For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரெட் ஒயின், ஒயிட் ஒயின் இரண்டில் எது ஆரோக்கியமானது?

|

பெரும்பாலும் பலரும் ரெட் ஒயின் பருகும் பழக்கம் தான் கொண்டிருப்பார்கள். ஆனால், சிலர் ஒயிட் ஒயின் எலும்பிற்கு ஆரோக்கியம் அளிக்கும் என கூறி நடுவயதுக்காரர்களை பருகக் கூறுவதும் உண்டு. ஆகவே, இவற்றில் எது ஆரோக்கியமானது?

ஒரு கிளாஸ் (ஐந்து அவுன்ஸ்) ரெட் மற்றும் ஒயிட் ஒயினில் என்ன சத்துக்கள், எவ்வளவு கலோரிகள் உள்ளன. அவற்றால் உடல்நலத்துக்கு ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி தான் நாம் இங்கு காண இருக்கிறோம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கலோரிகள்

கலோரிகள்

ரெட்: இதில் 125 கலோரிகள் இருக்கின்றன.

ஒயிட்: இதில் 121 கலோரிகள் இருக்கின்றன.

கலோரிகள் கணக்கு வைத்து பார்க்கும் போது, கலோரிகள் குறைவாக இருக்கும் ஒயிட் தான் நல்லது

கார்பஸ்

கார்பஸ்

ரெட் மற்றும் ஒயிட் இரண்டிலும் சரிபங்கான 3.8 கிராம் அளவு கார்ப்ஸ் உள்ளது.

சர்க்கரை

சர்க்கரை

ரெட்: ரெட் ஒயினில் 0.9 கிராம் அளவு சர்க்கரை அளவு இருக்கிறது.

ஒயிட்: ஒயிட் ஒயினில் 1.4 கிராம் அளவு சர்க்கரை அளவு இருக்கிறது.

சர்க்கரை அளவு குறைவாக இருப்பது தான் நல்லது.

கால்சியம்

கால்சியம்

கால்சியம் மினரல் என்று பார்க்கும் போது ரெட் மற்றும் ஒயிட் இரண்டிலும் 1% அளவு தான் கால்சியம் இருக்கிறது.

இரும்புச்சத்து

இரும்புச்சத்து

ரெட்: இதில் 4% இரும்புச்சத்து இருக்கிறது.

ஒயிட்: இதில் வெறும் 1% இரும்புச்சத்து தான் இருக்கிறது.

இரும்புச்சத்து அதிகமாக இருப்பது தான் சிறந்தது.

மெக்னீசியம்

மெக்னீசியம்

ரெட்: இதில் 5% மெக்னீசியம் சத்து உள்ளது.

ஒயிட்: இதில் 4% மெக்னீசியம் சத்து உள்ளது.

சிறிதளவு தான் வித்தியாசம் எனிலும், ரெட் ஒயினில் தான் மெக்னீசியம் சத்து அதிகம்.

பொட்டாசியம்

பொட்டாசியம்

ரெட்: இதில் 5% பொட்டாசியம் சத்து உள்ளது.

ஒயிட்: இதில் 3% பொட்டாசியம் சத்து உள்ளது.

பொட்டாசியம் சத்தும் அதிகமாக இருப்பது தான் நல்லது.

கோலைன்

கோலைன்

ரெட்: இதில் 8.4 mcg அளவு கோலைன் உள்ளது.

ஒயிட்: இதில் 6.3 mcg அளவு கோலைன் உள்ளது.

கோலைன் அளவிலும் ரெட் ஒயின் தான் சிறந்து விளங்குகிறது.

எது ஆரோக்கியமானது?

எது ஆரோக்கியமானது?

ஒட்டுமொத்தமாக ஒயிட் ஒயினை விட ரெட் ஒயின் தான் சிறந்தது. இது, புற்றுநோய்யை எதிர்த்து போராடும் குணம் கொண்டுள்ளது என சமீபத்திய ஆய்விலும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இதயம் பலவீனம் அடையாமல் இருக்கவும் இது உதவுகிறது.

எச்சரிக்கை: எதுவாக இருப்பினும், அளவுக்கு அதிகமாக உட்கொள்வது உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பதை மறந்துவிட வேண்டாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Which Is Healthier Red Wine Or White Wine

Which Is Healthier Red Wine Or White Wine, read here in tamil.
Story first published: Friday, March 4, 2016, 17:04 [IST]
Desktop Bottom Promotion