Just In
- 2 hrs ago
2019ஆம் ஆண்டு ட்விட்டரை தெறிக்கவிட்ட ஹேஷ்டேக்குள்… பிகிலுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?
- 5 hrs ago
தண்ணீரை இப்படி குடிப்பது உங்களின் ஆயுளை இருமடங்கு அதிகரிக்குமாம் தெரியுமா?
- 5 hrs ago
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்னும் சகாப்தம்: தெரிந்ததும்...தெரியாததும்…!
- 9 hrs ago
தலைசுற்ற வைக்கும் உலகின் சில விசித்திரமான பாரம்பரிய புத்தாண்டு கொண்டாட்டங்கள்... சிரிக்காதீங்க...!
Don't Miss
- Sports
யாருப்பா அது? யுவராஜ் சிங்கை அடுத்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட இளம் இந்திய கிரிக்கெட் வீரர்!
- Finance
சரிவில் தொழில் துறை உற்பத்தி..! தேங்கிக் கிடக்கும் பொருளாதாரம்..!
- News
உலகின் மிகப்பெரிய பணக்காரர்.. பிரிட்டன்காரர்.. டிஎன்ஏ சோதனை செய்து பார்த்தால் பூர்வீகம் தமிழகமாம்!
- Automobiles
மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களின் விலை அடுத்த ஆண்டு முதல் அதிகரிப்பு...
- Movies
"பேப்பர் பாய்" பூஜை போட்டாச்சு.. படப்பிடிப்பு ஆரம்பம்
- Education
TNPSC: தேர்தலுக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்!! விபரங்கள் உள்ளே..!
- Technology
2020 இலக்கு: வெளியாகும் விவோ அட்டகாச ஸ்மார்ட் போன்கள் பட்டியல்
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஆண்களின் விந்தணுவை அதிகரிக்க செய்யும் புதிய தொப்புள் கொடி முறை..!
இன்றைய உலகில் பல்வேறு மாற்றங்கள் எல்லா துறையிலும் வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக மருத்துவ துறையில் எண்ணற்ற மாற்றங்களும் வளர்ச்சிகளும் அதிகமாகி கொண்டே இருக்கிறது. நம் உடலில் உள்ள எல்லா வகையான குறைபாட்டிற்கு பல வித ஆராய்ச்சிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. குறிப்பாக ஆண்களின் மிக பெரிய பிரச்சினையாக கருதப்படுவது இந்த விந்தணு குறைபாடு தான்.
இதனை நினைத்து வருந்தும் ஆண்களுக்கு ஒரு வரப்பிரசாதமான செய்தி ஒன்று உள்ளது. அதாவது, அவர்களின் தொப்பில் கொடியில் இருந்து எடுக்கப்படும் ஸ்டெம் செல் மூலம் விந்தணு குறைபாடு, விறைப்பு தன்மை போன்ற ஆண்களின் பிரத்தியேக பிரச்சினைகளுக்கு முற்றிப்புள்ளி வைக்க முடியுமாம். இந்த பதிவில் தொப்பிள் கொடி எவ்வாறெல்லாம் பயன்படும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

விந்தணு குறைபாடு
பத்தில் 5 ஆண்கள் இந்த விந்தணு குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் சொல்கிறது. ஆண்களின் ஹார்மோனான டெஸ்டோஸ்டெரோன், உடலில் மிக குறைந்த அளவு சுரந்தால் விந்து உற்பத்தி தட்டுப்பட்டு, குறைபாடு ஏற்படும். இது ஆண்கள் பருவம் அடைந்த காலம் முதலே நடக்கும் ஒரு நிகழ்வாகும்.

ஹைபோகோணாடிசம்
ஆண்களின் டெஸ்டோஸ்டெரோன் ஹார்மோன் குறைபாடு அடைந்தால் அதனை, மருத்துவ துறையில் "ஹைபோகோணாடிசம்" என்பர். இது சற்றே மோசமான நிலையாக ஆண்களுக்கு கருதப்படுகிறது. பருவம் அடையும் காலத்தில் இந்த டெஸ்டோஸ்டெரோன் தான் ஆண்களை பருவம் அடைய செய்கிறது. இதன் அளவு குறைந்தால் ஆண்மை குறைபாடு ஏற்படும்.

மகத்துவம் பெற்ற தொப்புள் கொடி..!
நம் முன்னோர்கள் அந்த காலத்திலே தொப்புள் கொடியை குப்பையில் வீசி விடாமல் பத்திரப்படுத்தி தாயத்தில் வைத்திருந்தனர். இதனை குறிப்பிட்ட நபரின் உடல் நிலை சீர்கேடு அடையும் காலத்தில், அரைத்து அவர்களுக்கு தருவார்களாம். இது போன்ற சில முக்கிய வைத்திய முறைகளை நம் முன்னோர்கள் அப்போதே கையாண்டனர்.

இன்றைய மருத்துவம் எப்படி..?
பல ஆண்டுகளுக்கு முன்னர் நம் முன்னோர் பயன்படுத்திய அதே முறையை தான் இன்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து "ஸ்டெம் செல் தெரபி" என வழங்குகின்றனர். ஸ்டெம் செல் முறையானது, நம் உடலின் எல்லா வகையான நோய்களையும், குறைபாடுகளையும் சரி செய்ய வழி வகுக்கிறது. புற்றநோய் முதல் விந்தணு குறைபாடு வரை இது எல்லாவற்றிருக்கும் நிரந்தர தீர்வை தருகிறதாம்.
MOST READ: சிறுநீரக கற்களை கரைக்க கூடிய நம் முன்னோர்களின் அற்புத முறைகள் ..!

குழந்தையும் ஸ்டெம் செல்லும்..!
தொப்புள் கொடியை குழந்தை பிறந்தவுடனே அறுத்து எடுத்து கொண்டு, இதற்கென்றே பிரத்தியேகமாக வைக்கப்பட்டுள்ள "ஸ்டெம் செல் வங்கியில்" சேமித்து வைத்து கொள்வார்கள். அந்த குறிப்பிட்ட குழந்தை வளர்ந்து பெரியவனாக ஆகி பின்னர் ஏதேனும் உடற்கோளாறுகள் ஏற்பட்டால், இந்த ஸ்டெம் செல் மூலம் சரி செய்வர்.

சீன கண்டுபிடிப்பு..!
விந்தணு குறைபாட்டிற்கு ஸ்டெம் செல் உதவும் என்பதை சீனாவின் முதன்மையான பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இந்த ஆய்வில், நேரடியாகவே செல்களை மறு உற்பத்தி செய்து ஹார்மோன்களை சுரக்க செய்ய முடியும் என கூறினர். முக்கியமாக டெஸ்டோஸ்டெரோன் ஹார்மோனை சுரக்க செய்து உடலின் நிலைப்பாட்டை சீராக்குமாம்.

விறைப்பு தன்மை
ஆண்களின் பிறப்புறுப்பில் ரத்த ஓட்டம் சீராக இல்லையென்றால், அது விறைப்பு தன்மையை தரும். இதனால், கலவியில் ஆண்களால் ஈடுபட முடியாது. இது போன்ற பிரச்சினையே தம்பதிகளுக்கு இடையே உறவு விரிசலை ஏற்படுத்த கூடும். விறைப்பு தன்மையையும் குணப்படுத்த ஸ்டெம் செல் முறை இருக்கிறதாம்.

விறைப்பு தன்மை ஏற்பட காரணம்..?
ஆண்களுக்கு விறைப்பு தன்மை ஏற்பட ஒரு சில முக்கிய காரணிகள் உள்ளன. உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய்கள், சிறுநீரக நோய்கள் மற்றும் தொற்றுகள் மற்றும் பிறப்புறுப்பில் பாதிப்புகள்... இது போன்ற பல்வேறு சீர்கேடுகள் ஆண்களுக்கு ஏற்பட்டால் விறைப்பு தன்மை ஏற்பட கூடும்.
MOST READ: உடல் வலிமையிலிருந்து ஆண்மை அதிகரிப்பு வரை அனைத்தும் வழங்கும் ஆட்டுப்பால்

ஸ்டெம் செல்லும் விறைப்பு தன்மையும்..!
ஸ்டெம் செல்லை நேரடியாக பாதிக்கப்பட்டவரின் உடலில் செலுத்தினால் இந்த விறைப்பு தன்மை பாதிப்பை முற்றிலுமாக குணப்படுத்தி விடலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆண்கள் இந்த தெரபியை பெற்ற பிறகு உடலுறவில் முழுமையாக ஈடுபட முடியும்.

ஸ்டெம் செல் ஊழலா...!
இன்று பெருகி வரும் ஊழல்களில் இந்த ஸ்டெம் செல் ஊழலும் மிக முக்கியமானது. மருத்துவ துறையில் ஏற்கனவே பல்வேறு ஊழல்கள் நடைபெற்று கொண்டிருக்கிறது. அந்த வகையில், நாம் சேமித்து வைக்கும் இந்த ஸ்டெம் செல்லையும் பெரிய அளவில் வியாபாரமாக மாற்றுகின்றனர்.

ஸ்டெம் செல் எவ்வளவு..?
ஸ்டெம் செல் முறை மிகவும் பிரபலமான ஒரு முறையாக பார்க்கப்பட்டு வருகிறது. அதிலும் இந்த ஸ்டெம் செல்களை பற்றிய ஆய்வுகள் ஏராளமாக நடந்து கொண்டிருக்கின்றனர். இது ஒரு புறம் இருக்க இதனை பற்றிய விலை அதிகமாகி கொண்டே போகிறது. கிட்டத்தட்ட $5,000 முத்ல் $8,000 டாலர்கள் வரை இருக்கும் என சொல்கின்றனர்.

யவற்றிற்கெல்லாம் ஸ்டெம் செல்..?
இந்த ஸ்டெம் செல் முறையானது பல வகையான நோய்களுக்கு நிரந்தர தீர்வாக இருக்கிறது. அதாவது, மூளை காய்ச்சல் முதல் பிறப்புறுப்பு நோய்கள் வரை உடலின் முழு செயல்பாட்டையும் இது சீர் செய்கிறது. பிறந்து குழந்தைக்கு ஏதேனும் கோளாறுகள் ஏற்பட்டாலும் இந்த ஸ்டெம் செல் போதும். அதே போன்று வயது முதிர்ந்த ஒருவருக்கும் இந்த ஸ்டெம் செல் பெரிதும் உதவுகிறது.
இது போன்ற பயனுள்ள புதிய குறிப்புகளை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.