கடல் உணவுகள் சாப்பிடுவது மாரடைப்பை ஏற்படுத்தும் என்பது உண்மையா?

கொழுப்பு என்பது கல்லீரலில் இருந்து உற்பத்தி செய்யப்படுவது, இது நமது இரத்தத்தின் வழியாக உடல் முழுவதும் செல்லும் கொழுப்பு நிறைந்த பொருளாகும்.

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் அதிக மருத்துவ மரணங்கள் ஏற்பட காரணம் இதய நோய்தான். அதிக கொழுப்பானது இதய நோயுடன் நேரடி தொடர்பு கொண்டது. சொல்லப்போனால் இதய நோயும், அதிக கொழுப்பும் இரட்டை குழந்தைகள் போன்றவை. கொழுப்பு உடலில் ஏற்படுத்தும் தாக்கத்தை தெரிந்து கொள்ளும் முன் கொழுப்பு என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

Is seafood high in cholesterol?

கொழுப்பு என்பது கல்லீரலில் இருந்து உற்பத்தி செய்யப்படுவது, இது நமது இரத்தத்தின் வழியாக உடல் முழுவதும் செல்லும் கொழுப்பு நிறைந்த பொருளாகும். இதுதான் உடலுக்கு தேவையான வைட்டமின்களை பெற உதவுவதோடு, உணவுகளை உடைப்பதுடன் ஹார்மோன்களை உற்பத்தி செய்யவும் உதவுகிறது. இதனை நல்ல கொழுப்பு மற்றும் கெட்ட கொழுப்பு என்று பிரிக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நல்ல கொழுப்பு

நல்ல கொழுப்பு

நல்ல கொழுப்பு என்பது உயர் அடர்த்தி லிப்போபுரோட்டின் ஆகும். இது உடலின் அனைத்து பாகங்களில் இருந்தும் கெட்ட கொழுப்புகளை உங்கள் கல்லீரலுக்கு கொண்டு வர உதவும் அங்கிருந்து இவை வெளியேற்றப்படும். இந்த நல்ல கொழுப்பு உங்கள் உடலில் எவ்வ்ளவு அதிகமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு உங்கள் உடல் ஆரோக்கியமாகவும், கொழுப்பு அளவுகள் சமநிலையிலும் இருக்கும்.

கெட்ட கொழுப்பு

கெட்ட கொழுப்பு

கெட்ட கொழுப்பு என்பது அடர்த்தி குறைவாக இருக்கும் லிப்போபுரோட்டின் ஆகும். இது தமனிகளில் வளர்க்கப்பட்டு அவற்றை முடக்குகிறது, உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை பாதிக்கிறது. இது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது ஏனெனில் அதிகளவு LDL கொழுப்பு உங்கள் இதயத்தில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

கடல் உணவுகள்

கடல் உணவுகள்

கொழுப்பு அளவுகள் என்று வரும்போது கடல் உணவுகள் மோசமான பெயரை கொண்டுள்ளது. ஆனால் பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் அது உண்மையில்லை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. கடல் உணவுகளில் அதிகளவு கொழுப்பு இருந்தாலும் அவை முழுமையாக ஆரோக்கியமற்ற உணவு என்று கூறிவிட இயலாது. ஏனெனில் இதில் இருக்கும் நல்ல கொழுப்பு அமிலங்கள் இதய ஆரோக்கியத்திற்கு ஏற்றவை என்று ஆராய்ச்சிகள் சொல்கிறது. இந்த உணவுகளை மிதமான அளவில் சாப்பிடுவது உங்கள் இதயத்திற்கு பாதுகாப்பைத்தான் வழங்கும்.

உணவுகள்

உணவுகள்

நீங்கள் சாப்பிடும் உணவுகள் உங்கள் உடலில் இருக்கும் கொழுப்பின் அளவை கட்டுப்படுத்துவதில் மிகவும் முக்கியமான பங்கை வகிக்கிறது. நமது உடல் இந்த கொழுப்பு பொருட்களை தானாக உற்பத்தி செய்து கொள்ளும். நீங்கள் சாப்பிடும் அனைத்து உணவுகளுமே கொழுப்பு அளவை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ உதவும்.

ஊட்டச்சத்துக்கள்

ஊட்டச்சத்துக்கள்

கடல் உணவுகளில் அதிகளவு ஒமேகா 3 அமிலமும், பல அவசியமான ஊட்டச்சத்துக்களும் இருக்கிறது. ஒமேகா 3 அமிலம் என்பது உங்கள் இதய ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி உங்களுக்கு பல வழிகளில் உதவக்கூடியதாகும்.

 கொழுப்பு இல்லாத டயட்

கொழுப்பு இல்லாத டயட்

இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க கொழுப்பு குறைவான அளவில் இருக்க வேண்டியது அவசியமாகும். இந்த சூழ்நிலையில் நண்டு, சிப்பி, கிளிஞ்சல் போன்ற கடல் உணவுகளை தவிர்ப்பது நல்லது என்று கூறப்படுகிறது. ஆனால் ஆய்வுகளின் படி இந்த வகை கடல் உணவுகளில் அதிகளவு ஆன்டி ஆக்சிடண்ட்கள் இருப்பதுடன் அமினோ அமிலங்களும், ஒமேகா 3 அமிலமும் இருக்கிறது. இது உங்கள் LDL கொழுப்பு அளவை குறைத்து இதயத்தை பாதுகாக்கிறது.

கெட்ட கொழுப்பு இருக்கும் உணவுகள்

கெட்ட கொழுப்பு இருக்கும் உணவுகள்

உங்கள் உடலில் 300 மிகி வரை கொழுப்பு அளவுகள் இருக்கலாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது. கடலை உணவுகள் சாப்பிடுவது உங்கள் உடலுக்கு தேவையான சரியான கொழுப்பை சரியான அளவில் கொடுக்கும். அதேசமயம் முட்டை, சிக்கன், சீஸ், தானியங்கள், ஓட்ஸ், கொழுப்பு நிறைந்த தயிர் போன்ற உணவுகளை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இவற்றில் அதிகளவு LDL இருக்கும். எனவே மிதமான அளவில் கடல் உணவுகள் சாப்பிடுவது உங்களுக்கு இதயத்திற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Tuesday, May 14, 2019, 13:00 [IST]
Desktop Bottom Promotion