Latest Updates
-
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா?
உங்களின் தலை எழுத்தையே மாற்ற கூடிய இந்த கோடுகளை பற்றி தெரியுமா...?
நமது உடலில் இருக்க கூடிய ஒவ்வொரு அடையாளத்திற்கும் ஒரு தனி சிறப்பு உண்டு. இவை அனைத்துமே நம்மை பற்றி தெளிவாக சொல்ல கூடிய திறன் பெற்றவை. எப்படி நமது உடல் உறுப்புகள் நம்மை பற்றிய தகவல்களை துல்லியமாக சொல்கிறதோ அதே போன்று தான் நமது முகத்தில் இருக்க கூடிய கோடுகளும் நம்மை பற்றி சொல்லுமாம்.

முகத்தில் உள்ள ஒவ்வொரு கோட்டிற்கும் ஒரு தனி அர்த்தம் உள்ளது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இவை நாம் எந்தவித நோயால் பாதிக்கப்படுவோம் என்பதை கூட தெளிவாக சொல்லிவிடுமாம். கையில் எப்படி ரேகை இருக்கிறதோ அதே போன்று முகத்தில் ஏற்பட கூடிய இந்த வித கோடுகளுக்கும் தனித்துவம் உள்ளது. சரி, இந்த கோடுகள் உங்களை பற்றி அப்படி என்ன தான் சொல்கிறது என்பதை நீங்களே இந்த பதிவில் தெரிஞ்சிக்கோங்க.

கோடுகளும் ஆராய்ச்சியும்..!
சுமார் 3200 பேரை வைத்து நடத்திய ஆராய்ச்சியின் முடிவில் பல்வேறு தகவல்கள் வெளி வந்தன. அதாவது நமது முகத்தில் இருக்க கூடிய ஒவ்வொரு இடத்தில் உள்ள கோட்டிற்கும் ஒவ்வொரு விதமான அர்த்தங்கள் இருக்கின்றனவாம்.
இவற்றை வைத்தே எதிர் காலத்தில் எப்படிப்பட்ட ஆபத்துகள் உங்களை நெருங்கும் என்பதையும் நம்மால் கணித்து விட இயலும்.

மூக்கு பகுதியில்
பலருக்கும் மூக்கு பகுதியில் இந்த கோடு போன்ற அறிகுறி இருந்தால் மிக மோசமான அபாயத்தை உணர்த்துகிறது. கல்லீரல் அளவுக்கு அதிகமாக வேலை செய்வதை இந்த இந்த அறிகுறி உணர்த்துகிறது. இப்படியே தொடர்ந்தால் நாளடைவில் இந்த உறுப்பு செயலிழக்க கூட வாய்ப்புகள் உண்டு.

இவ்வளவு ஆபத்தா..?
உங்களின் இடது தாடை பகுதியில் கோடு அல்லது சுருக்கம் போன்று இருந்தால் உங்களுக்கான அபாய மணி என்றே கூறலாம். இது உங்களுக்கு தோல் புற்றுநோய் இருப்பதை குறிக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. முகத்தில் சூரிய ஒளி அதிகம் பட்டதே, தாடை பகுதி இப்படி பாதித்துள்ளமைக்கு காரணம்.

கண்களுக்கு கீழ்
கண்களுக்கு கீழ் உள்ள பகுதியில் ஏதேனும் அறிகுறி தென்பட்டால் நமக்கு பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாக மருத்துவர்கள் கூடுகின்றனர்.
இரும்புசத்து குறைவாக உங்களுக்கு உள்ளதை உணர்த்த கூடிய அறிகுறி தான் இந்த கண்களுக்கு கீழுள்ள கோடுகள். இரும்புசத்து குறைபாடு ஏற்பட்டால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் குழந்தை இன்மை பாதிப்பை தரும்.

உதட்டிலுமா..?
எப்படி கண், மூக்கு போன்ற பகுதியில் இந்த கோடுகள் ஒரு வித எச்சரிக்கையை தருகிறதோ அதே போன்று உதடுகளில் விரிசல் போன்று இருந்தால் அவை சர்க்கரை நோய் தொடர்பான பிரச்சினைகள் உங்களுக்கு இருக்கிறது என்பதை குறிக்கிறது. அத்துடன் ரத்தத்தில் சர்க்கரையின் அளவும் அதிக அளவில் உள்ளது என்பதையும் உணர்த்தும்.

கண் புருவத்தில்
உங்கள் புருவத்திற்கு அருகில் கோடுகள் போன்றோ சுருக்கங்கள் போன்றோ தென்பட்டால் அவை உங்களுக்கு மன அழுத்த நோய் இருப்பதாக எச்சரிக்கை செய்கிறது. இது போன்று நெற்றியில் இருந்தாலும் உங்களுக்கு ஆபத்து தான்.

எலும்பும் சருமமும்
நமது தோலிற்கும் எலும்புகளுக்கும் ஆழமான பிணைப்பு உள்ளதாம். தோலை வைத்தே எலும்புகள் தேய்மானம் உள்ளதா..? என்பதை கண்டறிய இயலும். குறிப்பாக இப்போதெல்லாம் 30 வயதை தண்டி விட்டாலே இந்த பாதிப்புகள் நமக்கு வருகின்றன.
இவை உடலில் உள்ள புரதச்சத்து குறைவதாலும், collagen என்கிற மூல பொருளின் உற்பத்தி தடைபடுவதாலும் ஏற்படுகிறது.

தோல்
நமது உடலை முழுவதுமாக போர்த்தி கொண்டு பாதுகாக்க கூடிய தன்மை தோலிற்கு தான் உள்ளது. மற்ற பகுதியில் இருக்க கூடிய தோல்களை காட்டிலும் முகத்தில் உள்ள தோள்கள் நமக்கு எல்லா வித வியாதிகளுக்கான அறிகுறிகளையும் காட்டி கொடுத்து விடும்.

வயசாகுதோ..?
பொதுவாக நமது முகத்தில் சுருக்கங்கள், சிவப்பு நிறம் உருவாகுதல், கரும்புள்ளிகள், வறட்சி ஆகியவை ஏற்பட ஏற்பட நமது சருமம் வயதாவதை கூறுகிறது.
இவற்றை தடுக்க சிட்ரஸ் உணவுகள், காய்கறிகள், மீன் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்து கொண்டாலே போதும்.



Click it and Unblock the Notifications