Latest Updates
-
இன்றைய ராசிபலன் 09 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கதவை தட்டப்போகுதாம் -
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
இரண்டு நாட்களுக்கு மேல் ஒரே சாக்ஸை அணிவது துர்நாற்றத்தை மட்டுமல்ல இந்த ஆபத்தையும் ஏற்படுத்தும்
ஷூ அணியும் அனைவரிடம் இருக்கும் ஒரு கெட்ட பழக்கம் என்னவென்றால் சாக்ஸை துவைக்காமல் பயன்படுத்துவது அல்லது ஒரே சாக்ஸை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது.
பள்ளிக்கு செல்பவர்கள் முதல் அலுவலகம் செல்பவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தும் ஒரு பொருளாக ஷூ மாறிவிட்டது. ஆண்கள் முதல் பெண்கள் வரை கிட்டதட்ட அனைவருமே இப்பொழுது ஷூ போட தொடங்கிவிட்டனர். ஷூ அணிய மிகமுக்கியமான ஒன்று சாக்ஸ் அணிவது. ஏனெனில் அதுதான் உங்களை கால்களை பாதுகாப்பதுடன் துர்நாற்றம் ஏற்படுவதில் இருந்தும் காப்பாற்றுகிறது.

ஆனால் ஷூ அணியும் அனைவரிடம் இருக்கும் ஒரு கெட்ட பழக்கம் என்னவென்றால் சாக்ஸை துவைக்காமல் பயன்படுத்துவது அல்லது ஒரே சாக்ஸை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது. இதனால் துர்நாற்றம் மட்டுமின்றி பல ஆரோக்கிய கேடுகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த பதிவில் அசுத்தமான சாக்ஸை பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்சினைகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

மோசமான துர்நாற்றம்
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் ஒரே சாக்ஸை துவைக்காமல் பயன்படுத்துவது மோசமான துர்நாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். ஏனெனில் சாக்சில் உள்ள துளைகள் மூலம் காற்று வெளியேறாமல் இயலாது, அது உங்கள் உடலில் இருந்து ஈரப்பதத்தை உறிஞ்சுவதால் நாள்முழுவதும் அணிந்திருக்கும்போது அதில் ஏற்படும் நாற்றம் அதிகரித்துக்கொண்டே செல்லும்.

அதிக வியர்வை
ஒரே சாக்ஸை தொடர்ந்து பயன்படுத்தும்போது அது துர்நாற்றம் மட்டுமின்றி உங்கள் கால்பகுதியில் அதிக வியர்வையையும் உண்டாக்கும். உங்கள் காலில் அதிக ஈரப்பதத்தையும், நீர்த்துளிகளையும் நீங்கள் காணலாம், இத்னால் துர்நாற்றத்தின் அளவுதான் அதிகரிக்கும். கால் மட்டுமின்றி இந்த வியர்வை உடல் முழுவதும் மோசமான வாசனையை ஏற்படுத்தும்.

கறைகள்
நீஙகள் ஓரே சாக்ஸை பயன்படுத்துபவராக இருந்தால் அது உங்கள் குளியலறையில் நீங்கள் விரும்பத்தகாத பல மோசமான கறைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இதனை சரிசெய்ய நீங்கள் அதிக சிரமப்பட வேண்டியிருக்கும். சுத்தமான இடத்தை விரும்புபவராக நீங்கள் இருந்தால் கண்டிப்பாக அசுத்தமான சாக்ஸையோ அல்லது ஒரே சாக்ஸையோ மீண்டும் மீண்டும் பயன்படுத்தாதீர்கள்.

சரும மாற்றம்
ஆண், பெண் இருவருக்குமே இந்த பிரச்சினை ஏற்படும். தொடர்ச்சியாக இப்படிப்பட்ட சாக்ஸை பயன்படுத்தும்போது அது உங்கள் கால் பகுதியில் உள்ள சருமத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும். அதற்கு காரணம் அதிகப்படியான ஈரப்பதம் ஆகும். இதனால் உங்கள் உடலுக்குள் பூஞ்சைகள் மற்றும் பாக்டீரியாக்களின் தாக்குதல் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். மேலும் இதனால் தடிப்புகள் கூட ஏற்படலாம்.

ஈஸ்ட் தொற்று
பொதுவாக பெண்களுக்கு மட்டும்தான் ஈஸ்ட் தொற்று ஏற்படும் என்ற எண்ணம் உள்ளது, ஆனால் உண்மையில் ஆண்களுக்கும் இந்த பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. சுத்தமாக இல்லாத இடங்கள் இரு பாலினத்திலும் ஈஸ்ட் தொற்று ஏற்பட சிறந்த இடங்கள் ஆகும். அவ்வாறு தாக்குதல் ஏற்படும் போது நீங்கள் நிச்சயம் ஆண்டிபையோட்டிக் மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரே சாக்ஸை துவைக்கமால் பயன்படுத்துவது உங்கள் உடலுக்குள் பாக்டீரியாக்கள் நுழைய நீங்களே அனுமதிப்பது போன்றதாகும்.

வலி மற்றும் சரும சிக்கல்கள்
ஆம் இதனால் உங்களுக்கு கொப்புளங்கள், சரும நிறம் மாறுதல் சிலசமயம் இரத்தக்கசிவு கூட ஏற்படலாம். எப்படி உங்கள் முகாசருமத்தை அழகாக பாதுகாக்கிறீர்களோ அதேபோல உடல் முழுவதும் உள்ள சருமத்தை பாதுகாக்க வேண்டியது அவசியம். கொப்புளங்கள் ஏற்பட்டால் அதன்பின் நீங்கள் சாக்ஸ் அணிவதே சிரமமானதாக மாறிவிடும். பின்னர் இதற்காக தனி மருந்துகள், எண்ணெய்கள் போன்றவற்றை உபயோகிக்க வேண்டிவரும்.



Click it and Unblock the Notifications