Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
உலகின் முதல் சூப்பர் காண்டம்: இந்திய-அமெரிக்க பேராசிரியர் கண்டுபிடிப்பு!
ஆணுறை என்பதே பால்வினை நோய் ஏற்படாமல் இருக்க கண்டுபிடிக்கப்பட்ட ஒரு உபகரணம் தான். ஆனால், தொழில்நுட்பத்தில் அப்டேட் வருவது போல தான் இதிலும் அவ்வப்போது சில புதிய நன்மை அல்லது சிறந்த முறை என்று ஆணுறைகள் சந்தையில் புதிய பெயர்களில் அறிமுகப்படுத்தி வருகிறார்கள்.
பால்வினை நோயை கண்டறியும் புதிய நிறம் மாறும் ஆணுறை - மாணவர்கள் கண்டுபிடிப்பு!!!
எத்தனை புதுமையாக இருப்பினும், தரம் உயர்வாக இருப்பினும் சில சமயங்களில் ஆணுறை பயன்படுத்தியும் கூட பால்வினை நோய் தொற்று ஏற்பட்டவர்கள் இருக்கிறார்கள். இதை தடுக்கவும், மேலும் பரவாமல் இருக்கவும் ஆய்வாளர்கள் நிறைய ஆய்வுகள் நடத்தி வருகிறார்கள். லேடக்ஸ் எனப்படும் ரப்பர் பாலிலிருந்து தயாரிக்கப்படும் ஆணுறைகளால் உலகில் 35 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஓர் புள்ளிவிவரம் கூறுகிறது.
காண்டம் பயன்படுத்துவதனால் ஏற்படும் பக்க விளைவுகள்!!
இதனால் பால்வினை தொற்று ஏற்படாமல் இருக்க ரப்பர் ஆணுறைகள் முழுமையான தீர்வினை தருவதில்லை என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இதற்கான ஓர் தீர்வாக தான் இப்போது இந்திய-அமெரிக்க பேராசிரியர் ஒருவர் புதிய சூப்பர் காண்டமை கண்டுபிடித்துள்ளார்.....

தேவையற்ற கருவுறுதலை தடுக்க
எச்.ஐ.வி மற்றும் பால்வினை தாக்கம் ஏற்படாமல் இருக்க, தேவையற்ற கருவுறுதலை தடுக்க, உடலுறவு வாழ்க்கையில் இன்பம் அதிகரிக்க ஓர் புதிய சூப்பர் ஆணுறையை இந்திய-அமெரிக்க பேராசிரியர் கண்டுபிடித்துள்ளார்.

மருத்துவர் மஹுவா சவுத்ரி
எலாஸ்டிக் பாலிமர் எனப்படும் ஹைட்ரோஜெல் பயன்படுத்தி ஓர் புதிய ஆணுறையை கண்டுபிடித்துள்ளார் பேராசிரியர் மருத்துவர் மஹுவா சவுத்ரி. இந்த ஆணுறை தாவர அடிப்படை கொண்ட ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் கலந்து, எச்.ஐ.வி போன்ற பால்வினை நோய் தாக்கம் ஏற்படாத வண்ணம் தயாரிக்கப்பட்டுள்ளது.

வைரஸ் பெருகாமல் தடுக்கிறது
இந்த புதிய சூப்பர் ஆணுறையில் கலப்பு செய்யப்பட்டுள்ள, தாவர அடிப்படை கொண்ட ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் வைரஸ் பெருகாமல் இருக்க செய்கிறது. இதானால், உடலில் வைரஸ் தாக்கம் தடை செய்யப்படுகிறது.

எச்.ஐ.வி தாக்கத்தை ஒழிக்க
தற்போதுள்ள ஆணுறைகள் சில சமயங்களில் எச்.ஐ.வி தாக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது. முற்றிலுமாக எச்.ஐ.வி தாக்கத்தை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இந்த சூப்பர் ஆணுறையை உருவாக்கினோம் என்று மருத்துவர் மஹுவா சவுத்ரி தெரிவித்துள்ளார்.

எச்.ஐ.வி தடுப்பு முயற்சி
எச்.ஐ.வி தடுப்பு முயற்சியில் இந்த புதிய சூப்பர் ஆணுறை ஓர் புரட்சியை ஏற்படுத்தும் எனவும், மேலும் இது தேவையற்ற கருவுறுதலை தடுக்கவும் பயனளிக்கும் எனவும் மஹுவா சவுத்ரி கூறியுள்ளார். இவர் அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் எ & எம் அறிவியல் மருத்துவ மையத்தில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

உடலுறவையும் மேலோங்க செய்கிறது
மேலும் ஹைட்ரோஜெல் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த புதிய சூப்பர் காண்டம் உடல் ரீதியான தூண்டுதல்களை ஊக்குவிக்கிறது, இதனால் உடலுறவு இன்பத்தையும் இது அதிகரிக்க செய்கிறது என ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications