For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்க பயன்படுத்தும் டூத்பேஸ்ட் பத்தி முழுமையா தெரிஞ்சிக்குங்க!

|

நாம் பொதுவாக சாம்பலும், வேப்பங்குச்சியை வைத்து பல் துலக்கி வந்தோம். "ச்சீ, ச்சீ இந்த பழம் புளிக்கும்..'' என கூறி. வெள்ளையாய் ஒரு பேஸ்ட்டும், பிளாஸ்டிக் குச்சியும் கையில் கொடுத்து பல் துலக்க பழக்கினர்.

கடந்த 20 - 25 வருடங்களாக தான் இதை நாம் பின்பற்றி வருகிறோம். இப்போது நாள்பட்ட நோய் உண்டாக்கும் முக்கிய கருவியாக இது வளர்ந்து நிற்கிறது. இதன் பக்கவிளைவுகளை கண்டறியவே இவ்வளவு ஆண்டுகள் ஆகியுள்ளன.

உங்கள் உடல்நலத்தில் ஏற்படும் பல கோளாறுகளுக்கு நீங்கள் தினமும் பயன்படுத்தும் டூத்பேஸ்ட்டும் ஓர் காரணம் தான்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தைராய்டு சிக்கல்கள்

தைராய்டு சிக்கல்கள்

சந்தையில் விற்கும் டூத்பேஸ்ட்களில் நச்சுக்களை அழிக்க ட்ரைக்லோசன் எனும் பொருள் பயன்படுத்தப்படுகிறது. இது பூச்சிக்கொல்லி ஆகும். சமீபத்திய ஆய்வில் இது தைராய்டு சிக்கல்கள், இதய கோளாறுகள் மற்றும் புற்றுநோய் உண்டாக காரணியாக இருக்கிறது என கண்டறியப்பட்டுள்ளது.

மூளை, சிறுநீரகம், இதய பிரச்சனை

மூளை, சிறுநீரகம், இதய பிரச்சனை

நாம் பயன்படுத்தும் வழக்கமான டூத்பேஸ்ட்களில் பாலியெத்திலின் க்ளைகால்ஸ் (polyethylene glycols) எனும் பொருள் சேர்க்கப்படுகிறது. இது பிளாஸ்டிக் ஆகும். இது உடலுக்கு நச்சு ஆகும். மேலும், இது மூளை, சிறுநீரகம், இதயத்தில் சேதத்தை ஏற்படுத்தக் கூடியது.

குழந்தைகளின் ஐ.கியூ

குழந்தைகளின் ஐ.கியூ

மேலும் டூத்பேஸ்ட்களில் பயன்படுத்தப்படும் ஃப்ளோரைடு எனும் பொருள் ஈறுகளை சேதப்படுத்துகிறது. மேலும் இது குழந்தைகளின் ஐ.கியூ குறைபாடு ஏற்படவும் காரணமாக இருக்கிறது. கர்ப்பிணி பெண்கள் இதை பயன்படுத்துவதால், எலும்பு பலவீனம், வயிறு பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் இருக்கிறது.

வாய்புண், ஹார்மோன் சமநிலையின்மை

வாய்புண், ஹார்மோன் சமநிலையின்மை

மேலும் டூத்பேஸ்ட்களில் பயன்படுத்தப்படும் சில மூலப் பொருட்கள் சோப்பை போல செயலாற்றுகிறது., சோடியம் லாரில் சல்பேட். இது வாய் புண்,சரும எரிச்சல் மற்றும் ஹார்மோன் சமநிலையின்மை ஏற்பட காரணமாக இருக்கிறது.

வாயு மற்றும் குமட்டல்

வாயு மற்றும் குமட்டல்

டூத்பேஸ்ட்டில் பயன்படுத்தப்படும் சார்பிட்டால் எனும் சர்க்கரை செரிமானத்தை கடினமாக்குகிறது. மேலும் இது வயிற்றுப்போக்கு, செரிமான பிரச்சனை, வாயுத்தொல்லை, குமட்டல் போன்றவை ஏற்பட காரணியாக இருக்கிறது.

நீரிழிவு

நீரிழிவு

டூத்பேஸ்ட்டில் அஸ்பார்டேம் எனும் செயற்கை இனிப்பூட்டிகள் சேர்க்கப்படுகிறது. இதை ஜீரோ கலோரி என்று கூறுகிறார்கள். ஆனால், இது தான் நீரிழிவு பிரச்சனை அதிகரிக்க காரணியாக இருக்கிறது.

கல்லீரல் புற்றுநோய்

கல்லீரல் புற்றுநோய்

மேலும் டூத்பேஸ்ட்ட்டில் "Diethanolamine" எனும் பொருளின் கலப்பும் இருக்கிறது. இது இரசாயனத்தின் சேர்கை கல்லீரல் புற்றுநோய் மற்றும் சிறுநீரக புற்றுநோய் ஏற்பட காரணியாக இருக்கிறது.

நாள்பட்ட பாதிப்பு

நாள்பட்ட பாதிப்பு

இவை யாவும் ஓரிரு நாட்களில் ஏற்படுவதில்லை. நீங்கள் பத்து, பதினைந்து வருடங்கள் தொடர்ந்து பயன்படுத்துவதால் ஏற்படும் நாள்பட்ட பாதிப்புகள் ஆகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How Toothpaste Makes You Sick

Be Aware: Your Toothpaste Can Make You Sick
Desktop Bottom Promotion