Latest Updates
-
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்...
பேரீட்சை சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்பது உண்மையா?
பேரீட்சையை அளவுக்கு அதிகமாக தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் என்ன பிரச்சனை உருவாகும் என்பதை தெரிந்து கொள்ள இதைப் படித்திடுங்கள்
இது சத்து நிரம்பியது என்று சொன்னால் போதும் உடனேயே அதனையே மூன்று வேலை உணவாக்கி அதைத் தவிர வேறு கதியே இல்லை என்ற நிலைக்கு வந்து விடுவோம். என்ன தான் சத்துக்கள் நிறைந்ததாகவே இருந்தாலும் அளவுக்கு மீறினால் அதுவே நமக்கு தொல்லையாகவும் அமைந்திடும் என்பதை உணர வேண்டும்.
உணவு விஷயத்தில் நாம் எப்போதும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம் என்றே சொல்ல வேண்டும்.ஒரே பொருளை சத்துக்கள் நிரம்பியது என்று தொடர்ந்து உட்கொண்டால் உடலில் குறிப்பிட்டு ஒரு சத்து மட்டுமே தொடர்ந்து அதிகரிக்க ஆரம்பிக்க உடலின் சீரான இயக்கங்களுக்கு அனைத்து வகை சத்துக்களும் அவசியம் என்பதால் இவை நிச்சயமாக தீங்கினையே ஏற்படுத்தும்.
டெய்லி இதச் சாப்பிடுங்க நிறையச் சத்து என்று சொல்லி நம்மிடம் திணிக்கும் உணவுப் பொருட்களில் ஒன்று பேரீட்சை . இதில் விட்டமின்ஸ்,மினரல்ஸ்,ஆண்ட்டி ஆக்ஸிடண்ட், டயட்டரி ஃபைபர் உட்பட ஏராளமான சத்துக்கள் இருக்கிறது தான் ஆனால் அதற்காக அளவுக்கு மீறி தொடர்ந்து பேரீட்சையை எடுத்துக் கொண்டால் என்னென்ன பின்விளைவுகளை சந்திக்க வேண்டும் என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ரத்தச் சர்க்கரை அளவு :
சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது தீங்கையே ஏற்படுத்தும். சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொதுவாகவே ரத்தச் சர்க்கரை அளவு அதிகமாகவும் அதோடு கலோரிஃபிக் அளவு கூடுதலாகவும் இருக்கும். இந்நிலையில் அதிகப்படியான பேரீட்சை எடுத்துக் கொண்டால் அவை ரத்தச் சர்க்கரை அளவை இன்னும் அதிகப்படுத்தும்.
கால் கப் அளவுல்ல பேரீட்சையை சாப்பிடுவதால் உங்களுக்கு 24 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 105 கலோரி வரை கூடுதலாக கிடைக்கிறது.

கூடுதல் :
அதோடு பேரீட்சையில் இயற்கையாகவே குலுக்கோஸ்,ஃப்ருக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் ஆகிய சர்க்கரைப் பொருட்கள் அதிகம். இவற்றின் க்ளைசிமிக் இண்டெக்ஸ் 103 ஆகும். இது சாதரண குலுக்கோஸ் அளவினை விட அதிகம்.
இதனால் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், ப்ரீ டயாப்பட்டீஸ் பிரச்சனை இருப்பவர்கள் பேரீட்சை எடுத்துக் கொள்ளும் அளவை குறைத்துக் கொள்வது நல்லது.

பல் பிரச்சனை :
பேரீட்சையில் அதிகப்படியான ஃப்லுரைன் இருக்கிறது. பற்களை வலுவூட்டவும், பற்களில் உள்ள எனாமலை தக்கவைத்துக் கொள்ளவும், பற்களை பாதுகாக்கவும் இது பெரிதும் உதவிடுகிறது. இதை வைத்து பேரீட்சை பற்களுக்கு மிகவும் நல்லது என்கிறார்கள். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அதையே தொடர்ந்து எட்த்துக் கொள்ளும் போது என்ன நடக்கிறது தெரியுமா?

கேவிட்டீஸ் :
பேரீட்சையில் அதிகப்படியான சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் இருக்கிறது. இவை பல் சொத்தையாக்கவும் கேவிட்டீஸ் ஏற்படுத்தவும் ஓர் வாய்ப்பாக அமைந்திடும். இதனை தவிர்க்க பேரீட்சை சாப்பிட்டு முடித்ததும் சூடான தண்ணீரில் உப்பு கலந்து வாயை கொப்பளிக்க வேண்டும்.
இதனால் பற்களின் இடுக்குகளில் சிக்கியிருக்கும் பாக்டீரியா ஆகியவை வெளியேறும்.

உடல் எடை :
இதில் டையட்டரி ஃபைபர் அதிகம். அதனால் நீண்ட நேரம் பசியெடுக்காமல் வைத்திருக்க உதவிடும். அதோடு அதிகமாக சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தையும் தவிர்க்க உதவிடும். இதனால் பேரீட்சை உடல் எடையை குறைக்க பெரிதும் உதவும் என்று சொல்லப்பட்டது.
இதே நாம் அதிகமாக எடுக்கும் பட்சத்தில் இவை கலோரி அளவை அதிகரிக்கக்கூடியது. அதோடு இதில் சர்க்கரை அளவும் அதிகம் என்பதால் தொடர்ந்து அதிகளவில் எடுத்துக் கொள்வது உடல் எடையை அதிகரிக்க வைத்திடும்.

வயிற்றுப் போக்கு :
வயிற்றுப் போக்கு ஏற்பட்டவர்களுக்கு பேரீட்சை கொடுப்பது உடலில் இழந்த சத்துக்களை ஈடுகட்டுவதற்காக. ஆனால் இதையே அதிகளவு கொடுக்கும் பட்சத்தில் டீஹைட்ரேசன் ஏற்படுவதற்கு தோதாக அமைந்திடும்.
இதனால் வயிற்றுப் போக்கு ஏற்பட்டிருக்கும் சமயத்தில் பேரீட்சையை தவிர்ப்பது நல்லது.

பொட்டாசியம் :
பேரீட்சையில் அதிகப்படியான ப்ரோட்டீன்ஸ், விட்டமின்ஸ், மினரல்ஸ் என ஏராளமான சத்துக்கள் இருக்கின்றன. இவை அத்தனையும் உடலின் சீரான இயக்கங்களுக்கு தேவை தான். ஆனால் இதுவே அதிகரிக்கும் போது எதிர்வினைகளையே ஆற்றிடும். குறிப்பாக பேரீட்சையில் பொட்டாசியம் இருக்கிறது இவை நரம்புகளுக்கு, மெட்டபாலிசத்திற்கு எல்லாம் உற்ற துணையாய் இருக்கும்.
ஆனால் தொடர்ந்து நம் உடலில் பொட்டாசியம் அதிகரிக்கும் போது அதிகப்படியான சோர்வு,வாந்தி,மயக்கம்,மூச்சுப் பிரச்சனை, இதயத்துடிப்பு சீராக இல்லாமல் இருப்பது, உட்பட பல்வேறு உபாதைகளை ஏற்படுத்தும்.

வயிற்று வலி :
செரிமானத்திற்கு பேரீட்சை உற்ற துணையாக இருக்கிறது ஆனால் இவற்றை நாம் அதிகளவு எடுத்துக் கொள்ளும் போது செரிமானத்தில் தாமதம் ஏற்பட்டு அவை பிரச்சனையை இன்னும் தீவிரமாக்கும்.
இதனால் வயிற்று வலி இன்னும் அதிகாமாகுமே தவிர குறைந்திடாது.

கேஸ் :
பேரீட்சை சாப்பிட்ட அடுத்த நொடி தண்ணீரைக் குடிப்பது என்பது வயிற்றில் கேஸ் தொல்லையை அதிகரிக்கும். இதனால் பேரீட்சை சாப்பிட்டவுன் தண்ணீர் குடிப்பதையோ அல்லது வேறு பானங்கள் குடிப்பதையோ தவிர்த்திடுவது நல்லது.
சிலருக்கு இப்படிச் செய்வதினால் அதிகப்படியான இருமலை உருவாக்கும். பேரீட்சை சாப்பிடவுடன் தண்ணீர் தாகம் எடுக்கும் என்பதால் முதலில் தண்ணீரை குடித்து சில நிமிட இடைவேளிக்குப் பிறகு பேரீட்சையை சாப்பிடலாம்.

நுரையிரல் :
தொடர்ந்து அதிகப்படியாக பேரீட்சையை எடுத்துக் கொள்கிறவர்களுக்கு மார்பு பகுதியில் தொல்லைகள் ஏற்படும். இதற்கு காரணம் இதில் அதிகப்படியாக இருக்கிற கோர்ஸ் தான். ஒரு நாளில் தானாக சரியாகிப் போனால் பிரச்சனையில்லை ஒரு நாளையும் கடந்து நீடிக்கிறது. பேரீட்சை சாப்பிடும் போதெல்லாம் இந்த வலி ஏற்படுகிறது என்று சொன்னால் கண்டிப்பாக மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும்.

அலர்ஜி :
சத்துக்கள் நிரம்பிய பேரீட்சை உடல் நலத்திற்கு நல்லது என்று சொல்லிக் கொண்டாலும் அவை சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தக்கூடியது என்பதால் அலர்ஜி ஏதேனும் ஏற்பட்டால் பேரீட்சை எடுத்துக் கொள்ளும் அளவையும் சரிபார்ப்பது நல்லது.
சருமத்தில் மாற்றங்கள் உதட்டோரத்தில் புண் ஏற்படுவது,மூச்சுப் பிரச்சனை, தலைவலி,உடல் சோர்வு ஆகியவை ஏற்படும்.

வேக்ஸ் கோட்டிங் :
இன்றைக்கு எல்லாமே வியாபாரமயமாகிவிட்டது. சுத்தமானது என்று காட்ட வேண்டும் என்பதற்காகவும்,வாங்குபவர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காகவும் பேரீட்சையில் வேக்ஸ் கோட்டிங் செய்யப் படுகிறது. இது பளபளப்பாக பார்க்க ஃப்ரஷ்ஷாக தெரிந்திடும்.
இப்படி வேக்ஸ் கோட்டிங் செய்யப்பட்ட பேரீட்சை தொடர்ந்து எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் அவை உங்கள் உடல் நலனுக்கு தீங்கையே ஏற்படுத்தும்.

மலச்சிக்கல் :
பேரீட்சியில் இருக்கக்கூடிய டயட்டரி ஃபைபர் நம்முடைய செரிமான மண்டலத்தை சீராக வைத்திருக்க உதவிடும். இது நாம் சாப்பிடும் உணவை செரிக்க வைப்பதுடன் உடலின் கழிவுகளை வெளியேற்றவும் உதவிடும்.
மலச்சிக்கல் பிரச்சனை உங்களுக்கு ஏற்பட்டால் இரண்டு பேரீட்சைகளை சாப்பிடுங்கள்.

அதிகமானால்.... :
அதே நேரத்தில் தொடர்ந்து நீங்கள் பேரீட்சையை அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது இவை மலச்சிக்கலை தான் அதிகப்படுத்தும். ஏனென்றால் இவை நம் உடலில் நீர்சத்தை எல்லாம் உறிந்து கொள்ளும். இதனால் கழிவு வெளியேறுவதில் சிக்கல்கள் ஏப்றடும்.
ஃபைபர் அதிகமிருக்கும் உணவுபொருட்களை எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் நீங்கள் எடுத்துக் கொள்கிற தண்ணீரின் அளவையும் அதிகப்படுத்த வேண்டும்.

குழந்தைகள் :
என்ன தான் சத்துக்கள் நிரம்பியது என்றாலும் பேரீட்சையை ஒரு வயதுக்கு குறைவான அல்லது ஒரு வயது குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லதல்ல. ஏனென்றால் குழந்தைகளுக்கு ஜீரண மண்டலம் சரியாக வளர்ச்சி பெற்றிருக்காது.
அதோடு குழந்தைகளுக்கு கொடுக்கும் போது ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு பேரீட்சைகள் போதுமானது. அதிகரித்தால் குழந்தைகளுக்கு வயிற்று வலி உட்பட பல்வேறு உபாதைகள் ஏற்படும்.



Click it and Unblock the Notifications











