உங்க மரபணு உங்களை பற்றி என்ன கூறுகிறது என தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

நமது ஆரோக்கியம் மற்றும் உடல் நலனை பற்றி நம் உடல் வெளிபடுத்தும் ஒருசில அறிகுறிகளை வைத்துக் கண்டறிந்துவிடலாம். முக்கியமாக, கண், நாக்கு, கைகள், கால்கள் போன்ற உடல் உறுப்புகளில் தென்படும் அறிகுறிகளை வைத்து நமது உடலில் எந்த உறுப்பில், எந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என கண்டறிய முடியும்.

உங்கள் இரத்த வகை உங்களைப் பற்றி என்ன சொல்கிறது என்று தெரியுமா?

ஆனால், இவற்றுக்கு எல்லாம் மூலக் காரணம் என்ன? நமது உடலில் இருக்கும் மரபணுக்கள் தான். இதன் மூலமாக தான் நமது உடல் எனும் அமைப்பு இயங்கி வருகிறது. நமது உடலில் எண்ணற்ற வகையிலான மரபணுக்கள் இருக்கின்றன. கண் பார்வை, உயரம், நினைவாற்றல் என ஆதி முதல் அந்தம் வரை ஒவ்வொரு அசைவிற்கும் ஒவ்வொரு வகையான மரபணு உடலில் இயங்கிக் கொண்டிருக்கிறது.

உங்க மணிக்கட்டு வரிகள் உங்களை பற்றி என்ன கூறுகிறது என தெரியுமா?

இந்த வகையில், உங்கள் மரபணு நீங்கள் எப்படிப்பட்டவர், நீங்கள் இப்படி இருக்க என்ன காரணம் என்று உங்களை பற்றி என்ன கூறுகிறது என இனிக் காணலாம்...

உங்கள் உடல் வகை வாதமா? பித்தமா? கபமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆல்கஹால்

ஆல்கஹால்

ஒரே அளவு ஆல்கஹாலை இரு வேறு நபர்கள் பருகும் போதிலும் கூட இருவருக்குள்ளும் ஏற்படும் தாக்கமானது வேறுபட்டு தான் இருக்கும். இதற்கு காரணம் ALDH2 மற்றும் ADH1B எனும் முக்கிய இரண்டு மரபணுக்கள் மற்றும் பல. இவை தான் ஆல்கஹால் தாக்கத்திற்கு உடல் எப்படி பதிலளிக்க வேண்டும் என தீர்மானம் செய்கிறது.

தசை செயல் திறன்

தசை செயல் திறன்

ஓர் தடகள வீரர் சிறந்து விளங்க கடுமையான பயிற்சி மற்றும் ஈடுபாடு மட்டுமின்றி ACTN3 எனும் மரபணுவின் உதவியும் தேவைப்படுகிறது.

காபி இல்லையேல் தலைவலி

காபி இல்லையேல் தலைவலி

சிலருக்கு காபி குடிக்கவில்லை என்றால் தலைவலி வந்துவிடும். இதற்கு காரணம் காஃபைன் தாக்கத்திற்கு எதிர் விளைவு உடலில் ஏற்படுத்தும் CYP1A2 எனும் மரபணு தான்.

இனிப்பு என்றால் ரொம்ப பிடிக்குமா?

இனிப்பு என்றால் ரொம்ப பிடிக்குமா?

சிலருக்கு இனிப்பு என்றால் அலாதி பிரியமாக இருக்கும். இதற்கு காரணம் FGF21 எனும் மரபணு. இது தான் நீங்கள் அதிகம் விரும்பும் சுவையை தேர்வு செய்கிறது.

லாக்டோஸ்

லாக்டோஸ்

சிலரால் ஒரு டம்ளர் பால் கூட முழுதாக பருக முடியாது. இதற்கு காரணம் LCT எனும் மரபணு.

உயரம்

உயரம்

நீங்கள் டிவியில் காணும் எந்த பானமும் உயரத்தை அதிகரிக்க உதவாது. ஊட்டச்சத்து காரணமாக 20% வரை உயரம் அதிகமாகலாம். மற்றபடி GDF5 எனும் மரபணு தான் உயரம் மற்றும் எலும்பு வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

நினைவாற்றல்

நினைவாற்றல்

சிலர் சென்ற வருடம் நடந்ததை பற்றி கூட நினைவில் வைத்திருப்பார்கள். சிலர் காலை உண்ட உணவை கூட மறந்துவிடுவார்கள். இதற்கு காரணம் KIBRA எனும் மரபணு தான். இது தான் உங்கள் நினைவாற்றல் செயல்திறனை கட்டுப்படுத்துகிறது.

டயட்

டயட்

சிலர் என்ன டயட் இருந்தாலும் உடல் எடை குறையாது. சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் எடை கூடவே கூடாது. இதற்கு காரணம் PPARG எனும் மரபணு. இது ஒரு விதமான அட்வான்டேஜ் என்று தான் கூற வேண்டும்.

கூந்தல்

கூந்தல்

சுருள்முடி, சில்க், நீட்டமான என பல ஹேர் ஸ்டைல் இயற்கையாக ஒவ்வொருவருக்கும் அமைந்துவிடுகிறது. இதற்கு காரணம் TCHH எனும் மரபணு.

கண் பார்வை

கண் பார்வை

கிட்ட பார்வை, தூர பார்வை என இரு வகையான பார்வை குறைபாடு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இதற்கு காரணம் SNP எனும் மரபணுவின் இன்டர் ஜெனிட்டிக்கான rs10034228 தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

What Your DNA Says About You

Do you know What Your DNA Says About You ? Read here in Tamil.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter