ஆண்களின் மார்பக வளர்ச்சிக்கும், வழுக்கைத்தலைக்கும் இந்த உணவு தான் காரணம்!

Posted By:
Subscribe to Boldsky
ஆண்களின் மார்பக வளர்ச்சிக்கும், வழுக்கைத்தலைக்கும் இந்த உணவு தான் காரணம்!- வீடியோ

வெயிட் கூடிட்டேயிருக்கு ... சுகர் இருக்கு என்று எதைச் சொன்னாலும் ரைஸ் சாப்பிடறத மோதோ நிறுத்துங்க என்று தான் அட்வைஸ் கிடைக்கிறது.

அரிசியை நிறுத்தி விட்டால் அதற்கு மாற்றால என்ன சாப்பிடுவது என்ற கேள்வி எழும் தானே அதற்கு அவர்களே அதற்கான மாற்றையும் சொல்வார்கள் சப்பாத்தி.... சப்பாத்தி சாப்பிடுங்க கோதுமை எவ்ளோ வேணாலும் எடுக்கலாம் அது உங்க உடம்புக்கு ரொம்ப நல்லது என்று பெரிய பாடமே எடுக்கப்படும்.

உண்மையில் கோதுமையில் சில நியூட்ரிசியன்கள் இருக்கிறது அதனை சாப்பிடுவதால் ரத்தத்தை சுத்தப்படுத்தும், செரிமானத்தை சீராக்கும், இதயத்திற்கு ஆரோக்கியமளிக்கும், வாய் துர்நாற்றத்தைப் போக்கும் என அடுக்குக் கொண்டே போகலாம்... எல்லாம் சரி அதற்காக எல்லா வேலையும் கோதுமை உணவே எடுத்துக் கொள்ள முடியுமா என்ன?

Surprising Things Happen When You Stop Consuming Wheat

சிலர் அதையும் நம்பி மூன்று வேலையும் கோதுமை உணவுகளைச் சாப்பிட ஆரம்பித்து விட்டார்கள்.இது தவறானது. இக்கட்டுரையை தொடர்ந்து படியுங்கள் உங்களுக்கு புரியவரும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

ஆரோக்கியமான டயட் என்றால் அதில் நிச்சயம் கோதுமை இடம்பெற்றிருக்க வேண்டும் என்று நமக்கு மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கிறது. இதிலிருந்து கொஞ்சம் வெளியே வாருங்கள்.

முழு கோதுமையில் அதிகப்படியாக சர்க்கரை இருக்கிறது.சர்க்கரை நோயாளிகள் இதனை தவிர்க்க வேண்டும், ஆனால் சுகர் இருக்கு என்று சொல்லி சொல்லியே இதைச் சாப்பிட்டுக் கொண்டிருப்போம்.

#2

#2

கோதுமையில் நார்ச்சத்து சர்க்கரையின் அளவை விட குறைவாகவே இருக்கிறது. இதைத் தொடர்ந்து சாப்பிடுவதால் சர்க்கரை நிறைந்த சோடா பானங்கள் குடித்தால் என்ன தீங்கு ஏற்படுமோ அந்த அளவிற்கு தீங்கு ஏற்படும்.

#3

#3

ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பது சர்க்கரை நோய் மட்டுமல்ல visceral fat அதிகரிக்கவும் காரணமாக அமைந்திடும். இதன் அளவு கூடினால் உள்ளுருப்புகளான லிவர்,கிட்னி,கணையம் ஆகியவற்றின் செயல்பாட்டில் தொய்வு ஏற்படும்.

அத்துடன் தொப்பை ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்திடும்.

#4

#4

இதனால் நம் உடலில் சுரக்கக்கூடிய ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகமாக காணப்படும்.இது பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படுத்துவதற்கும், ஆண்களின் மார்பக வளர்ச்சியை அதிகப்படுத்தவும் செய்திடும்.

#5

#5

நம் உடலின் மிகப்பெரிய உறுப்பு என்றால் சருமத்தைச் சொல்லலாம். நோய் எதிர்ப்பு சக்திக்கு முக்கிய தூண்டு கோளாக இருப்பது சருமம் தான். தொடர்ந்து நீங்கள் கோதுமையை சேர்த்து வந்தால் அது சருமத்தை பாதிக்கச் செய்திடும்.

சருமத்தின் எலாஸ்டிசிட்டி குறைந்து சருமத்தில் சுருக்கங்கள் விழ ஆரம்பிக்கும். எளிதில் வயதான தோற்றம் ஏற்படும்.

#6

#6

ஆண்களுக்கு ஏற்படும் வழுக்கைத் தலைக்கு பல்வேறு காரணங்கள் இருக்கிறது. அது பரம்பரையாக இருக்கலாம், அவர்கள் எடுத்துக் கொள்ளும் மருந்துகளின் விளைவாக இருக்கலாம், சரியாக பராமரிக்காமல் விட்டிருக்கலாம்...

இவற்றுடன் இன்னொரு முக்கிய காரணத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

உணவில் அதிகளவில் கோதுமை சேர்த்துக் கொள்வது.தலையில் முடி அதிகமாக உதிரக் காரணம்

#7

#7

நம் உடலில் ஏற்கனவே குறிப்பிட்ட அளவு அமிலம் இருக்கும், தொடர்ந்து கோதுமையை எடுத்துக் கொள்வதால் அதன் அளவு அதிகரித்திடும்.

இதனால் கால்சியம் கார்பனேட் மற்றும் கால்சியம் போஸ்பேட் அளவு குறைந்து எலும்புகள் தேய்மானம் ஆகும்.பிற்காலத்தில் மூட்டுவலி ஏற்படுவதற்கு கூட காரணமாக அமைந்திடும்.

#8

#8

சரி கோதுமை,கோதுமையை மூலப் பொருட்களாக கொண்டு தயாரிக்கப்படும் பொருட்களை சாப்பிடாமல் நிறுத்தி விட்டால் என்னென்ன நன்மகள் ஏற்படும் தெரியுமா?

இதன் மாற்றங்கள் உங்களுக்கு சின்ன சின்ன அறிகுறிகளைக் கொண்டே நீங்கள் உணரலாம்.

#9

#9

எடை குறைந்தது போன்ற உணர்வு ஏற்படும். அது ஏன் தெரியுமா? உங்கள் உடலில் இருக்கும் தேவையற்ற நீரை குறைக்க உதவுகிறது. கார்போஹைட்ரேட் அதிகமாக சேர்க்கப்படும் போது நம் உடலில் இருக்கக்கூடிய நீரின் அளவு அதிகரிக்கும்.

ஒரு கிராம் கார்போஹைட்ரேட் தன் எடையை விட மூன்று முதல் நான்கு மடங்கு தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்ளும் ஆற்றல் அதற்கு இருக்கிறது.

#10

#10

நம்முடைய எனர்ஜிக்கு முக்கிய சோர்ஸாக இருப்பது கார்போஹைட்ரேட். அது கோதுமையிலிருந்து நிறையக் கிடைத்திருக்கும். அதனை நீங்கள் நிறுத்தும் போது மூளைக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காமல் சோர்வு உண்டாகும். சில நேரங்களில், தூக்கமின்மை,குமட்டல்,கவனம் செலுத்த முடியாமை ஆகியவை ஏற்படும்.

#11

#11

உடலுக்கு பழக்கப்படுத்த கொஞ்ச நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அது ஒன்றும் இயந்திரம் அல்ல திடீரென்று யாரோ சொன்னதைக் கேட்டு கோதுமை உணவுகளை அள்ளிச் சாப்பிடுவதும் பின்னர் அதனை உடனடியாக முற்றிலுமாக நிறுத்துவதும் தவறானது.

சில கால அவகாசத்தை கொடுங்கள். கார்போஹைட்ரேட் உணவான கோதுமையை நிறுத்திவிட்டால், கார்போஹைட்ரேட் நம் உடலுக்கு கிடைக்க வேறு என்ன ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்று பாருங்கள். ஏனென்றால் நீங்கள் சுறுசுறுப்புடன் இருக்க கார்போஹைட்ரேட் அவசியம்.

#12

#12

இதில் கார்போஹைட்ரேட் தவிர இன்னபிற சத்துக்கள் அடங்கியிருக்கும். அவற்றில் ஒன்று தான் மேக்னீசியம். ஏற்கனவே நாம் மேக்னீசியம் குறைவாக எடுத்துக் கொள்வோம் என்பதால் அதற்கு மாற்றாக மேக்னீசியம் நிறைந்த உணவை எடுத்துக் கொள்ளுங்கள்.

#13

#13

இதில் நார்ச்சத்து அதிகம். இது உணவு செரிமானத்திற்கு பெரிதும் உதவி செய்கிறது. இதனை நீங்கள் நிறுத்தும் போது செரிமானக்கோளாறு ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு,

வயிற்று வலி,நெஞ்செரிச்சல்,மலச்சிக்கல் ஆகியவை ஏற்படும். கார்போஹைட்ரேட் உணவு இருக்கும் பிற உணவுகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளுங்கள். உடனடி எனர்ஜி வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த உணவுகள் பெஸ்ட் சாய்ஸ்.

#14

#14

வாழைப்பழத்தில், வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட், நார்ச்சத்து மற்றும் நல்ல கார்போஹைட்ரேட் நிறைவாக உள்ளன. இது உடனடி ஆற்றலைத் தரும். வாழை மட்டும் அல்ல... ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்களும் உடனடி ஆற்றலைத் தரும். 100 கிராம் வாழையில் தோராயமாக 90 கலோரிகள் உள்ளன. இது உடனடி அற்றல் கிடைக்கச் செய்யும்.

#15

#15

முட்டையில் மஞ்சள் கருவில் பி வைட்டமின்கள் நிறைவாக உள்ளன. இவை, உணவை விரைவாக ஆற்றலாக மாற்ற உதவுகின்றன. மேலும், இதில் வைட்டமின் டி சத்தும் உள்ளது.

கால்சியத்தை எலும்பு கிரகிக்க இது உதவுகிறது. முட்டையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி15, பி12, ஃபோலிக் அமிலம் உள்ளிட்ட சத்துக்களும் பாஸ்பரஸ், செலினியம் உள்ளிட்ட தாதுஉப்புகளும் நிறைவாக உள்ளன.

எனவே, உடற்பயிற்சிக்குப் பிறகு அதிக ஆற்றல் தேவைப்படும் நேரத்தில் இதை எடுத்துக்கொள்வது நல்லது.

#16

#16

நட்ஸில், நல்ல கொழுப்பு அதிகம் இருக்கிறது. மேலும், புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுஉப்புக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்து இருக்கின்றன. உடல் வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. அதிக ஆற்றலைக் கொடுக்கும். ரத்த செல்களின் உருவாக்கத்துக்கு உதவும். உடல் உறுப்புகளின் சீரான இயக்கத்துக்கு உதவும். வைட்டமின் இ நிறைந்திருப்பதால், செல்களைப் புத்துணர்வாக்கும்.

#17

#17

முளைகட்டிய தானியத்தில் புரதம் அதிகம். இதனுடன் காய்கறிகள் சேரும்போது, எலும்பை உறுதியாக்கும். கால்சியம் சற்று அதிகமாகவே கிடைக்கும். அனைத்துவிதமான ஊட்டச்சத்தும் நிறைந்த இவை, ஒரு முழுமையான உணவு.

முளைகட்டிய பயறில் வைட்டமின்கள், தாதுஉப்புகள், என்சைம்ஸ், ஆன்டிஆக்ஸிடன்ட் போன்ற சத்துகள் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்கிறது. தோல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. இதய நோய் ஏற்படாமல் தடுக்கிறது.

#18

#18

ஒரு ஸ்பூன் தேனைச் சாப்பிட்டுவந்தால் அரை மணி நேரத்தில் நரம்புகள் சுறுசுறுப்பாகும். உடலுக்குத் தேவையான கார்போஹைட்ரேடை அளித்து, நமக்குத் தேவையான எனர்ஜியைத் தருகிறது.

சிறந்த ஆன்டிஏஜிங் பொருளாகச் செய்ல்படுகிறது. தொண்டை உலர்வதைத் தடுக்கிறது. புற ஊதாக் கதிர்வீச்சில் இருந்து பாதுகாத்து, செல்களுக்குப் புத்துயிர் அளிக்கிறது. ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதனால், புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.

#19

#19

தானிய வகைகளில் ஆரோக்கியம் நிறைந்த அறிய உணவு, சிவப்பு அரிசி. சிவப்பு அரிசியில், மக்னீசியம், மாங்கனீஸ், செலினியம், துத்தநாகம் போன்ற தாதுஉப்புகள் அதிக அளவில் உள்ளன. வைட்டமின் இ சிவப்பு அரிசியில் உள்ளது.

இதில் நார்ச்சத்து நிறைந்து இருப்பதால், செரிமானம் சுலபமாகும். சிவப்பு அரிசியில் உள்ள காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்ஸ் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவைக் கட்டுக்குள்வைக்க உதவுகிறது.

இதில் உள்ள தாதுஉப்புகள் கூந்தல், பற்கள், நகங்கள், தசைகள், எலும்புகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகின்றன.

#20

#20

கிரீன் டீயில் ஃப்ளேவோனாய்டு, கேட்டச்சின் முதலான பாலிபீனால்கள் அதிகம் உள்ளன. இவை சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட்களாகச் செயல்பட்டு, உடலில் உள்ள செல்கள் சிதையாமல் பாதுகாக்கின்றன.

மேலும், கிரீன் டீயில் உள்ள சிறிதளவு காஃபின், மூளையில் உள்ள நியூரோ டிரான்ஸ்மிட்டர்களைத் தூண்டி, நரம்பு இயக்கங்களைப் புத்துணர்ச்சி அடையச் செய்கிறது. மூளை நன்றாக இயங்கும். சுறுசுறுப்பான உணர்வு கிடைக்கும்.

#21

#21

தயிரில் உள்ள புரதம் புதிய செல்கள் வளரவும் தசைகளை வலுவாக்கவும் செய்கிறது. இதில் உள்ள வைட்டமின் பி12, நோய் எதிர்ப்பு சக்தியைக் அதிகரிக்கிறது. புரோபயாடிக் நிறைந்த தயிரில் துத்தநாகம், வைட்டமின் இ, பாஸ்பரஸ் ஆகியவை இருக்கின்றன. எலும்பு மற்றும் பற்களுக்குத் தேவையான கால்சியம் கிடைக்க உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Surprising Things Happen When You Stop Consuming Wheat

Surprising Things Happen When You Stop Consuming Wheat
Story first published: Thursday, December 7, 2017, 14:30 [IST]