பால்வினை நோய்களில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள கட்டாயம் பின்பற்ற வேண்டியவைகள்!!!

Posted By:
Subscribe to Boldsky

பால்வினை நோய்களில் இருந்து எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். பலருக்கும் அவர்களது அந்தரங்க உறுப்புகளில் ஏற்பட்டுள்ளது சரும கோளாறு அல்ல பால்வினை நோய் என்பது தெரியாமலேயே இருக்கிறது.

பாலுணர்ச்சியை அதிகரிக்க மேற்கொள்ளும் டயட்டினால் ஏற்படும் தாக்கங்கள்!!!

பால்வினை நோய் நீங்கள் நினைப்பது போல தவறான உடலுறவின் மூலம் மட்டும் ஏற்படுவது அல்ல. உங்களது அஜாக்கிரதையான உடலுறவு முறை மற்றும் செயல்கள், நீங்கள் உடுத்தும் உள்ளாடைகள் மற்றும் உங்கள் உறுப்புகளை சுத்தமாக வைத்துக் கொள்ளாமல் இருப்பது என பல காரணங்களினால் பால்வினை நோய்களின் தாக்கம் ஏற்படுகிறது.

ஆணுறுப்பு விறைக்கவில்லையா? அப்போ காரணம் இதுவா இருக்குமோ...?

நீங்கள் உடலுறவுக் கொள்ளும் இடத்தின் சுகாதாரத்தின் காரணமாகவும் பால்வினை ஏற்படுகிறது என்று பல தம்பதியர்கள் அறிவதில்லை. இதிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்வது மிகவும் எளிமையானது தான். சில விஷயங்களில் நீங்கள் கவனமாக இருந்தாலே பால்வினை நோய்களில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம். சரி இனி, பால்வினை நோய்களில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ன நீங்கள் பின்பற்ற வேண்டியவை பற்றி தெரிந்துக் கொள்ளலாம்...

உடலுறவு பற்றி தம்பதிகள் கேட்க தயங்கும் கேள்விகள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பருவ வயதில் உடலுறவு

பருவ வயதில் உடலுறவு

பருவ வயதில் உடலுறவு கொள்பவர்களுக்கு பால்வினை நோயின் தாக்கம் ஏற்பட நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. எனவே, பருவ வயதில் உடலுறவில் முற்பட்டு பால்வினை நோயின் தாக்கத்திற்கு ஆளாகாதீர்கள்.

உடலுறவு துணை

உடலுறவு துணை

அதிக நபர்களுடன் உடலுறவில் ஈடுப்படும் போது பால்வினை நோய் தொற்று ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

சுகாதாரம்

சுகாதாரம்

மற்றொருவர் உபயோகப்படுத்திய உள்ளாடை மற்றும் அவர்களது குளியல் துணிகளை பயன்படுத்துவதன் மூலமாகவும் பால்வினை நோய் தொற்றுகள் ஏற்படுகிறது மற்றும் உங்கள் அந்தரங்க பாகங்களை சுத்தமாக கழுவ வேண்டியது அவசியம்.

அந்நிய நபர்கள்

அந்நிய நபர்கள்

அந்நிய நபர்களுடன் உடலுறவில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. அதிலும் இளம் வயது நபர்கள் இதை தவிர்ப்பது மிகவும் அவசியம். இதன் காரணமாக தான் பெரும்பாலான இளைஞர்களுக்கு பால்வினை நோய் தொற்று ஏற்படுகிறது.

ஒருத்தனுக்கு ஒருத்தி

ஒருத்தனுக்கு ஒருத்தி

உங்களுக்கு பால்வினை நோய் ஏற்படாமல் இருக்க, நீங்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்ற முறையை பின்பற்றுவது தான் சிறந்த முறையாகும். மற்றும் இது உங்கள் உடல்நலத்திற்கும் நல்லது.

தடுப்பூசிகள்

தடுப்பூசிகள்

பால்வினை நோய்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க நிறைய தடுப்பூசிகள் சந்தையில் கிடைகின்றன. அதை முறையாக நீங்கள் உடலுறவில் ஈடுப்படுவதற்கு முன்பு பயன்படுத்துவதனால் பால்வினை தொற்று ஏற்படாமல் பாதுகாப்பாக இருக்கலாம்.

ஆணுறை/பெண்ணுறை

ஆணுறை/பெண்ணுறை

உடலுறவில் ஈடுப்படும் போது ஆணுறை அல்லது பெண்ணுறைகளை பயன்படுத்துவதனால் பால்வினை தொற்றுகள் ஏற்படாமல் தவிர்க்க முடியும்.

போதைப் பொருட்களை தவிர்த்தல்

போதைப் பொருட்களை தவிர்த்தல்

போதைப் பொருட்களை பயன்படுத்துவதன் மூலமாக பால்வினை தொற்றுகளின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புண்டு. எனவே, போதைப் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்துவிடுங்கள்.

ஆணுறுப்பின் நுனித்தோல் நீக்குதல்

ஆணுறுப்பின் நுனித்தோல் நீக்குதல்

ஓர் ஆராய்ச்சியில் ஆணுறுப்பின் நுனித்தோலை நீக்குதலின் மூலம் பால்வினை தொற்றுகளின் மூலம் ஏற்படும் தாக்கம் குறைகிறது என கண்டறியப்பட்டுள்ளது.

உடலியல் கல்வி

உடலியல் கல்வி

பள்ளிகளில் இருந்தே பால்வினை நோய்கள் மற்றும் உடலியல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலமாக பால்வினை நோய்கள் மற்றும் தகாத உடலுறவு மூலமாக ஏற்படும் நோய்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க வைக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How To Prevent From Sexually Transmitted Diseases

You people must know how to prevent from sexually transmitted disease (STDs). It is a serious health issue more than what you think.