TRENDING ON ONEINDIA
-
தொகுதி பங்கீடு.. திமுக-மதிமுக நடுவே இழுபறி.. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு முடிவு
-
5 கோடி ரூபாய் கார் மோதி பெண் பலி... விபத்தை ஏற்படுத்தியது யார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...
-
‘கூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை’.. சத்தமில்லாமல் பாய்பிரண்டுகளுக்கு பார்ட்டி வைக்கும் நடிகை!
-
எவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரர் அசால்டா சமாளிப்பாராம்
-
10 ஆயிரம் கோடியில் 173 கோடி காலி; தீயாக வேலை செய்யும் இஸ்ரோ! எதில்?
-
ரியல் ஹீரோஸுக்கு இவ்வளவு தான் சம்பளமா? 1983 உலகக்கோப்பை பயோபிக் திரைப்படத்தில் சம்பள பிரச்சனை!
-
தம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் பாகிஸ்தான ஒன்னும் பண்ண முடியாது..? ஏன்..? அரசியல் சொல்வதென்ன..?
-
பக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது
இந்த மாதம் மோசமான நோய்கள் வர கூடிய ராசிக்காரர் நீங்கள் தானா...? இதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்
பொதுவாக நமது உடல் நலம் மாதாமாதம் பல்வேறு வகையில் மாறுதல் அடையும். இது நமது உடல் ஆரோக்கியத்தின் அடிப்படையிலும், ராசியின் அடிப்படையிலும் ஏற்படுகிறது. இருக்கின்ற 12 ராசிக்காரர்களுக்கும் இந்த தாக்கம் பல வகையாக இருக்க கூடும்.
மேஷம் முதல் மீனம் வரை, ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒரு தனி சிறப்பும், பாதிப்பும் இருக்க தான் செய்கின்றன. அந்த வகையில் இந்த 2018 ஆம் ஆண்டின் இறுதி மாதமான டிசம்பர் மாதத்தில் எப்படிப்பட்ட நோய்கள் உங்களை தாக்கும், அதிலிருந்து எவ்வாறு காத்து கொள்ளலாம் என்பதையெல்லாம் இந்த பதிவில் தெரிந்து கொண்டு, முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவோம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே, இந்த மாதத்தில் உங்களின் உடல் நலம் எந்த வித பாதிப்பும் இன்றி சுமூகமாக இருக்க கூடும். உங்களுக்கென்று பெரிய பாதிப்பு உடல் நிலையில் ஏற்படாது. ஆனால், வேலை பளுவால் சற்று மன அழுத்திற்கு ஆளாவீர்கள். நீங்கள் அசைவ உணவுகளையும், காரசாரமான உணவுகளையும் தவிர்ப்பது நல்லது. அதற்கு மாறாக உலர் பழங்கள் சாப்பிடுவது உடலுக்கு நன்மை தரும்.
ரிஷபம்
உங்களுக்கு இந்த மாதத்தில் தோல் சார்ந்த நோய்கள், சுவாச பிரச்சினை போன்றவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதை விட பெரிய பாதிப்புகள் ஏதும் வராது. நீங்கள் கடல் உணவுகளை தவிர்ப்பது உகந்தது. மேலும், உங்கள் சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்து கொள்ள வேண்டும்.
மிதுனம்
இந்த மாதத்தில் உளவியல் சார்ந்த பிரச்சினைகள் உங்களுக்கு அதிகம் வர கூடும். மன அழுத்தம் அதிகரிக்க கூடும். எனவே, பாதாம் எண்ணெய் கொண்டு தலையை வாரத்திற்கு ஒரு முறை மசாஜ் செய்து வாருங்கள். மேலும், சாலட் வகை உணவுகளை தவிர்த்து, மீன், ப்ரோக்கோலி, பாதாம், பருப்பு வகைகளை அதிகம் சாப்பிடுங்கள்.
கடகம்
கடகம் ராசி நேயர்களே, இந்த மாதம் உங்கள் உடல் நலத்தை நீங்கள் நன்றாக பார்த்து கொள்ள வேண்டும். உங்களுக்கு நேரத்தை அதிகம் செலுத்த கூடிய மாதமாக இது இருக்க கூடும். வயிற்று சம்பந்தமான சிறிய பிரச்சினைகள் வந்து போகும். ஆதலால், தெருக்களில் விற்கப்படும் உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
MOST READ: 64 வயதிலும் கமல்ஹாசன் இவ்வளவு துடிப்பாக இருக்கறதுக்கு காரணம், கேரளம் தானாம்..!
சிம்மம்
மற்ற ராசிக்காரர்களை விட நிம்மதியாக இருக்க போகிறவர்கள் நீங்கள் தான். உங்களுக்கு பெரிய அளவில் எந்த உடல் நல கோளாறும் இந்த மாதம் வராது. சிறு தலைவலி எப்போதாவது ஏற்படலாம். நீங்கள் அதிக காரம் கொண்ட உணவுகள், கத்திரிக்காய் ஆகியவற்றை தவிர்க்கவும். மேலும், பால் சார்ந்த உணவுகளை சாப்பிடுவது சிறந்தது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே, அதிக தன்னம்பிக்கையுடன் இந்த மாதம் செயல்படுவீர்கள். உணவின் மீது இருக்கும் அதீத காதலால் கண்ணில் கண்டதையெல்லாம் சாப்பிட்டு விடாதீர்கள். சீரான அளவில் உணவை எடுத்து கொள்ள வேண்டும். இல்லையேல் பின் விளைவுகள் அதிகம். நீங்கள் உலர்ந்த முந்திரி சாப்பிடுவது உகந்தது. மேலும், தினமும் உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியமான சூழலை உங்களுக்கு ஏற்படுத்தும்.
துலாம்
நீங்கள் அதிகம் பயணம் செய்தால் உங்களுக்கு உடல் நல பிரச்சினைகள் ஏற்பட கூடும், மற்ற படி இந்த மாதத்தில் உங்களுக்கு பெரிய அளவில் ஆபத்துகள் இருக்காது. மது அருந்துதல், கடல் உணவுகள், அசைவ உணவுகள் ஆகியவற்றை அறவே இந்த மாதத்தில் தவிர்க்க வேண்டும். மாறாக புரதசத்து உணவுகள் எடுத்து கொள்ளலாம்.
விருச்சிகம்
எதிர்பாராத பயணத்தால் அதிக களைப்பு உங்களுக்கு ஏற்படும். இதனால் உடல் நிலை சிறிது பாதிப்படையும். எனவே, பயணத்தை முன் கூட்டியே திட்டம் போட்டு வைத்து கொண்டு செயல்பட வேண்டும். நீங்கள் அதிக பழங்கள், மோர், பசும்பால், ஆகியவற்றை உணவில் சேர்த்து கொள்வது நல்லது.
MOST READ: தினமும் 2 முட்டை சாப்பிட்டால், உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்னு தெரியுமா..?
தனுசு
தனுசு ராசிக்காரர்களே, எப்போதும் எதையும் சாந்தமாக கையாள கூடிய நீங்கள் இந்த மாதத்தில் அதிக கோபம் கொள்வீர்கள். இதனால் உங்களுக்கு மன அழுத்தம், உளவியல் சார்ந்த பிரச்சினைகள் ஏற்பட கூடும். எனவே, யோகா, தியானம் போன்றவற்றை மேற்கொள்வது உங்களுக்கு சிறந்த மாதமாக இந்த மாதத்தை மாற்றும்.
மகரம்
இந்த மாதம் உங்களுக்கு ஒரு சில மனநல பிரச்சினைகள் ஏற்பட கூடும். இதனால் தூக்கமின்மை, சோர்வு, மன குழப்பம் போன்றவை உங்களுக்கு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். மகர ராசிக்காரர்களே அசைவம், வறுத்த உணவுகள், மது ஆகியவற்றை ஒதுக்கி, ஆரோக்கியமான உணவை சாப்பிட்டால் நலம் பெறலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே, இந்த மாதம் உங்களுக்கு எந்தவித உடல் நல குறைபாடும் ஏற்படாது. ஆரோக்கியமான மாதமாக இந்த மாதம் அமையும். நீங்கள் அதிகம் நார்சத்து கொண்ட உணவை சேர்த்து கொண்டாலே நலம் நிச்சயம்.
மீனம்
உடல் நல கோளாறுகள் முன்பு இருந்திருந்தால் இந்த மாதம் நலம் பெற அதிக வாய்ப்புகள் உள்ளது. ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுகளான உலர் பழங்கள், தேன், கிரீன் டீ ஆகியவற்றை உங்களின் உணவில் சேர்த்து கொண்டால் இந்த மாதம் முழுவதும் ஆரோக்கியமாக இருக்கலாம்.
MOST READ: டிசம்பர் மாதத்திற்கு இருக்கும் இந்த சிறப்புகள் வேறு எந்த மாதத்திற்கும் கிடையாது தெரியுமா?