ஸ்டெராய்ட் இன்ஜெக்ஷன் எடுத்துக் கொள்வதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன?

Posted By:
Subscribe to Boldsky

இன்றைய இளைஞர்களுக்கு உடலை கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை நிறைய இருக்கிறது. இது மிகவும் நல்ல விஷயம் தான். ஆனால், உடலமைப்பை சீக்கிரமாக மெருகேற்ற வேண்டும் என்பதற்காக நிறைய பவுடர்கள், ஸ்டெராய்ட்கள் சிலர் எடுத்துக் கொள்கிறார்கள், இது தான் தவறு.

ஜிம் செல்பவர்கள் புரோட்டீன் பவுடரை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்!!!

உடலை கட்டமைக்க நல்ல இயற்கை உணவுகளும், சீரான பயிற்சியுமே போதுமானது. மேலும், இயற்கையாக உடலை கட்டமைக்க சிறிது காலம் எடுத்துக் கொள்ளும். இதற்காக ஸ்டெராய்ட் போன்றவற்றை பயன்படுத்துவதால் பல உடல்நலப் பக்கவிளைவுகளை நீங்கள் சந்திக்க நேரிடும் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

காண்டம் பயன்படுத்துவதனால் ஏற்படும் பக்க விளைவுகள் !!!

இனி, ஸ்டெராய்ட் இன்ஜெக்ஷன் எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றிக் காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அதிகமான முடிக் கொட்டுதல்

அதிகமான முடிக் கொட்டுதல்

ஸ்டெராய்ட் எடுத்துக் கொள்வதால் ஏற்படும் மிகப்பெரிய பக்கவிளைவு முடி உதிர்தல் தான். ஆண், பெண் இருபாலர் மத்தியிலும் இந்த பாதிப்பு அதிகமாக ஏற்படுகிறது. இதனால் ஒருசில வருடங்களிலேயே சொட்டை விழும் அபாயம் இருக்கிறது.

ஆண் உடலில் மாற்றங்கள்

ஆண் உடலில் மாற்றங்கள்

உட்சேர்க்கைக்குரிய ஸ்டெராய்ட் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. ஆண்கள் ஸ்டெராய்ட் எடுத்துக் கொள்வதால் மார்பு பெரிதாகவும், விறைப்பு வலி நிறைந்ததாகவும், விதைகள் சுருங்கும் அபாயமும் இருக்கின்றன.

ஆண் உடலில் மாற்றங்கள்

ஆண் உடலில் மாற்றங்கள்

மேலும், ஸ்டெராய்ட் எடுத்துக் கொள்வது விந்தணு எண்ணிக்கையைக் குறைக்கவும் செய்கிறது. இதனால் கருவளம் குறைபாடு ஏற்படும்.

பெண் உடலில் மாற்றங்கள்

பெண் உடலில் மாற்றங்கள்

பெண்கள் அதிகமாக ஸ்டெராய்ட் எடுத்துக் கொள்வதால் முகத்தில் முடி அதிகமாக வளரும், மார்பக அளவு குறையும், பெண்குறி விரிவடையும், குரலில் மாற்றங்கள், பருக்கள் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

உடலியல் பாதிப்புகள்

உடலியல் பாதிப்புகள்

தொடர்ச்சியாக ஸ்டெராய்ட் எடுத்துக் கொள்வது கல்லீரலை சேதப்படுத்தும், தீய கொலஸ்ட்ராலை அதிகரிக்கும், இதய நலனை சீர்கெடுக்கும் .

உளவியல் பாதிப்புகள்

உளவியல் பாதிப்புகள்

தொடர்ச்சியாக ஸ்டெராய்ட் எடுத்துக் கொள்வது மனநிலையை வெகுவாக பாதிக்கும். மனநலம் நிலையாக இருக்காது, மனோபாவம் மாறிக்கொண்டே இருக்கும், நிறைய கோபம் வரும். இவற்றால் மன அழுத்தம் அதிகரிக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.

கில்லர் நோய்களை பரப்பும்

கில்லர் நோய்களை பரப்பும்

ஹெபடைடிஸிஸ் மற்றும் எச்.ஐ.வி போன்ற உயிர்க்கொல்லி நோய்கள் இதன் மூலம் பரவ வாய்ப்புகள் இருப்பதாக பல அறிவியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஒரே இன்ஜெக்ஷன் பயன்படுத்தி ஸ்டெராய்ட் ஏற்றிக் கொள்வதால் இந்த அபாயம் நேரிடும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

கில்லர் நோய்களை பரப்பும்

கில்லர் நோய்களை பரப்பும்

மேலும், ஸ்டெராய்ட் இன்ஜெக்ஷன் எடுத்துக் கொள்வதால் புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அடிமையாக்கும்

அடிமையாக்கும்

ஸ்டெராய்ட் எடுத்துக் கொள்வதை நீங்கள் பழக்கம் ஆக்கிக் கொண்டால் அதை நிறுத்துவது கடினம். போதை பொருளை போல இது உங்களை அடிமையாக்கிவிடும். எனவே, ஸ்டெராய்ட் எடுத்துக் கொள்வதை முற்றிலும் தவிர்த்துவிடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Side Effects Of Injecting Steroids In The Body

Side Effects Of Injecting Steroids In The Body, read here in tamil.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter