Latest Updates
-
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சௌ சௌ வாங்குனா இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் அஸ்தமனமாவதால் துரதிர்ஷ்டத்தால் துரத்தப்படப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஈவ்னிங் டைம்ல இந்த செட்டிநாடு உருளைக்கிழங்கு அடையை செஞ்சு கொடுங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும்
உடலுறவின் போது ஆண்களுக்கு வலி ஏற்பட காரணங்கள்
உறவில் ஈடுபடும்போது சில பிரச்சினைகளால் ஆண்களுக்கும் வலி ஏற்படும். இந்த வலி ஏற்பட பல காரணங்கள் உள்ளது. பாலுறவில் பிரச்சினை என்பது ஆண்களை உடலளவிலும், மனதளவிலும் பெரிதும் பாதிக்கும். இந்த பதிவில் ஆண்களுக
ஆண், பெண் இருவருக்குமே பாலியல் தொடர்பான ஆசைகள் இருக்கத்தான் செய்யும். ஆசைகள் எப்படி இருவருக்குமே இருக்கிறதோ அதேபோல அதுகுறித்த பிரச்சினைகளும் இருவருக்குமே இருக்கத்தான் செய்கிறது. அதில் முக்கியமானது உறவில் ஈடுபடும்போது வலி ஏற்படுவது. பொதுவான கருத்து என்னவெனில் உறவில் ஈடுபடும்போது பெண்களுக்குத்தான் அதிக வலி இருக்கும். இது தவறான ஒன்றாகும்.

ஏனெனில் உறவில் ஈடுபடும்போது சில பிரச்சினைகளால் ஆண்களுக்கும் வலி ஏற்படும். இந்த வலி ஏற்பட பல காரணங்கள் உள்ளது. பாலுறவில் பிரச்சினை என்பது ஆண்களை உடலளவிலும், மனதளவிலும் பெரிதும் பாதிக்கும். இந்த பதிவில் ஆண்களுக்கு உறவில் ஈடுபடும் போது வலி ஏற்படுவதற்கான காரணங்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.

பெரோனி நோய்
பெரோனி நோய் என்பது ஆண்குறியை வளைந்ததாக மாற்றக்கூடிய ஒன்றாகும். இது சிறுநீர் கழிக்கும் போது எந்த பிரச்சினையையும் ஏற்படுத்தாது, ஆனால் ஆணுறுப்பு விறைப்புத்தன்மை அடையும்போது இது பிரச்சினையை உண்டாக்கும். இந்த நோய் ஏற்பட ஆணுறுப்பில் அடி படுதல், மரபணு கோளாறு, வைட்டமின் ஈ குறைபாடு என பல காரணங்கள் உள்ளது. இது பெரும்பாலும் 40 முதல் 60 வயது வரை ஆண்களுக்கு மட்டுமே ஏற்படும்.

புரோஸ்டாட்டிஸ்
புரோஸ்டாட்டிஸ் என்பது ஆண்குறிக்குப் பின்னால் இருக்கும் புரோஸ்டேட் சுரப்பியின் வீக்கம் அல்லது தொற்று ஆகும். இந்த நோய் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், வலியை உருவாக்குவதுடன் உறவில் ஈடுப்படும்போது அதிக வலியை உண்டாக்குகிறது. இதனை ஆரம்ப கட்டத்திலேயே குணப்படுத்தா விட்டால் நாளடைவில் புரோஸ்டேட் புற்றுநோயாக மாறிவிடும்.

சிறுநீர் பாதை தொற்றுகள்
சிறுநீர் பாதை தொற்றுநோய்கள் உடலுக்குள் யூரித்ரா வழியாக கிருமிகள் உள்ளே நுழைவதால் ஏற்படுவது. இந்த கிருமிகள் புரோஸ்டாட்டிஸ் உருவாக காரணமாக இருப்பதோடு சிறுநீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.அதிக அளவு நீர் குடிப்பது உங்களை இதிலிருந்து சிறிது பாதுகாக்கலாம்.

ஈஸ்ட் தொற்று
ஈஸ்ட் தொற்று ஆண்குறியின் நுனிப்பகுதியில் அரிப்பு அல்லது எரிச்சலை ஏற்படுத்தலாம். ஈஸ்ட் தொற்று உள்ள ஆண்களுக்கு உடலுறவில் ஈடுபடுவது என்பது மிகவும் வலிமிகுந்ததாக இருக்கும்.

டெர்மாட்டிசிஸ்
இது ஆணுறுப்பை சுற்றியுள்ள தோலில் வீக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நோயாகும். ஆணுறுப்பில் உபயோகிக்கும் சில இரசாயனங்கள் மற்றும் சோப்புகள், சில சமயம் நீங்கள் உட்கொள்ளும் சில உணவுகள் கூட இதனை ஏற்படுத்தலாம். ஆணுறுப்பின் நுனி தோலை நீக்கியவர்கள் இந்த பிரச்சினைகளில் இருந்து தப்பித்து கொள்ள வாய்ப்புள்ளது.

ஹெர்பெஸ்
சில ஆண்களுக்கு மரபணு மூலமாக ஹெர்பெஸ் நோய் பரவக்கூடும். அதேசமயம் ஆணுறுப்பில் காயம் உள்ளவர்களும் வலிமிகுந்த உறவிற்கு ஆளாவார்கள். இதிலிருந்து தப்பிக்க எளிய வழி இது குணமாகும் வரை உறவில் ஈடுபடாமல் இருப்பதுதான். இந்த நோய் எளிதாக உங்கள் துணைக்கும் பரவக்கூடியதாகும்.

சொரியாசிஸ்
சொரியாசிஸ் நோய் தாக்கியவர்களுக்கு உடல் முழுவதும் பல இடங்களில் சிவப்பு நிற தடிப்புகள் ஏற்படும். குறிப்பாக ஆணுறுப்பில் இவை தோன்றினால் உங்கள் தாம்பத்ய வாழ்க்கையையே சிதைத்துவிடும். இந்த சிவப்பு தடிப்புகள் நீங்கள் ஒவ்வொரு முறை உறவில் ஈடுபடும்போதும் அதிக வழியை உண்டாக்கும்.

பிமோஸிஸ்
இது பெரும்பாலான ஆண்களுக்கு இருக்கும் ஒரு பிரச்சினையாகும். இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு ஆணுறுப்பை சுற்றியுள்ள தோல் முழுமையாக வெளியே வராது இதனால் அவர்களுக்கு கடுமையான வலி ஏற்படும்.

பாரபிமொஸிஸ்
இது மிகவும் அரிதான ஒரு நோயாகும். இது பிமோஸிஸ்க்கு எதிர்மறையான பாதிப்பை ஏற்படுத்தும். இந்த உள்ளவர்களுக்கு ஆணுறுப்பை சுற்றியுள்ள தோல் அதன் தலைப்பகுதியை விட்டு சாதாரண நிலைக்கு திரும்பாது.



Click it and Unblock the Notifications