் சி, காஃபீக் அமிலம் போன்றவை சருமத்தை பொலிவாக மாற்ற உதவுகிறதாம். மேலும், முகத்தில் ஏற்பட கூடிய முக வறட்சியை குறைத்து எப்போதுமே ஈரப்பதமாக வைக்கும்.

கண்களுக்கு
எப்போதுமே கணினியில் வேலை செய்வோருக்கு வெள்ளரிக்காய் சிறந்த மருந்தாகும். வெள்ளரிக்காயை சாப்பிட்டு வந்தாலோ அல்லது கண்களின் மேல் ஒரு துண்டு அரிந்து வைத்து பயன்படுத்தினாலோ, கண்களில் உண்டாக கூடிய வீக்கம், அழுத்தம் ஆகியவை குறையும்.

வலிகளுக்கு
வெள்ளரிக்காயில் இருக்க கூடிய சிலிக்கா மூட்டு சார்ந்த வலிகளில் இருந்து நிவாரணம் தருகிறது. அத்துடன் உயர் ரத்த அழுத்தத்தையும் இது குறைக்கும் தன்மை கொண்டுள்ளதாம். இதற்கெல்லாம் காரணம் இதில் உள்ள நார்ச்சத்தும், தாதுக்களும் தான்.



Click it and Unblock the Notifications











