Latest Updates
-
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்...
உணவுப் பழக்கத்தை மாற்ற வேண்டிய நேரம் இது தான்!
நீங்கள் எடுத்துக் கொள்கிற உணவு உங்களுக்கு சேரவில்லை உடனடியாக உங்கள் உணவுப்பழக்கத்தை மாற்ற வேண்டும் என்பதை சில அறிகுறிகளை வைத்தே கண்டுபிடிக்கலாம் அவை என்னென்ன என்று பார்க்கலாம்
நம்முடைய ஆரோக்கியமான வாழ்விற்கு முக்கியப் பங்கு வகிப்பது உணவுப் பழக்கம் தான். நாம் சாப்பிடுகிற உணவு தான் நமக்கு பாதி மருந்தாக செயல்படுகிறது. அதனால் உணவின் சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அதிலிருக்கும் சத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் பல உடல் சார்ந்த பிரச்சனைகளிலிருந்து நாம் தப்பிக்கலாம்.
இன்றைக்கு உடல் எடை குறைக்க தவிர பல காரணங்களுக்காக புதுப்புது டயட்டுகளை பின்பற்றுகிறார்கள். டயட்டுகளை பின்பற்றுகிறவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று என்ன தெரியுமா? அந்த டயட் தங்களின் உடலுக்கு செட் ஆகுமா? என்பது தான். உங்களுக்கு தேவையான சத்துக்கள் என்ன, உங்களுடைய வாழ்க்கை சூழல் ஆகியவற்றை கணக்கிட்டு அதற்கேற்ப டயட் வடிவமைத்துக் கொள்ள வேண்டும்.
ஆனால் யாரும் இதைப் பற்றியெல்லாம் சிந்திப்பதில்லை இரண்டே வாரங்களில் உடல் எடை குறையும், இதைச் சாப்பிட்டால் நாள் பூராவும் எனர்ஜியாக இருப்பீர்கள், இதைச் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வராது, மாரடைப்பு ஏற்படாது என்று சொன்னால் உடனேயே அந்த உணவப் பட்டியலை பின்பற்ற ஆரம்பித்துவிடுவோம். அது நமக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி தொல்லை கொடுத்தாலும் உணவினால் தான் இப்படி ஏற்படுகிறது என்று பலரும் உணர்வதில்லை. நிலைமை மிக மோசமான பின்பு தான் நாம் மருத்துவமனைக்கே செல்கிறோம்.

இதனைத் தவிர்க்க வேண்டுமானால் இதைப் படித்திடுங்கள். இங்கே சில அறிகுறிகளை கொடுத்திருக்கிறோம். இந்த அறிகுறிகள் எல்லாம் உங்களுக்கு தெரிந்தால் நீங்கள் கண்டிப்பாக உங்களது உணவுப்பழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். ஏற்கனவே ஏதேனும் டயட் பின்பற்றிக் கொண்டிருந்தால் அதனை மாற்றிக் கொள்வது அவசியமாகும்.

மலச்சிக்கல் :
நீங்கள் எந்த உணவு வகையை எடுத்துக் கொண்டாலுமே உங்களுக்கு ஜீரணமாகி கழிவுகள் வெளியேற வேண்டும். ஜீரணமாவதில் பிரச்சனை, அல்லது கழிவுகள் வெளியேறுவதில் பிரச்சனை என்று சொன்னால் அந்த உணவு முறையை நீங்கள் பின்பற்றக்கூடாது.
வழக்கத்தை விட அதிகமானாலோ அல்லது குறைந்தாலோ பிரச்சனையை கவனிக்க வேண்டும்.

எனர்ஜி :
நீங்கள் சாப்பிடும் உணவு உங்களுக்கு எனர்ஜி கொடுக்கக்கூடியதாக இருக்க வேண்டும். அவை உங்களுடைய அன்றாட வேலைகளை சிதைப்பதாக அமைந்துவிடக்கூடாது. எல்லாருக்கும் அவசியம் தேவைப்படுகிற சத்து அதுவும் நாம் சுறுசுசுறுப்பாக இருக்க தேவைப்படுவது என்று சொன்னால் அது இரும்புச் சத்து தான்.
அவை நம் உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்திடும்.அதோடு இவை தான் ஆக்ஸிஜனையும் எடுத்துச் செல்கிறது.இதனால் உடலின் எல்லா பாகங்களுக்கும் ரத்தம் சீராக சென்று வரும். இதனால் நீங்கள் உற்சாகமாக உணர்வீர்கள் நீங்கள் சாப்பிடும் டயட் முறையினால் நீங்கள் தொடர்ந்து சோர்வாக உணர்ந்தால் கண்டிப்பாக டயட் முறையை மாற்றிட வேண்டும்.

மனச் சோர்வு :
பிற காரணங்களால் மட்டுமல்ல நம் உணவுப்பழக்கத்தில் ஏற்படுகிற மாற்றங்களாலும் நம் மனதை உற்சாகமாகவும் அல்லது சோர்வாகவும் மாற்ற முடியும். சமீபத்திய ஆராய்ச்சிகளின் படி, விட்டமின்ஸ்,மினரல்ஸ் , ஒமேகா 3,ஃபேட்டி ஆசிட் ஆகியவை நம்முடைய மன உணர்சிகளில் முக்கியப் பங்காற்றுகிறது.
இந்த சத்துக்கள் நம் உடலில் குறைந்தால் அவை மனதளவில் பெரும் மாற்றத்தை காண்பிக்கும். காரணமேயில்லாமல் திடீர் கோபம், எரிச்சல் ஆகியவை ஏற்பட்டால் சூழ்நிலைகளையும், சுற்றியிருக்கும் மனிதர்களை மட்டும் குறை கூறாமல் உங்களுடைய டயட் முறையும் மாற்றிப் பாருங்கள்.

பசி :
என்ன உணவு சாப்பிட்டாலும் எந்த நேரத்திலும் ஒரு விதமான டயர்டாக இருப்பது அல்லது ஏதேனும் சாப்பிட வேண்டும் என்று தோன்றுவது எல்லாம் உங்கள் உடலுக்கு தேவையான சத்துக்கள் இன்னமும் கிடைக்கவில்லை என்று அர்த்த்தமாகும்.
அதனால் தொடர்ந்து பசியெடுத்தால் பசிப்பதால் தானே சாப்பிடுகிறேன் என்று உங்களை நீங்களே சமாதானப்படுத்திக் கொள்ளாமல் உங்களுடைய உணவு முறையை, உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.

குறிப்பிட்ட உணவு :
ஆரோக்கியமான டயட் என்பது எல்லா வகை சத்துக்களுமே நம் உடலுக்கு சேர்ப்பதாக இருக்க வேண்டும். எதேதோ காரணங்களுக்காக ஒரு குறிப்பிட்ட வகை சத்து நிறைந்த உணவை அப்படியே தவிர்ப்பதும் நடக்கிறது.
இந்த உணவுகள் எடுத்துக் கொள்ளவில்லை என்றால் உங்களுக்கு இந்தந்த நன்மைகள் என்றும் பட்டியலிடுவார்கள் அதோடு அதன் இன்னொரு பக்கமும் இருக்கிறது என்பதை கச்சிதமாக நம்மிடமிருந்து மறைத்துவிடுகிறார்கள். உடல் நலப் பிரச்சனை இருந்து மருத்துவர் பரிந்துறைக்காமல் எந்த சத்தையும் ஒதுக்காதீர்கள். ஆரம்பத்தில் நல்ல மாற்றங்கள் தெரிந்தாலும் அவை பிற்காலத்தில் பெரும் தொல்லையையே கொடுக்கும்.

மறதி :
நினைவுத் திறனும் உணவுடன் சம்பந்தப்படுத்தி தான் பார்க்க வேண்டியிருக்கிறது. தேர்வு எழுதப்போகும் மாணவர்களுக்கு மட்டுமல்ல எல்லாருக்குமே நினைவுத் திறன் என்பது அவசியமாகும். எதையும் நிலையாக நினைவில் கொள்ள முடியவில்லை, சட்டென முடிவெடுக்க முடியவில்லை, சட்டென எல்லாம் மறந்து போகிறது என்றால் விளையாட்டாகவோ அல்லது அசட்டையாகவோ இருந்து விடாதீர்கள்.
முதலில் நீங்கள் பின்பற்றுகிற உணவுப் பழக்கத்தை சரி பார்த்திடுங்கள்.

காய்ச்சல் :
அடிக்கடி காய்ச்சல்,தலைவலி, வயிற்றுவலி என அடிக்கடி ஏற்படுகிறதா? அப்படியென்றால் உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கிறது என்று அர்த்தம். நார்மலான டெம்ப்பரேச்சரின் போதே உங்களுக்கு மட்டும் குளிர்வதும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கிறது என்பதையே காட்டுகிறது.
இதனால் உடனேயே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றில்லை ஏற்கனவே நீங்கள் என்ன உணவு சாப்பிடுகிறீர்கள் எதை தவிர்க்கிறீர்கள் என்பதைப் பொருத்து தான் உங்களுக்கான நோய் எதிர்ப்பு சக்தி அமைந்திருக்கும்.

குளிர் :
உடலில் ஏற்படுகிற மாற்றங்களின் ஆணி வேராய் இருப்பது சுரப்பிகள் தான். அவற்றில் முக்கியமானது தைராய்டு சுரப்பி. நம்முடைய உடலில் சீரான வெப்பநிலையை பராமரிக்க இந்த சுரப்பி மிகவும் உதவிடும்.
தைராய்டு சுரப்பி வேலை செய்வதில் பிரச்சனை ஏற்பட்டால் அதன் முதன்மையான அறிகுறிகளில் அதிக குளிர் என்பது தான் சொல்லப்படுகிறது. எப்போதும் குளிராக இருந்தால் உங்களது தைராய்டு சுரப்பி சீராக வேலை செய்கிறதா என்பதையும் நீங்கள் பார்க்க வேண்டும்.

சருமம் :
ஏற்கனவே பலமுறை ஆரோக்கியமான சருமத்திற்கு வெளியில் விதவிதமான க்ரீம்கள் தடுவுவது மட்டும் போதாது மாறாக ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். உடலில் விட்டமின் ஏ குறைந்தால் சருமத்தில் அதீத வறட்சி உண்டாகும்.
இதே போல ஒவ்வொரு சத்து குறைபாட்டிற்கும் சருமத்தில்,நகத்தில்,தலைமுடியில் அறிகுறிகளை காட்டும். தலைமுடிப் பிரச்சனையா அப்படியென்றால் எண்ணெயை மாற்று, ஷாம்புவை மாற்று என்று நாம் நகர்ந்து விடுவோம். ஆனால் உண்மையில் நீங்கள் சாப்பிடுகிற டயட் முறை தான் அதற்கு காரணம்

உதடு :
உதடு வரண்டு காணப்படுவது, உதட்டின் ஓரங்களில் எரிச்சல் உண்டாவது, உதட்டில் எரிச்சல், உதட்டில் தோல் பிரிந்து வருவது ஆகியவை சருமம் சார்ந்த பிரச்சனையாக எடுத்துக் கொள்ளாதீர்கள், உங்களுடைய உணவுப்பழக்கத்தை உடல் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை காட்டுவதற்கான ஓர் அறிகுறி தான் இது.
உங்கள் உடலுக்கு போதுமான அளவு விட்டமின் பி கிடைக்கவில்லை என்று அர்த்தம்.

உயரம் :
குறிப்பிட்ட காலங்களுக்கு பிறகு யாருமே உயரத்தில் கவனம் செலுத்துவதில்லை, அதோடு குறிப்பிட்ட வயதுக்கு மேல் உயரத்தின் வளர்ச்சி நின்று விடும் என்பதால் நாம் அதனை கண்காணிப்பதில்லை.
ஆனால் உங்களுடைய உணவுப்பழக்கம் காரணமாக உங்கள் உயரம் குறையவும் வாய்ப்பிருக்கிறது தெரியுமா? ஆனால் இதனை நாம் கண்டுணர்வதேயில்லை. கால்சியம் மற்றும் விட்டமின் டி குறைவான உணவு வகைகளை எடுத்துக் கொள்வது எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு பிரச்சனையை ஏற்படுத்தும்.

கேஸ் :
எப்போது வயிறு நிறைந்ததாக காணப்படுவது, அல்லது கேஸ் பிரச்சனையுடன் இருப்பதும் தவறானது தான். குறிப்பிட்ட உணவு சாப்பிட்டால் மட்டும் இப்படி ஏற்படுகிறது என்றால் அந்த உணவை தவிர்த்திடலாம். ஆனால் எப்போதுமே இருக்கிறதென்றால் நீங்கள் சாப்பிடுகிற உணவில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

தூக்கமின்மை :
பலரும் இந்த பிரச்சனையை சந்தித்திருப்போம். என்ன உணவு சாப்பிட்டாலும் எப்போதுமே சோர்வாகவே உணர்வோம் அல்லது தொடர்ந்து தூக்கம் வருவது போலவே இருக்கும். இதற்கு காரணம் இரவு சரியாக தூங்கவில்லை என்று நினைத்துவிடாதீர்கள்.
உங்களுடைய உணவுப்பழக்கம் சரியில்லை என்று அர்த்தம். அதோடு உங்களுடை எண்ண மாற்றங்களுக்கும் உணவு தான் காரணம் என்பதால் தொடர்ந்து ஆரோக்கியமான உணவு வகைகளை எடுத்துக் கொள்வது அவசியமாகிறது.



Click it and Unblock the Notifications











